தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் போக்குவரத்தை எளிதாக்க, பாக்கம் கிராமத்திலிருந்து பரனூர் வரை 15 கி.மீ தூரத்திற்கு புதிய விரைவுச் சாலையும் திட்டமிடப்பட்டுள்ளது. 30 வருசத்துக்கு டிராஃபிக் டென்ஷனே இல்ல... சென்னைக்கு வருது வேற மாதிரி ரோடு! (Image: AI) சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மஹிந்திரா சிட்டி முதல் கிளாம்பாக்கம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய உயர்மட்டச் சாலை அமைக்கப்படவுள்ளது. எதிர்கால மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் அடுத்த 30 ஆண்டுகளுக்கான வாகனப் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு இந்த பிரம்மாண்டத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தி டைம்ஸ் ஆஃப் நாளிதழில் வெளியான செய்தியின்படி தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI) முதலில் ஆறு வழிச் சாலையாக இந்த உயர்மட்டச் சாலையை அமைக்கும். இதன் மேல் பகுதியில் எதிர்காலத்தில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால மெட்ரோ திட்டத்திற்காகத் தேவையான மத்திய தூண்கள், பியர்கள் மற்றும் பியர் கேப்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையே முன்கூட்டியே அமைக்கும். அதன்பிறகு மெட்ரோ நிறுவனம் கர்டர்கள், தண்டவாளங்கள் மற்றும் மின்மயமாக்கல் பணிகளை மேற்கொள்ளும். இதனால் சாலைப் பணிகள் தனித்தனியாக மீண்டும் மீண்டும் நடந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். சென்னையின் நுழைவுப் பகுதியில் அதிகரித்து வரும் வாகன நெரிசலைச் சமாளிக்கும் வகையில், அடுத்த 30 ஆண்டுகளுக்கான போக்குவரத்துத் தேவைகளை மையமாகக் கொண்டு இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட சாலையில் சுங்கச்சாவடியும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு 15 கி.மீ. விரைவுச்சாலை இதனுடன், பாக்கம் கிராமம் முதல் பரனூர் வரை சுமார் 15 கி.மீ. நீளத்துக்கு புதிய பசுமை விரைவுச் சாலையும் (Greenfield Expressway) அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த சாலை காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலை சந்திப்புடன் இணைக்கப்படும். மேலும், உத்திரமேரூர் வழியாகச் சென்று பாலாறு ஆற்றைக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னைக்கு தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து வரும் போக்குவரத்துக்கு கூடுதல் இணைப்பை வழங்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு - திண்டிவனம் சாலை 10 வழியாகுமா? இதற்கிடையில், செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான சுமார் 68 கி.மீ. சாலையை 10 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. பரனூருக்குப் பிறகு உள்ள சில குன்றுப் பகுதிகள் காரணமாக, இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியுள்ளது. அந்த அனுமதிக்காகத் திட்டம் காத்திருக்கிறது. இந்த ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் சென்னை நகருக்குள் வாகனப் போக்குவரத்தை மிக விரைவாகவும், தடையின்றியும் மேற்கொள்ள பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
சென்னை உயர்மட்ட சாலைக்கு மேலே மெட்ரோ ரயில் பாதையா? மகேந்திரா சிட்டி - கிளாம்பாக்கம் 23 கி.மீ. திட்டத்தில் புதிய ஏற்பாடு
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk