அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம். இதுபோன்ற Sensitive-ஆன, பல ஆண்டுகள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும் போது, காவல்துறை இந்த வழக்கை எந்தவித Pressure-ம் இன்றி கையாள வேண்டும். தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் காவல்துறை விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன. பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்க கூடாது. இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின்வெட்டு : சிக்கலை தீர்க்காமல் அலட்சியமாக இருப்பதா? – அன்புமணி கேள்வி? அடுத்தடுத்து இரண்டு அரசுப் பள்ளிகளில் நஞ்சான காலை உணவு – நயினார் நாகேந்திரன் கண்டனம்! சென்னையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் – மாநகராட்சி ஆணையாளர்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஜெம் வீரமணி வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது – எடப்பாடி பழனிசாமி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk