படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையத்திருந்தாலும், எங்கேயும் எப்போதும் பாடலுக்கு யோகி பி, படிச்சி பார்த்தேன் ஏறவில்லை என்ற பாடலுக்கு தினாவும் இசையமைத்திருந்தனர். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான முதல் படமான பொல்லாதவன் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ராப் வகையில் அமைந்த பாடலை உருவாக்க 15 நாட்கள் ஆனதாக கவிஞர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சில படங்களே இயக்கி இருந்தாலும், தற்போது முன்னணி இயக்குனர் வரிசையில் முதலில் இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய முதல் படம் பொல்லாதவன். கடந்த 2007-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தனுஷ், ரம்யா, சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி, கிஷோர், பானுப்பிரியா, முரளி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ரஜினிகாந்த் படத்தின் டைட்டில் என்ற அடையாளத்துடன் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, அதேபோல் பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தின் ஒரு பாடலை எழுத 15 நாட்கள் ஆனதாக கவிஞர் யுகபாரதி கூறியுள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையத்திருந்தாலும், எங்கேயும் எப்போதும் பாடலுக்கு யோகி பி, படிச்சி பார்த்தேன் ஏறவில்லை என்ற பாடலுக்கு தினாவும் இசையமைத்திருந்தனர். இந்நிலையில், யோகி பி இசையமைத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுனிதா சாரதி ஆகியோர் இணைந்து பாடிய எங்கேயும் எப்போதும் பாடல், ராப் வகையில் அமைந்திருக்கும். இந்த பாடலை எழுதியவர் யுகபாரதி. கண்ணதாசன் எழுதிய சில வரிகளும் இந்த பாடலில் இடம் பெற்றிருக்கும். அதேபோல், பாடலில் வரும் ராப் வரிகளை யோகி பி எழுதியிருப்பார். ராப் வரிகளுக்கு அவர் இசையமைக்கும்போது, யுகபாரதி அதற்கான வரிகளை அமைத்து கொடுத்துள்ளார். A post shared by Tamilnadu Now (@thetamilnadunow) தமிழ் தெரியாத யோகி பி இந்த பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதி இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலை உருவாக்க 15 நாட்கள் ஆனதாக கூறியுள்ள கவிஞர் யுகபாரதி, இந்த பாடலுக்கான நாங்கள் இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டு இருக்கும்போது இதை பார்த்த வெற்றிமாறன், இது சூப்பராக இருக்கிறதே என்று சொல்லி படத்தில் அடிப்பயே வைக்க சொன்னார். இதேபோல் ஒரு முழுநீள பாடலை பண்ண வேண்டும் என்று முடிவு செய்து தான் ஆடுகளம் படத்தில் பாடலை அமைத்தோம் என்று கூறியுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. I’m ELAYARAJA D, a seasoned media professional with over 9 years of experience in digital journalism. Currently Working as a Senior Sub-Editor at The Indian Express (Tamil) since Dec 2020, I specialize in reporting on Entertainment, Sports, and Tamilnadu news. My Media journey began in 2015 as a Playout Operator and Video Editor In JM Entertainment Network (Local TV Channel) in Trichy Upto 2017. Then spent Three years as a Sub Editor In Dineseithigai Online Media (Malayalam Express Group) Upto Dec 2020 and have extensive experience Sports reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from Periyar EVR College, Trichirapalli and a Master’s in Visual Communication from Thiru.Vi.Ka Arts College Thiruvarur. Contact: d.elayaraja@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தனுஷ் - வெற்றிமாறன் முதல் படம்; இந்த ராப் பாடல் எழுத 15 நாட்கள் ஆச்சு: காரணம் சொன்ன கவிஞர் யுகபாரதி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk