பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக போடப்பட்ட வழக்கு பெரும் சர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடந்த பல ஆண்டுகளாக இதுபோன்று சிறுமிகளை பாலியவன்கொடுமை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி என்ற பெண்ணும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ஜெம் வீரமணியின் உதவியாளர் கணேசன் என இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் புகார் அளித்த போது முறையாக விசாரணை நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி எந்த தகவலையும் கண்டறிய முடியவில்லை என நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை அளித்த விசாரணை அதிகாரிகளான விபசார தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளராக இருந்த யாஸ்மின், ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கண்ணன், அருண் ஆகியோர் மீது நடவடிக்கை பாய்ந்தது. மேலும் அருண், யாஷ்மின் ஆகியோர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் பல பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் 4 பேர் கொண்ட SIT என்கிற சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். GOLD RATE | தங்கம் விலை சற்று உயர்வு – இன்றைய நிலவரம் என்ன? “எதிர்க்கட்சிகள் தேர்தல்களில் பங்கேற்பதை நிறுத்த வேண்டும்” – அபிஜித் தீப்கே “தலைமைத் தேர்தல் ஆணையர் அல்ல! அமித் ஷாவின் Agent” – மாணிக்கம் தாகூர் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – மு.க.ஸ்டாலின் Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தது தமிழக அரசு!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk