பி.யு.சி.எல். (PUCL) கள ஆய்வுக் குழுவின் உறுப்பினரும் சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவருமான அப்துல் அகத், கோயம்புத்தூர் நகரில் இடம்பெயர்ந்த மக்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவித்தார் கோயம்புத்தூர் உக்கடம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், எட்டு ஆண்டுகளாகியும் நிரந்தர வீடுகள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது புல்லுக்காடு ஷெட், குப்பைமேடு பகுதியில் தகரத் தகடுகளால் அமைக்கப்பட்டுள்ள சிறிய தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வரும் தங்களுக்கு, குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL - People's Union for Civil Liberties) கோயம்புத்தூர் பிரிவு மேற்கொண்ட கள ஆய்வு அறிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மறுவாழ்வு தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 18 மாதங்களில் வீடு என்ற வாக்குறுதி பி.யு.சி.எல். (PUCL) கள ஆய்வுக் குழுவின் உறுப்பினரும் சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவருமான அப்துல் அகத், கோயம்புத்தூர் நகரில் இடம்பெயர்ந்த மக்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவித்தார். அந்த ஆய்வில் பி.யு.சி.எல். குழு வி.எச்.ரோடு, சிவானந்தா காலனி மற்றும் உக்கடம் குப்பைமேடு - புல்லுக்காடு பகுதி ஆகிய மூன்று இடங்களில் ஆய்வு நடத்தியுள்ளது. கோயம்புத்தூர் நகரத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக இடம்பெயர்க்கப்பட்ட மக்கள், தற்காலிகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வீடுகள் கட்டித் தரப்படும் வரை காத்திருக்கும் மாநகராட்சி தொழிலாளர்கள் ஆகியோரின் நிலை குறித்து ஆய்வு செய்தோம்" என அப்துல் அகத் தெரிவித்துள்ளார். உக்கடம் பகுதியில் வசித்த 450-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2018ஆம் ஆண்டு தற்போதைய புல்லுக்காடு இடத்துக்கு மாற்றப்பட்டதாகவும், அப்போது 18 மாதங்களுக்குள் நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். ஆனால், எட்டு ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதே அப்பகுதி மக்களின் முக்கியப் புகாராக உள்ளது. தகரக் கொட்டகைக்குள் ஒரு குடும்பம் தற்போதைய குடியிருப்புகள் தகரச் சுவர்கள் மற்றும் தகரக் கூரையால் அமைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் கொட்டகைக்குள் கடும் வெப்பம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண் கூறுகையில், "வெயில் வந்தால் இங்கு இருக்க முடியவில்லை. தகரம் மிகவும் சூடாகிறது. வீடு கட்டித் தருவதாகச் சொன்னார்கள். பாதி பேருக்கு வீடு கிடைத்துள்ளது. இன்னும் பாதி பேருக்கு கிடைக்கவில்லை" என்றார். மற்றொரு பெண், "வீட்டை இடித்துவிட்டு எங்களை இந்தப் பக்கம் தள்ளிவிட்டார்கள். வெயிலில் வேகும் நிலையில் இங்கு வாழ்கிறோம்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 250 குடும்பங்களுக்கு ஆறு கழிப்பறைகள் பி.யு.சி.எல். அறிக்கையின்படி, சுமார் 250 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் ஆறு பொது கழிப்பறைகள் மட்டுமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிப்பறை வசதி போதுமானதாக இல்லாததால், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சிரமப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். ஒரு குடியிருப்பாளர், தங்களது சிறிய அறைக்குள்ளேயே உணவு சமைப்பது, சாப்பிடுவது மற்றும் குளிப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டிய நிலை இருப்பதாகத் தெரிவித்தார். எங்களது வீடு சுமார் 10க்கு 10 அடி அளவுதான். பீரோ வைக்கக்கூட இடமில்லை. வீட்டுக்குள்ளேயே குளிக்கவும் வேண்டியுள்ளது. வேறு வழியில்லை" என அவர் கூறினார். குடிநீர் குறித்தும் புகார் குடிநீர் விநியோகமும் முறையாக இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிலர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நல்ல தண்ணீர் வருவதாகவும், மற்றொரு வகை தண்ணீர் தொடர்ந்து கிடைப்பதாகவும் கூறுகின்றனர். சில குடியிருப்பாளர்கள் குடிநீர் விநியோகத்தில் நீண்ட இடைவெளி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பி.யு.சி.எல். அறிக்கையில், 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் தண்ணீர் தொட்டிகள் முறையாகச் சுத்தம் செய்யப்படவில்லை என்ற மக்களின் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் தரம் மற்றும் கழிவுநீர் கலப்பது தொடர்பாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாம்பு, பூச்சிகளால் அச்சம் குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைகள் மற்றும் புதர்கள் காணப்படுவதால், இரவு நேரங்களில் பாம்புகள் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் வீடுகளுக்குள் வருவதாக மக்கள் கூறுகின்றனர். எங்கள் வீட்டுக்குள்ளேயே பாம்பு வந்திருக்கிறது. நாகப்பாம்பும் வந்தது. இரவு நேரங்களில் அச்சமாக இருக்கிறது" என ஒரு பெண் தெரிவித்தார். மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் நுழைவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.குழந்தைகளின் உடல்நிலை குறித்து கவலை தகரக் கொட்டகைகளில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் கொசுக்கள் காரணமாக குழந்தைகளுக்கு தோல் பாதிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்தனர். கள ஆய்வின்போது குழந்தைகளின் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்ததாகவும், குழந்தைகளின் உடல்நிலை குறித்து குடும்பங்கள் கவலை தெரிவித்ததாகவும் பி.யு.சி.எல். குழு கூறியுள்ளது. அப்பகுதியில் பள்ளிகள் மற்றும் மருத்துவ வசதிகள் போதுமான அளவில் இல்லாததால், குழந்தைகள் மற்றும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் குடும்பங்களுக்கு கூடுதல் சுமையாக இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.இந்த தற்காலிகக் குடியிருப்பில் வசித்து வந்தவர்களில் பலர் கடந்த ஆண்டுகளில் உயிரிழந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சிலர் 50 முதல் 80 பேர் வரை உயிரிழந்ததாகக் கூறுகின்றனர். மற்றொரு குடியிருப்பாளர் ஏழு ஆண்டுகளில் சுமார் 100 பேர் உயிரிழந்ததாகக் கூறினார். புல்லுக்காடு பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவர், தங்களது குடும்பம் நான்கு தலைமுறைகளாக உக்கடம் சி.எம்.சி காலனியில் வசித்து வந்ததாகக் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, பாலம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி தாங்கள் அங்கிருந்து வெளியேறி புல்லுக்காடு பகுதிக்கு வந்ததாகவும், 18 மாதங்களில் வீடு கட்டித் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இங்கு வந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் வீடு இல்லை. வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து கூறுகிறார்கள்" என மகேந்திரன் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, ஆரம்பத்தில் சுமார் 500 வீடுகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் ஒரு பகுதி வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. சில குடும்பங்களுக்கு வீடுகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து அரசியல் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தங்களிடம் தொடர்ந்து தொடர்பில் இல்லை என்றும் குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஓட்டு கேட்டு வருவார்கள். வெற்றி பெற்ற பிறகு எங்களை வந்து பார்க்கவில்லை" என ஒரு பெண் தெரிவித்தார். மற்றொரு குடியிருப்பாளர், தங்கள் பகுதி கவுன்சிலர் யார் என்பதுகூட தங்களுக்குத் தெரியவில்லை என்றும், தங்களது குறைகளை கேட்க அதிகாரிகள் முறையாக வரவில்லை என்றும் கூறினார். பி.யு.சி.எல். அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஒரு வீட்டுக்கு சுமார் ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பயனாளிகள் ரூ.1.5 லட்சம் பங்களிப்பு செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஆரம்பத்தில் 400 சதுர அடியாக திட்டமிடப்பட்ட வீடுகள் தற்போது 300 சதுர அடியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்லுக்காடு பகுதியில் கட்டுமானப் பணிகள் நிதி கிடைக்கும் அளவுக்கு நடைபெற்று வருவதாகவும், பணிகள் நிறைவடைய இன்னும் சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக பி.யு.சி.எல். அறிக்கை கூறுகிறது. இந்த நிலைமைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என பி.யு.சி.எல். கோயம்புத்தூர் பிரிவு அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர மறுவாழ்வு வீடுகளை விரைந்து வழங்க வேண்டும். அதுவரை தகரக் கொட்டகைகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான, வாழத் தகுதியான தற்காலிகக் குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் மற்றும் போதுமான கழிப்பறைகளை வழங்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் மின்விளக்குகள், எல்லைக் கதவுகள், CCTV கேமராக்கள் மற்றும் இரவு நேரக் காவல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மருத்துவ வசதி மற்றும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். குடியிருப்புக்கு அருகில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். பள்ளி, மருத்துவமனை மற்றும் பிற அடிப்படை வசதிகளை எளிதில் அணுகக்கூடிய இடங்களில் மறுவாழ்வு வீடுகளை அமைக்க வேண்டும். பி.யு.சி.எல். குழுவின் கருத்துப்படி, வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்களை இடம்பெயரச் செய்வது மட்டும் போதுமானதல்ல; அவர்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய வகையில் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும். வசதியுள்ளவர்கள் வாடகை வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். வசதியில்லாதவர்கள் இன்றும் தகர ஷெட்டுகளில்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ள இடத்தில் புதிய வீடுகள் அமைத்துத் தர வேண்டும்" என அப்துல் அகத் தெரிவித்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த நிலைமைக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட தீர்வு தேவை என்பதே பி.யு.சி.எல். அறிக்கையின் முக்கியக் கருத்தாக உள்ளது. தற்காலிகக் குடியிருப்பில் வசிக்கும் மக்களோ, தங்களது பழைய வீடுகளை இழந்ததற்குப் பிறகு புதிய வீடுகளுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருப்பதாகவும், இனியும் காலதாமதம் வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். பி. ரஹ்மான் கோவை மாவட்டம். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
8 ஆண்டுகளாக தகரக் கொட்டகையில் வாழ்க்கை: உக்கடம் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு எப்போது?
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk