ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் ரூ.20 கோடி பணம் பறிக்கவே காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் தன்னை அணுகியதாகத் த.ம.மு.க தலைவர் ஜான் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு சாட்டியுள்ளார். காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் மற்றும் சாந்தி ஆகியோர் ரூ.20 கோடி பணம் பறிக்கும் நோக்கத்திலேயே தன்னை அணுகியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலதிபர் ஜெம் வீரமணி கைதாகியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாகத் தம்மீது சுமத்தப்படும் கட்டப் பஞ்சாயத்துப் புகார்களுக்குத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் மற்றும் சாந்தி ஆகியோர் ரூ.20 கோடி பணம் பறிக்கும் நோக்கத்திலேயே தன்னை அணுகியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். பல ஆண்டுகளாக சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி சமீபத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய முடியவில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைக்கக் காவலத்துறை முயன்றபோது, நீதிபதி பத்மா மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாகவே தற்போது ஜெம் வீரமணி மற்றும் அவருக்குத் துணையாக இருந்த சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இரு ஆண்டுகளுக்கு முன்பே (21-11-2024) ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவலத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவு மாநிலத் தலைவரான எம்.பி. ரஞ்சன் குமார் குற்றம் சாட்டியுள்ளார். சாந்தியின் வீட்டில் வைத்து சிறுமிகளுக்குப் பாலியல் அத்துமீறல்கள் இழைக்கப்பட்ட ஆதார வீடியோக்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களைக் காவல்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி அந்த ஆதாரங்களை அவர் வெளியிட்டுள்ளார். அதேவேளையில், இந்த விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்ததாகத் தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "ஜெம் வீரமணிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் மற்றும் சாந்தி ஆகியோர் ரூ.20 கோடி பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என்னை அணுகினர். என் மீது தற்போது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. ரஞ்சன் குமாருக்கு யாரோ பணம் கொடுத்து இதுபோன்று பேச வைத்துள்ளனர். என்னிடம் பேசச் சொல்லி அவரை ஒரு முக்கிய அரசியல் தலைவர் தான் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்; அவர் யார் என்ற பெயரை ரஞ்சன் குமாரே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ரஞ்சன் குமாரை போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று ஜான் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: கட்டப் பஞ்சாயத்து செய்தேனா? ரஞ்சன் குமாரை விசாரிக்க ஜான் பாண்டியன் வலியுறுத்தல்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk