“தவெக அரசின் விளம்பர மோகத்தால் சீரழியும் மக்கள் நலத் திட்டங்கள்” – டிடிவி தினகரன் விமர்சனம்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
“தவெக அரசின் விளம்பர மோகத்தால் சீரழியும் மக்கள் நலத் திட்டங்கள்” – டிடிவி தினகரன் விமர்சனம்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை அருந்திய 36 மாணவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மேலக்கண்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 11 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறியிருப்பது அரசின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டாவது நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்திருப்பது, அரசுப் பள்ளிகளின் சமையலறைகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, மாணவர்களின் உயிர் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் பசியைப் போக்க வழங்கப்படும் காலை உணவு, தவெக அரசின் அலட்சியப் போக்காலும் அதீத விளம்பர மோகத்தாலும், மாணவர்களின் உடல்நலத்திற்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும் நஞ்சாக மாறியிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்கள், பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வரும் சமையல்கூடங்கள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிவறைகள் என அரசுப் பள்ளிகளின் அவலநிலைகள் தொடர்கின்றன. ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ தேவையற்ற கதைகளையும் அடுக்குமொழி வசனங்களையும் பேசி வருவது, அவர் இன்னும் பட்டிமன்ற மேடையை விட்டு வெளியே வரவில்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும், கடந்த 22ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட செலவை விட, அந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில், பல்வேறு மொழிகளில் நாளிதழ்களின் முதல் பக்கங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான செலவுதான் அதிகம் என்ற எழுந்திருக்கும் விமர்சனத்திற்கு தவெக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? எனவே, பல்லி விழுந்த உணவை அருந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெருக்களின் சாதி பெயர்களை நீக்கும் அரசாணை செல்லும் – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சிபிஐ(எம்) வரவேற்பு! செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! ஜெம் வீரமணி வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது – எடப்பாடி பழனிசாமி! நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை