அறப்போர் இயக்கம் புகார் எதிரொலி: எ.வ.வேலு, அவரது மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
அறப்போர் இயக்கம் புகார் எதிரொலி: எ.வ.வேலு, அவரது மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு

அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி அறப்போர் இயக்கம் வெளியிட்ட அதன் சமூக வலைதள பதிவில், "திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி தி.மு.க இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ.வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தில் (DVAC) அறப்போர் புகார் அளித்துள்ளது. உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நேர்மையான விசாரணை நடத்த கோரி புகார் மற்றும் ஆதார ஆவணங்கள் இன்றைய தினம் அனுப்பி உள்ளோம். தி.மு.க மாநாட்டிற்காக அரசு ஏரியில் சட்டவிரோத மண் திருட்டு 2025 டிசம்பர் 14 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில் உள்ள "கலைஞர் திடல்" நிலத்தில் தி.மு.க வடமண்டல இளைஞர்அணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை ஒருங்கிணைத்தவர் தி.மு.க வடக்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எ வ வேலு. இந்த மாநாடு நடந்த 124 ஏக்கர் பரப்பளவு உள்ள கலைஞர் திடல் முன்னாள் அமைச்சர் வேலு மகன் எவ குமரனின் அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. இம்மாநாட்டிற்கான நிலத்தைச் சமன்படுத்துவதற்காக,அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியிலிருந்து (சர்வே எண்:58) சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், 10 முதல் 23 அடி (3 முதல் 7 மீட்டர்) ஆழத்திற்கு மண்ணை சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் எவ வேலு மற்றும் அவர் மகன். இது நவம்பர் மற்றும் டிசம்பர் 2025 காலகட்டத்தில் நடந்துள்ளது. தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 (Rule 12(2))-ன் படி, பொதுப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் மண் எடுக்க 1 மீட்டருக்கு மேல் அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால், இங்கு முன்னாள் அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 3 முதல் 7 மீட்டர் ஆழம் வரை லாரிகளில் மண் அள்ளப்பட்டு, அப்போதைய அமைச்சரின் மகனின் நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு எட்டு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பும், விவசாயத்திற்கு பாதிப்பும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் இந்த ஏரியை நேரடியாக ஆய்வு செய்து ஏற்பட்டுள்ள இழப்பை ஆவணம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சம் கன அடி மண் திருடப்பட்டு கிட்டத்தட்ட ரூபாய் எட்டு கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது ஏரி கரையை ஆக்கிரமித்து சட்டவிரோதச் சாலை மாநாட்டிற்கு வரும் கூட்டத்திற்கு ஏதுவாக, மலப்பம்பாடி ஏரியின் கரை மீது அணுகுசாலை அகலமாக பெரியளவில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுவின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தின் வாயில் வரை நெடுஞ்சாலைத் துறை மூலம் சட்டவிரோதமாக அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பாசனக் குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 2007-க்கு முற்றிலும் எதிரான குற்றச் செயலாகும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் அளித்தும் பயனில்லை. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு அதிகாரிகளிடம் உழவர் உரிமை இயக்கம் நவம்பர் 25 2005 இல் புகார் அளித்தது. ஆனால் ஆட்சியர், தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்போதைய அமைச்சர் எவ வேலு மற்றும் அவரது மகன் சட்டவிரோதமாக மண் திருடுவதற்கும் அவர்கள் சொத்து சேர்ப்பதற்கும் வழிவகை செய்துள்ளது. கலைஞர் திடல்" நிலம் 124.56 ஏக்கர் நிலம், 12.06.2024 அன்று ரூ.46 கோடிக்கு 'அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' (இயக்குனர்: எ.வ. குமரன்) என்ற நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலத்தை விற்பனை செய்த 'ரிஷி என்டர்பிரைசஸ்' நிறுவனம், நெடுஞ்சாலைத் துறையில் பல நூறு கோடி ஒப்பந்தங்களைப் பெற்று வரும் ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் நிறுவனமாகும். அந்த நிறுவனம் அவரது மனைவி பெயரில் உள்ளது. அவருடைய நிறுவனங்களில் சோதனையிட்ட வருமானவரித்துறை 2022-ல் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம்கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு சென்ட் நிலமே 1.5 முதல் 2 லட்சம் வரை விலை போகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்க 124 ஏக்கர் நிலத்தை எப்படி வெறும் 46 கோடிக்கு நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தாரிடமே அப்போதைய நெடுஞ்சாலை துறை எவ வேலு மகன் 2024 இல் வாங்கினார் என்பது குறித்தும் பண பரிவர்த்தனை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்." என்று தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில், அறப்போர் இயக்கம் அளித்த இந்த புகாரின் அடிப்படையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரில் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Martin Jeyaraj is the Senior Sub Editor and Sports Journalist of Tamil Indian Express Digital. Dynamic and seasoned Multimedia Journalist with over 5 years of experience in reporting and digital storytelling. Proficient in data-driven journalism and social media engagement, having increased publication readership. Specialization: While he covers a variety of sports, he is primarily covers Cricket for the publication. with a focus on domestic tournaments and international fixtures. Based in chennai, his reporting has ranged from the Ranji Trophy to ICC World Cups. he also writes extensively about Kabbadi. Writing Style: His work is characterized by storytelling breaking down the bio-mechanics, tactics, and psychological grit of athletes. also explore the personal journeys of athletes beyond the podium. Notable Recent Articles: conversation with PKL Tamil Thalaivas coach Sanjeev Baliyan, Assistant coach Suresh Kumar. Conversation with Tamil Thalaivas CEO Shushen Vashishth. Deep Dive discussion about Rugby Premier League, with Bengaluru Bravehearts CEO Sanjith Shetty. Professional Experience: Tamil Indian Express: Prior to his current role as Senior Sub Editor he started as retainer. after gaining experience, he served as Sub Editor. SUN TV NETWORK: He previously worked as programming producer in Sun Tv network, creating promos and fillers. and writing scripts for kid's shows. Deccan Chronicle and NEWS 7 TAMIL where he learned reporting and covering daily News as Trainee reporter. both organisations shaped him to pursue Journalism as career. Qualifications, Degrees: Bachelor's degree in physics from Alagappa University, Karaikkudi. PG in Master of Arts Journalism and Mass Communication from SRM University, Chennai. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை