மைத்ரேயி ராமகிருஷ்ணன்: 'தமிழ் ஈழப்பெண்' என கூறியதற்கு எதிர்ப்பை சந்திக்கும் நடிகை - என்ன சர்ச்சை?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️
மைத்ரேயி ராமகிருஷ்ணன்: 'தமிழ் ஈழப்பெண்' என கூறியதற்கு எதிர்ப்பை சந்திக்கும் நடிகை - என்ன சர்ச்சை?

பட மூலாதாரம், Getty Images "நான் தமிழ் பெண். என் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது. என் கலாசாரம் தமிழ். என் நாடு கனடா. என் வேர்கள் இலங்கையில் இருக்கின்றன." கனடா நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் கூறிய இந்த வார்த்தைகள் சமூக வலைதளங்கள் விவாதப்பொருளாகியுள்ளன. தன்னை ஒரு "தமிழ் ஈழப் பெண்" என அடையாளப்படுத்திக் கொண்டதற்காக இவர் தற்போது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். பட மூலாதாரம், Getty Images மைத்ரேயி ராமகிருஷ்ணன், தமிழ் பின்னணியைக் கொண்ட கனட நடிகை ஆவார். 2001ஆம் ஆண்டு கனடாவில் பிறந்த மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு வயது 24. இவர் 2020-ஆம் ஆண்டு வெளியான நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியான 'நெவர் ஹேவ் ஐ எவர்' (Never Have I Ever) தொடர் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்தத் தொடரில் தேவி விஸ்வகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த அந்தத் தொடர் 2020ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களில் ஒன்றாக மாறியது. அதேசமயத்தில் சமூக ஊடகங்களில் வெறுப்பு மற்றும் எதிர்மறையான கருத்துகளும் வரத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார். அப்போது, தான் பிரபலமான பிறகு முற்றிலும் எதிர்பாராத விஷயத்தை எதிர்கொண்டதாக, பிபிசி-க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும், "நான் எனது நடிப்பு வாழ்க்கையையும், ஊடகங்களுக்கு நேர்காணல்கள் வழங்குவது உள்ளிட்ட மற்ற பணிகளையும் தொடர்ந்து செய்யத் தயாராக இருந்தேன். ஆனால், நான் வெறுப்பையும் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று முற்றிலும் எதிர்பார்க்கவில்லை," என்று தெரிவித்திருந்தார். எதிர்மறையான விமர்சனங்கள் பற்றி பேசும்போது, "யாராவது உங்களுக்கு மோசமான குறுஞ்செய்தியையோ அல்லது கொலை மிரட்டலையையோ அனுப்பலாம். ஆனால் அது உண்மையில் உங்களுக்கே நேரும்போது, அதைப் பற்றி நீங்கள் முன்பு நினைத்திருந்ததைவிட முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்." எனக் கூறியிருப்பார். End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி அன்று நெட்ஃபிளிக்ஸில் 'பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்' (Best of the Best) திரைப்படம் வெளியானது. மைத்ரேயி ராமகிருஷ்ணன் இப்படத்தில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில், தன்னை ஈழத்தமிழர் என்றும், தன் நாடு கனடா என்றும் அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார். பல நேர்காணல்களிலும் அவர் இதுபற்றி பேசியுள்ளார். தி பிரிண்ட் வெளியிட்ட செய்தியின்படி, இது இந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாகவும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் மாயா ஒரு பாலிவுட்-ஃபியூஷன் (பாலிவுட் பாணிகளின் கலவை) நடனக் குழுவில் இணைகிறார். அதில் ஒரு காட்சியில் வரும் கதாபாத்திரம் மாயா கதாபாத்திரத்தை (மைத்ரேயி ராமகிருஷ்ணனை) இந்தியர் என நினைத்துவிடுகிறது. அதற்கு மாயா, "நான் தமிழர். என் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது" என்று அவரை திருத்திக் கூறுகிறார். முன்னதாக இந்த காட்சி, மாயா கதாபாத்திரம் தன்னை 'இலங்கையர்' என்று அறிமுகப்படுத்துவதாக அமைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் மைத்ரேயி அந்த வசனத்தை மாற்றுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images தனது அடையாளம் குறித்து மைத்ரேயி சமீபத்திய நேர்காணல்களிலும் பேசியுள்ளார். 'பிரவுன் கேர்ள் மேகஸின்' என்ற சமூக ஊடகப் பக்கத்துக்கு அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அந்த காட்சியைக் குறிப்பிட்டு அவர் பதிலளித்திருந்தார். அவர் கூறுகையில், "அந்த காட்சியில் நான் ஒரு இலங்கை தமிழர் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ஒரு தமிழ் ஈழப் பெண்ணாக எனது அடையாளத்தைப் பற்றி நான் உண்மையில் இப்படித்தான் உணர்கிறேன் என்று சொல்ல முடியாது. 'நான் தமிழ் பெண், என் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது' என்று மிகத் துல்லியமாகச் சொல்லக்கூடிய அந்த வார்த்தைகள் எனக்குக் கிடைத்தது" என விளக்கினார். மேலும், "தெற்காசியர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை மக்களுக்குக் காட்ட இது ஒரு சிறந்த வழி" என்றும் அவர் கூறியிருந்தார். அதோடு "என்னைப் போன்ற குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் ஈழப் புலம்பெயர்ந்தோருக்கும், 'தமிழ் இலங்கையர்' என்று கூறுவதற்கும், 'நான் தமிழ்; என் குடும்பத்தின் வேர்கள் இலங்கையில் இருந்து வந்தவை' என்று கூறுவதற்கும் இடையிலான வேறுபாடு நன்றாகத் தெரியும்." என்றும் கூறியிருந்தார். அதோடு கடந்த 16ஆம் தேதி அன்று ஹசன் மின்ஹாஜ் யூடியூப் பக்கத்தில் வெளியான நேர்காணலில், "நான் ஒரு தமிழ் ஈழப் பெண்ணாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். என் குடும்பத்தையும் எனது கலாசார வரலாற்றையும் நான் நேசிக்கிறேன், எனது இந்த பயணத்தின் மூலம் எனது அடையாளத்தை நான் இன்னும் அதிகமாக நேசிக்கக் கற்றுக் கொண்டுள்ளேன், ஏனெனில் அதுதான் நான் யார் என்பதை தெளிவாக்குகிறது." எனக் கூறியுள்ளார். பட மூலாதாரம், Getty Images மைத்ரேயி ராமகிருஷ்ணன் தன்னை "தமிழ் ஈழப் பெண்" என அடையாளப்படுத்திக் கொண்டதற்கு சமூக வலைதளங்களில் ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியது. அவரது இந்த வார்த்தை பயன்பாடு சிலரிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் இலங்கைத் தமிழ் அடையாளத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்வதாக சிலர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். இந்த எதிர்ப்பு அவர் நடித்துள்ள படத்தை குறிவைக்கும் அளவுக்குச் சென்றதாக தெரிகிறது. இலங்கைச் செய்தி ஊடகமான ஜாஃப்னா மானிட்டர் (Jaffna Monitor) வெளியிட்ட செய்தியின்படி, இலங்கையில் உள்ள சில தேசியவாத ஃபேஸ்புக் பக்கங்கள், அவரின் பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட் திரைப்படத்துக்கு ஒரு நட்சத்திர மதிப்பீடு மட்டுமே வழங்குமாறு தங்களின் பின்தொடர்பாளர்களிடம் (followers) கேட்டுக்கொண்டுள்ளன. மறுபுறம் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் பகிரப்பட்டு வருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. அதே நேரத்தில் மைத்ரேயிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும், மாயா என்ற கதாபாத்திரத்தை தெற்கு ஆசியா என்று மட்டும் குறிப்பிடப்படாமல், தமிழ் என்று அடையாளப்படுத்தப்படுவதையும் சிலர் சமூக வலைதளங்களில் வரவேற்றுள்ளனர். மைத்ரேயி தன்னை இவ்வாறு அடையாளப்படுத்துவது புதிதானது அல்ல. 'நெவர் ஹேவ் ஐ எவர்' தொடரில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்ட சமயத்திலேயே தன்னை தமிழ் கனடியர் என்று குறிப்பிடுமாறு கேட்டதாக அவர் கூறியிருந்தார். அப்போது, "எனது அடையாளம் இலங்கையர் என்பதல்ல. அது எனது நாடு அல்ல. எனது நாடு கனடா. ஆனால் எனது கலாசாரம் நிச்சயமாக தமிழ்" என்று அவர் கூறியிருந்தார். இலங்கை தமிழர் என்பதற்கும் ஈழத் தமிழர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை எழுத்தாளர் மேழிக்குமரன் பிபிசி தமிழிடம் விளக்கினார். அவர் கூறுகையில், "இலங்கைக்கு ஈழம் என்று பெயர் உள்ளது. ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலத்தில், இடதுசாரி அமைப்புகள் தங்களின் தாயகத்தை ஈழம் என்று குறிப்பிட்டனர். தமிழ் தேசியம் தொடர்பான நபர்கள் தமிழ் ஈழம் எனக் குறிப்பிட்டனர். இதில் பெரும்பாலும் வித்தியாசம் ஏதும் இல்லை." என்றார். அதோடு, "'ஈழம்' அல்லது 'தமிழ்' என்பது தமிழர்களின் வடகிழக்குத் தாயகத்தைக் குறிக்கிறது. அந்தப் பகுதியைத் தாயகப் பிரதேசம் என்று சொல்வார்கள். அதற்காகத்தான் அப்போது போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் இடதுசாரி இயக்கங்கள்தான் அதை 'ஈழம்' என்று சொல்லியது. அது அனைவருக்கும் பொதுவானது என்றும் கூறியது. தமிழ் தேசியத்தை மட்டும் முன்னிறுத்திப் போராடிய இயக்கங்கள் 'தமிழீழம்' என்ற சொல்லைத் தங்களுடைய இயக்கப் பெயர்களிலும் பயன்படுத்தின. அதேபோல, இடதுசாரி இயக்கங்களும் 'ஈழம்' என்ற சொல்லைத் தங்களுடைய இயக்கப் பெயர்களில் பயன்படுத்தின." என விளக்கினார். மேலும் பேசிய அவர் உதாரணத்தையும் குறிப்பிட்டார். "ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈழப் புரட்சிகர அமைப்பு (EROS) போன்றவை 'ஈழம்' என்ற சொல்லைப் பயன்படுத்தின. அதேபோல், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) போன்ற இயக்கங்கள் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன்படுத்தின." எனக் கூறிய அவர், "ஒருவகையில் பார்த்தால், அனைத்தும் ஒன்றுதான். ஆனால், ஒவ்வொரு இயக்கமும் தங்களுடைய கொள்கைக்கும் நோக்கத்துக்கும் ஏற்றவாறு அந்தச் சொல்லை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொண்டன." என்று மேழிக்குமரன் விளக்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை