உலகளவில், கட்டாய பங்குகள் விற்பனை நிகழ்கின்றன, ஆனால் அவை அரிதானவை, எப்போதாவது மட்டுமே நடைபெறுகின்றன. அவை குறிப்பிட்ட, செயல்திறன் தொடர்பான காரணங்களுக்காக நிகழ்கின்றன. ஆனால் இங்கு நிலைமை அப்படி இல்லை. எழுத்து: லவீஷ் பண்டாரிமொழியாக்கம்: எம். கோபால் முதலில் மூன்று முக்கியக் கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன். டாடா சன்ஸ் (Tata Sons) நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரரின் விருப்பத்திற்கு மாறாக, அந்நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுமாறு கட்டாயப்படுத்துவதன் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு தவறைச் செய்கிறது. எனவே, அது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்யாத பட்சத்தில், மத்திய அரசு இதில் தலையிட்டு அதைத் தடுப்பதற்கான வழியைக் காண வேண்டும். மேலும், இத்தகைய சரிசெய்தல் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பிரச்சினை, நீண்ட காலம் எடுக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்கும் நிலைக்குச் செல்லக்கூடாது. நவீனமோ அல்லது பாரம்பரியமோ, எந்தவொரு பொருளாதார அமைப்பும் உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களின் மீது கொண்டிருக்கும் கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. எனவே, சொத்துரிமையும் அதன் மீதுள்ள கட்டுப்பாடும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை; இந்தப் பிணைப்பில்தான் பொருளாதாரத்தின் அடித்தளமே அமைந்துள்ளது. வேறு விதமாகச் சொன்னால், கட்டுப்பாடு பலவீனமாக இருந்தால் சொத்து இருந்து என்ன பயன்? ஆகையால், பங்குதாரரின் கட்டுப்பாட்டைக் குறைப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ சந்தை சார்ந்த பொருளாதாரத்தின் அடித்தளத்தையே தாக்குவதோடு, ஒழுங்குமுறை மற்றும் கொள்கை முடிவுகளை வழிநடத்தும் அணுகுமுறைகள் சரியானதா போன்ற கேள்விகளை எழுப்புகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் குறிப்பாக, ரிசர்வ் வங்கி (RBI) குறிப்பிடுவது போல, ஒரு நிறுவனம் "அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக" (systemically important) கருதப்படும்போது இத்தகைய விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. கார்ப்பரேட் முதலீடுகள் தொடர்பான சவால்களை இந்தியா ஏற்கனவே எதிர்கொண்டு வரும் நிலையில், நிறுவனத்தின் மீதான உரிமையாளர் மற்றும் அதன் கட்டுப்பாட்டு உறவைச் சிதைப்பது நிலைமையைச் சீராக்க உதவாது. அதிலும் குறிப்பாக, அடுத்தடுத்து பல முதலாளிகள் இந்தியாவிற்கு வெளியே 'குடும்ப அலுவலகங்களை' (family offices) அமைத்து வருவதால், நிதியும் பெருநிறுவன கட்டுப்பாடும் பிற நாடுகளுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இவை அனைத்தையும் தாண்டி, மிக முக்கியமான விஷயம் ரிசர்வ் வங்கியின் பங்கைச் சார்ந்ததே; ஏனெனில், ஒரு ஒழுங்குமுறை அமைப்பாக அதன் நடவடிக்கைகளே இச்சம்பவங்களின் தொடக்கப்புள்ளியாக அமைகின்றன. நாட்டில் நிதி மற்றும் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் (macro-economic stability) பேணுவதே ரிசர்வ் வங்கியின் முதன்மையான பொறுப்பாகும். இதைச் செயல்படுத்த, அது பெரிய வணிக மற்றும் நிதி நிறுவனங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்; அத்துடன், அவற்றின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் வகையில் இருந்தால், அது சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தான் வேண்டும். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. எனவே, டாடா நிறுவனங்களிடமிருந்து 'டாடா சன்ஸ்' (Tata Sons) பெற்ற பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியபோது, அது தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்பட்டது. இத்தகைய கடன்கள் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கக்கூடும் என்ற கவலையை ரிசர்வ் வங்கி வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, 'டாடா சன்ஸ்' அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தி அவற்றை முடிவுக்குக் கொண்டுவந்தது. இதோடு அந்த விவகாரம் முடிந்திருக்க வேண்டும்; ஏனெனில், அதற்கான அடிப்படை காரணமே அப்போது நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த விவகாரம் அதோடு முடிவுக்கு வரவில்லை. ரிசர்வ் வங்கியின் இரண்டு முடிவுகள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து நீடிக்கச் செய்துள்ளன. முதலாவதாக, 'டாடா சன்ஸ்' நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட வேண்டும் என்ற தனது கோரிக்கையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; இரண்டாவதாக, அத்தகைய கோரிக்கையை முன்வைப்பதற்கான தெளிவான காரணத்தை அது இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. மொத்தத்தில், இது உணர்த்துவது என்னவென்றால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முதலாளிகளும்-பங்குதாரர்களும், தாங்கள் ஏன் டாடா சன்ஸை பங்குச் சந்தையில் பட்டியலிட நிர்பந்திக்கப்படுகிறோம் என்பதை அறிந்ததாகத் தெரியவில்லை; ஏனெனில், முதலில் கூறப்பட்ட கடன் வாங்கிய காரணம் இப்போது இல்லை, அது சரி செய்யப் பட்டு விட்டது. நிச்சயமாக, எதிர்காலத்தில் இதுபோன்ற தவிர்க்கக்கூடிய பரிவர்த்தனைகள் நிகழக்கூடும் என்பதால், இந்திய ரிசர்வ் வங்கி தனது நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டிருக்கலாம் என்பதே அனுமானமாகும். ஆனால் அது ஒரு பலவீனமான வாதம் என்றே சொல்லலாம். பங்குச் சந்தையில் பட்டியலிடலை நிர்பந்திப்பதற்குப் பதிலாக, டாடா சன்ஸ் தெளிவான அறிக்கை சமர்ப்பித்தல் அல்லது இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு ஒரு முன்-அங்கீகாரம் பெற வேண்டும் என்பது போன்ற செயல்முறையை வகுத்திருக்கலாம். இதன் நோக்கம் அதிக வெளிப்படைத்தன்மை அல்லது எதிர்காலத்தில் வரக் கூடிய சிக்கலைத் தீர்ப்பதாக இருக்கலாம் என்றாலும், அதன் உண்மையான தாக்கம் என்பது நிறுவனத்தின் மீதுள்ள உரிமை, அதன் கட்டுப்பாடு குறைதல் மற்றும் நிறுவனத்தின் நோக்கம் மாறுதல் போன்றவற்றாகவே இருக்கும். இதனுடன், பங்குச் சந்தையில் பட்டியலிட நிர்பந்திப்பதால் ஏற்படும் தேசிய மற்றும் உலகளாவிய நற்பெயர் மீதான தாக்கத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உலகளவில், கட்டாய பங்குகள் விற்பனை நிகழ்கின்றன, ஆனால் அவை அரிதானவை, எப்போதாவது மட்டுமே நடைபெறுகின்றன. அவை குறிப்பிட்ட, செயல்திறன் தொடர்பான காரணங்களுக்காக நிகழ்கின்றன. நிதி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான செறிவைக் குறைக்க அல்லது நெருங்கிய தொடர்புகளை உடைக்க முழுத் தொழில்துறைகள் அல்லது துறைகள் மாற்றப்படும்போது ஒரு வகை மறுசீரமைப்புகள் நிகழ்கின்றன (இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு தனியார் தொழில் ஆதிக்கத்தை உடைக்க உருவாக்கப் பட்ட ஜப்பானிய கெய்ரெட்சு முறை); அல்லது பொருளாதார நிலைத்தன்மைக்காகத் தொழில்துறை தழுவிய மறுசீரமைப்பு (1990களின் பிற்பகுதியில் கொரியாவில் நடந்த பெரிய முதலாளிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப் படுத்த கொண்டு வரப்பட்ட சாய்போல் சீர்திருத்தங்கள்); அல்லது சொத்துரிமைச் செறிவைக் குறைத்தல் (தென்னாப்பிரிக்காவில் இனவெறிக் கொள்கைக்குப் பிந்தைய நிலை) போன்ற காரணங்களுக்காக அவை நிகழலாம். இரண்டாவது வகை என்பது, தனிப்பட்ட நிறுவனங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக மறுசீரமைக்கப்படுவதாகும். ஏகபோக ஆதிக்கத்தை உடைக்க அமெரிக்காவில் 1911-ல் ஸ்டாண்டர்ட் ஆயில் மற்றும் 1984-ல் ஏடி&டி போன்ற நிறுவனங்களில் இது நடந்தது; சீனாவில் ஆன்ட்-அலிபாபா விவகாரமும் இதைப் போன்றதே- அங்கு அரசாங்கம் ஒரு பிரம்மாண்டமான ஆளுமையைக் கட்டுப் படுத்த வேண்டியிருந்தது. டாடா சன்ஸ் விவகாரம் இந்த வகைகளில் எதிலும் அடங்காது. நாட்கள் செல்லச் செல்ல, பல கேள்விகள் கேட்கப்படும், பல சிக்கல்கள் எழுப்பப்படும். இவை அனைத்தும் குழுவின் முன்னாள் தலைவர் என்ன விரும்பினார், டாடா டிரஸ்ட்ஸ் (Tata Trusts) லாப நோக்கிற்காக அல்லாமல் தேசிய நலன் கருதி எவ்வாறு வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டது, இயக்குநர்களின் பங்கு மற்றும் அதிகார வரம்பு குறித்து விதிமுறைகள் என்ன கூறுகின்றன, யார் வாக்களிக்கலாம் அல்லது வாக்களிக்கக்கூடாது, நிர்வாகக் குழு மற்றும் ஆண்டுப் பொதுக் கூட்டங்கள் எவ்வாறு கூட்டப்படுகின்றன, யார் சிறந்த மேலாளராக இருக்க முடியும் அல்லது முடியாது, ஒரு தொழில்முறை மேலாளர் எதை நோக்கிப் பணியாற்ற வேண்டும், எது அதிக செயல்திறன் மிக்க முடிவுகளுக்கு அல்லது கூடுதல் மதிப்பு உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பானவையாக இருக்கலாம். ஆனால், 'டாடா சன்ஸ்' (Tata Sons) நிறுவனத்தின் பங்குச் சந்தை பட்டியலிடல் விவகாரத்தைப் பொறுத்தவரை, இவை அனைத்தும் தேவையற்ற குழப்பங்களே. இந்த விஷயம் மிகவும் எளிமையானது. இதில் சட்டரீதியான அல்லது அறநெறி சார்ந்த மீறல்களோ, அல்லது ஏகபோக ஆதிக்கம் போன்ற வகையிலான மீறல்களோ எதுவுமே இல்லை. முதலாளிகள் தங்கள் சொத்தின் மீதான கட்டுப்பாடு தங்களிடமே உள்ளது என்பதையும், இது ஒரு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒப்பந்தம் போன்றது என்பதையும், இது குறித்து ஒரு தேசிய ஒருமித்த கருத்து நிலவுகிறது என்பதையும் உறுதியாக நாம் நம்ப வேண்டும். இது விவாதத்திற்கோ, பேச்சுவார்த்தைக்கோ அல்லது சட்டரீதியான நுணுக்கமான விமர்சனங்களுக்கோ உட்பட்ட விஷயமாக இருக்கக்கூடாது. சொத்துக்களின் மீதான உரிமை என்பது புனிதமானதாகக் கருதப்பட வேண்டும்; அனைவராலும் அவ்வாறே பார்க்கப்படவும் வேண்டும். இந்த விவகாரம் டாடா குழுமத்தைச் சார்ந்ததாகத் தோன்றினாலும், இதன் விளைவுகள் ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பையே பாதிக்கக்கூடியவை. கட்டுரையாளர் ஒரு பொருளாதார நிபுணர். இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள் அவருடைய தனிப்பட்ட கருத்துகளாகும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Martin Jeyaraj is the Senior Sub Editor and Sports Journalist of Tamil Indian Express Digital. Dynamic and seasoned Multimedia Journalist with over 5 years of experience in reporting and digital storytelling. Proficient in data-driven journalism and social media engagement, having increased publication readership. Specialization: While he covers a variety of sports, he is primarily covers Cricket for the publication. with a focus on domestic tournaments and international fixtures. Based in chennai, his reporting has ranged from the Ranji Trophy to ICC World Cups. he also writes extensively about Kabbadi. Writing Style: His work is characterized by storytelling breaking down the bio-mechanics, tactics, and psychological grit of athletes. also explore the personal journeys of athletes beyond the podium. Notable Recent Articles: conversation with PKL Tamil Thalaivas coach Sanjeev Baliyan, Assistant coach Suresh Kumar. Conversation with Tamil Thalaivas CEO Shushen Vashishth. Deep Dive discussion about Rugby Premier League, with Bengaluru Bravehearts CEO Sanjith Shetty. Professional Experience: Tamil Indian Express: Prior to his current role as Senior Sub Editor he started as retainer. after gaining experience, he served as Sub Editor. SUN TV NETWORK: He previously worked as programming producer in Sun Tv network, creating promos and fillers. and writing scripts for kid's shows. Deccan Chronicle and NEWS 7 TAMIL where he learned reporting and covering daily News as Trainee reporter. both organisations shaped him to pursue Journalism as career. Qualifications, Degrees: Bachelor's degree in physics from Alagappa University, Karaikkudi. PG in Master of Arts Journalism and Mass Communication from SRM University, Chennai. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
கட்டுப்பாடு இல்லாத சொத்தால் என்ன பயன்? ரிசர்வ் வங்கி டாடா சன்ஸ் நிறுவனத்தை அதன் போக்கில் விட்டுவிட வேண்டுமா?
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk