வெள்ளை மாளிகை திங்கள்கிழமை "டிரம்ப் டிவி: தி எசென்ஷியல்ஸ் ஸ்டேஷன்" என்ற 24 மணி நேரமும் இயங்கும் நேரலை ஸ்ட்ரீமிங் சேனலைத் தொடங்கியுள்ளது. முன்பு வெள்ளை மாளிகைக்குள் நுழைய சில சேனல்களுக்கு டிரம்ப் தடைவிதித்து இருந்தார். செய்திகளை நேர்மையற்ற முறையில் வெளியிடுவதாக கூறி சி.என்.என் (CNN), பொலிடிகோ (Politico) மற்றும் எம்.எஸ் நவ் (MS NOW) ஆகிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை விதித்த சில நாட்களிலேயே, வெள்ளை மாளிகை திங்கள்கிழமை "டிரம்ப் டிவி: தி எசென்ஷியல்ஸ் ஸ்டேஷன்" (TRUMP TV: The Essentials Station) என்ற 24 மணி நேரமும் இயங்கும் நேரலை ஸ்ட்ரீமிங் சேனலைத் தொடங்கியுள்ளது. தடை செய்யப்பட்ட சேனல்கள் தங்களுக்கான அனுமதியை மீண்டும் கோரி நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அதே நாளில் இது நிகழ்ந்துள்ளது. மேலும், இந்த தடையை அதிபர் டொனால்ட் டிரம்ப் நியாயப்படுத்தி உள்ளார். ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க இந்த சேனல் தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “இது 24/7 நேரலையில் இயங்கும் என்றும் கடந்தகால தருணங்கள், அறிவிப்புகள் மற்றும் நிர்வாக செய்திகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் என்றும் தெரிவித்துள்ளது. முதல் ஒளிபரப்பில், ஜூலை 3 அன்று மவுண்ட் ரஷ்மோரில் டிரம்ப் ஆற்றிய உரை இடம்பெற்றது. அதை தொடர்ந்து 47-வது அதிபராக அவர் 2025-ல் பதவியேற்ற காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. வெள்ளை மாளிகையின் யூடியூப் விளக்கத்தில், இந்த சேனல் சிறந்த வீடியோக்கள், முக்கிய உரைகள் மற்றும் கட்டாயம் பார்க்க வேண்டிய நிகழ்வுகளை 24/7 ஸ்ட்ரீமிங் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சேனல் தற்போதைய நிகழ்வுகளை ஒளிபரப்புமா அல்லது பழைய காட்சிகளுடனே நிற்குமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. செய்தியாளர்கள் தடையும் வழக்கும் சி.என்.என், பொலிடிகோ மற்றும் எம்.எஸ் நவ் ஆகிய ஊடகங்கள் தொடர்ச்சியாக போலிச் செய்திகளை வெளியிடுவதாகக் குற்றம்சாட்டி, வெள்ளை மாளிகைக்குள் நுழைய வெள்ளிக்கிழமை டிரம்ப் தடை விதித்தார். இந்த மூன்று ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்களும் வார இறுதியில் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் சில செய்தியாளர்களின் அடையாள அட்டைகள் முடக்கப்பட்டன அல்லது பறிமுதல் செய்யப்பட்டன. திங்களன்று, இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து ஒரு வழக்கை தாக்கல் செய்தது. இந்த தடை தங்களது முதல் அரசியலமைப்புத் திருத்த உரிமைகளையும், சட்டப்பூர்வ செயல்முறை உரிமைகளையும் மீறுவதாக வாதிட்டன. இந்த வழக்கு அமெரிக்க மாவட்ட நீதிபதி திமோதி கெல்லிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் கூட்டாட்சி நீதிபதியாக நியமிக்கப்பட்டவர், மேலும் இதற்கு முன்பு முன்னாள் சி.என்.என் செய்தியாளர் ஜிம் அகோஸ்டா சம்பந்தப்பட்ட வழக்கையும் விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அரசியலமைப்புத் திருத்தம் ஒரு செய்தி நிறுவனத்தின் வெளியிடும் உரிமையைப் பாதுகாக்கிறது என்றும், ஆனால் வெள்ளை மாளிகை வளாகம், செய்தியாளர் சந்திப்பு அறை அல்லது அதிபருக்கான பிரஸ் பூல் ஆகியவற்றிற்குள் எந்தவொரு ஊடகமும் நுழைவதற்கான அணுகலை உறுதிப்படுத்தவில்லை என்றும் கூறி வெள்ளை மாளிகை இந்த கொள்கையை நியாயப்படுத்தியுள்ளது. ஒரு அறிக்கையில், அணுகல் என்பது எப்போதும் ஒரு சிறப்புரிமை மட்டுமே என்று நிர்வாகம் கூறியுள்ளதுடன், கடந்த காலத்தில் ஜனநாயக கட்சி நிர்வாகங்கள் பழமைவாத ஊடகங்களுக்கான அணுகலை கட்டுப்படுத்திய சம்பவங்களையும், ஃபாக்ஸ் நியூஸ் தொடர்பான முந்தைய தகராறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கம் தனது செய்தி அறிக்கை மீது ஆட்சேபனை தெரிவிப்பதால் செய்தியாளர்களைத் தேர்ந்தெடுத்து தடை செய்ய முடியாது என்று சி.என்.என், பொலிடிகோ மற்றும் எம்.எஸ் நவ் ஆகிய ஊடகங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. மேலும் பத்திரிகைகள் எதை அறிக்கையிட வேண்டும் அல்லது வெளியிட வேண்டும் என்பதை அதிகாரிகள் தீர்மானிக்க முடியாது என்றும் கூறியுள்ளன. நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியை சந்தித்த பிறகு கிரேசி மேன்ஷனுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், செய்தி அறிக்கைகளை புறக்கணிப்பதாக பயமுறுத்துவதன் மூலம் செய்தி நிறுவனங்கள் தன் மீது அழுத்தம் கொடுக்க முடியும் என்ற கருத்தை நிராகரித்தார். ஊடகங்கள் தன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை என்று கூறிய அவர், தன்னை பின்தொடரும் செய்தியாளர்களின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டினார். ஊடகங்களுக்கு நேர்மையாக செய்தி வெளியிட வேண்டிய கடமை இருப்பதாக கூறிய அவர், சி.என்.என்-ஐ "போலிச் செய்தி" என்று சுட்டிக்காட்டினார். மேலும் எம்.எஸ் நவ் என்றால் என்னவென்றே தனக்குத் தெரியாது என்றும் கூறினார். இத்தகைய செய்தி அறிக்கைகள் நாட்டிற்கும் தேசிய பாதுகாப்புக்கும் கேடானவை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், ட்ரூத் சோஷியல் பதிவில், டிரம்ப் இந்த வழக்கையும் நீதிபதி கெல்லியையும் நேரடியாக விமர்சித்தார். நீதிபதி தனது முதல் பதவிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். எதிர்மறையாக எழுதுவதோடு, தவறான அல்லது அவதூறான கதைகளுக்கு பெயர் குறிப்பிடாத ஆதாரங்களை நம்பியிருக்கும் ஊடகங்கள் உலகின் மிக முக்கியமான அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறிய அவர், நீதிமன்றம் தங்களுக்கு எதிராக தீர்ப்பளித்தால் தனது நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறினார். ஓவல் அலுவலகம் கண்ணியம், மரியாதை மற்றும் கம்பீரத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும், போலிச் செய்திகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் விவரித்தார். இந்த சர்ச்சை வெள்ளை மாளிகையின் தொலைக்காட்சிப் பூலை (White House television pool) பாதித்துள்ளது. வழக்கமாகச் சுழற்சி முறையில் இயங்கும் இந்த ஊடகக் குழு (CBS, NBC, ABC, CNN மற்றும் Fox) அதிபரின் நிகழ்வுகளின் காட்சிகளைப் பிற ஊடகங்களுடன் பகிர்ந்துகொள்ளும். டிரம்பின் நியூயார்க் பயணத்திற்கான செய்திகளை கவனிக்கும் பொறுப்பு சி.என்.என்-க்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அது தடுக்கப்பட்ட பிறகு, பிற நெட்வொர்க்குகள் மாற்று நபரை அனுப்ப மாட்டோம் என்று கூறி ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் தங்களது ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தின. இதன் விளைவாக, மம்தானியுடனான டிரம்பின் சந்திப்பு மற்றும் புதிய வெள்ளை மாளிகை ஹெலிபேட்டின் திறப்பு விழா ஆகியவை கவர் செய்யப்படாமல் போனது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வருகைக்கு சற்று முன்னதாக நடைபெற்ற ஹெலிபேட் திறப்பு விழாவில் இதன் தாக்கம் தெரிந்தது. டிவி உபகரணங்கள் இல்லாததால், வெள்ளை மாளிகையின் சொந்த நேரலையில் டிரம்பின் உரையை சரியாகக் கேட்க முடியவில்லை. டிரம்ப் புறப்படுவதற்கு முன் சுமார் ஒன்பது நிமிடங்களுக்குப் பார்வையாளர்களுக்கு வெறும் இரைச்சல் மட்டுமே கேட்டது, அவரது கருத்துக்கள் தெளிவாக வரவில்லை. கடந்த ஆண்டு, மெக்சிகோ வளைகுடாவை "அமெரிக்க வளைகுடா" என்று டிரம்ப் பெயர் மாற்றம் செய்ததை ஏற்க மறுத்ததால், அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) செய்தியாளர்களை வெள்ளை மாளிகையிலிருந்து நிர்வாகம் தடை செய்ததைப் போன்றே தற்போதைய சர்ச்சையும் அமைந்துள்ளது. ஒரு மாவட்ட நீதிபதி அந்த தடையைத் தற்காலிகமாக நீக்கினார். ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதை மீண்டும் அமல்படுத்தியது. மேலும் ஏ.பி (AP) நிறுவனம் இன்னமும் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வருகிறது. ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான டிரம்பின் கடந்தகால நட்பை பற்றி செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் பயணிப்பதில் இருந்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) செய்தியாளர் ஒருவரையும் டிரம்ப் தடை செய்துள்ளார். மேலும் கூடுதல் ஊடகத் தடைகள் தொடரக்கூடும் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Nagalekshmi Rajasekar is a Sub Editor at Indian Express Tamil, with five years of experience in the media industry. She brings strong editorial judgment and a people-centric approach to news storytelling, with a particular focus on international affairs and entertainment journalism. Experience: Since beginning her career in 2019, Nagalekshmi has worked across leading Tamil media organizations, steadily building expertise in content creation and news editing. Prior to joining Indian Express Tamil, she has contributed as a Content Writer at Maalaimalar and Kumudam, and served as a Sub Editor at DD Tamil. Her professional journey reflects a deep understanding of newsroom dynamics and audience-focused journalism. Expertise: Nagalekshmi is especially known for her strength in content writing, with the ability to present complex global developments in a clear and accessible manner. Her editorial interests also extend to women’s wellness, where she values responsible, empathetic, and informative storytelling. Qualification: She holds a postgraduate degree in Journalism from Manonmaniam Sundaranar University, which laid the foundation for her editorial skills and media ethics. With a people-friendly editorial style and a commitment to credible journalism, Nagalekshmi continues to contribute meaningfully to Tamil digital news media. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அட்ராசிட்டி செய்யும் டிரம்ப்; எதிர்த்து கேள்வி கேட்டா என்ட்ரி இல்ல: இனி 24 மணி நேரமும் அதிபர் தரிசனம் தான்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk