சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதற்காக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணியை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1990களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது. இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும். தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “அரசு மருத்துவமனைகளில் குறை பிரசவக் குழந்தைகள் சுவாசிக்க வழங்கப்படும் மருந்து பற்றாக்குறை!” – வானதி சீனிவாசன் “தமிழகப் பெண்களை குறிவைக்கும் தவெகவினர்!” – நயினார் நாகேந்திரன் “பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்!” – ஆதவ் அர்ஜுணா தேசிய திரைப்பட விருதுகள் விழா: விருதுகளை குவித்த தமிழ் திரைப்படங்கள்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!” – கனிமொழி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk