சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; மாதம் ரூ. 60000 சம்பளம்; தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இங்கே சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி – IIT Madras) தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2026 ஆகும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Project Associate காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு பொறியியல் அல்லாத இளநிலை படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Master’s degree in supply chain management, Logistics, Industrial Engineering, Operations Research, Computer Science, Data Science, Management படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். சம்பளம்: ரூ. 40,000 – 60,000 (தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்) தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.icsr.in/about.php என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு ரூ. 60000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk