“ஜெம் வீரமணிக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி!

📅 📍 Salem, Tamil Nadu 🏷️ Politics ✍️
“ஜெம் வீரமணிக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி!

திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தவெக அரசு பதவி ஏற்று நான்கு மாதம் ஆகிவிட்டது. இந்த நான்கு மாதத்தில் சாதனை என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லாத அரசு, அவதூறுகளை பரப்பி இடைத் தேர்தலை சந்திக்கின்ற வேலையை செய்து கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை பெண்களுக்கு துளியும் பாதுகாப்பில்லாத சூழல் இந்த ஆட்சியில் இருக்கிறது. ஆளும் கட்சி சார்ந்தவர்கள் மீது தான் அதிகமான பாலியல் குற்றச்சாட்டுகள் வருகிறது. ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என்று வேதனை படக்கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது. முதலமைச்சர் ரீல்ஸ் எடுப்பதிலேயே பிஸியாக இருக்கிறார். பாலத்தின் மீது நின்று போஸ் கொடுப்பது, குடிதண்ணி குடிப்பது போல போஸ் கொடுப்பது, லண்டனில் கார் ரேஸ் பார்ப்பது போல போஸ் கொடுப்பதென ரீல்ஸ் ஆட்சிதான் நடக்கிறது. மக்களைப் பற்றி கவலை படக்கூடிய ஆட்சி நடக்கவில்லை. அவர்களால் அறிவிக்கப்படும் திட்டங்கள், கைவிடப்படும் நிலையில் தான் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. எங்கள் முதலமைச்சர் மூன்றாம் இடத்தில் தமிழ்நாட்டை வைத்திருந்தார். ஆனால் இன்று ஓடு, ஓடு என பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. மதுராந்தகத்தில், தாராபுரத்திலும் வேட்பாளர்களை மக்கள் விரட்டுகிறார்கள், மக்கள் கேள்வி கேட்கின்றார்கள் என்பதற்காக காவல் துறை பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் கொடுத்திருந்தால் கிண்டல் செய்வார்கள் என்பதால் முக்கியமான வேட்பாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். ரீல்ஸ் மூலமாக எந்த பொய்யும் நம்ப வைக்க முடியும் என்று கனவு காண்கிறார்கள். ஜெம் கிரானைட் வீரமணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் எங்களுக்கு வேண்டியவறாக இருந்தால், 6ம் தேதி கொடுத்த புகார் மீது 7ம் தேதி எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கை ட்ராப் செய்கிறோம் என சொல்லவில்லை, ஆதாரம் கிடைக்கும் வரை பொறுத்து இருக்கிறோம். ஆதாரம் கிடைத்த பின்பாக தொடர்கிறோம் என்று தான் சொல்லி இருக்கிறோம் எந்த வழக்கையும் வாபஸ் வாங்கவில்லை. எப்படி நாங்கள் குற்றவாளியாகவோ காப்பாற்றியவராகவோ ஆக முடியும். செய்திகளை கசிய விடுவது இப்போதைய அமைச்சர்கள் தான், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்சோ வழக்கில் தகவல்களை கசியவிடுவது குற்றவாளிக்கு சாதகமாக ஆகிவிடும். எங்களை பொறுத்தவரை குற்றவாளிகள் தப்பித்து விடக் விடக்கூடாது. 30 நாட்கள் கோமாவில் இருந்தார்களா அல்லது காமாக விட்டு விட்டார்களா என்பதை முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும். யாரு சம்மந்த பட்டாலும் சட்டத்தின் முன் நிறுத்தி குற்றவாளி தண்டனைக்கு உள்ளாக வேண்டும். குற்றங்கள் மூலம் அரசியல் ஆதாயம் அடையளாம் என்ற நோக்கத்தில் உள்ளது தவெக அரசு. விசாரணை விவகாராங்களை கசிய விட கூடாது. பாதி செய்தியை வெளியிட்டுவிட்டு மீதியை வெளியிடாமல் இருப்பதும் தவறு தான். 2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ஜெம் கிரானைட் உரிமையாளார் வீரமணி மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. வழகின் உண்மையான காரணம் சொல்லாமல் மக்களை குழப்பும் செயலில் தவெக ஈடுபடுகிறது. திமுக மீது பொய்யான குற்றசாட்டுகள் வைத்தாலும் – அவற்றிற்கு விளக்கம் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் – முதலமைச்சருக்கு, மாணிக்கம் தாகூர் பாராட்டு! “மின்வெட்டைப் போக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்” – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! மேட்டூர் அணை நீர் இருப்பு பாதிக்கும் கீழ் குறைந்தது: சம்பா சாகுபடி சாத்தியமா? உழவர்களுக்கு அரசின் அறிவுரை என்ன? – அன்புமணி கேள்வி? ஆசிய பெண்கள் கிரிக்கெட் போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை