நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மூன்று காட்டுமாடுகள், அங்கிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை ஆக்ரோஷமாக முட்டித் தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை இந்த காட்டுமாடுகள் கோபத்துடன் முட்டித் தள்ளின. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மூன்று காட்டு மாடுகள், அங்கிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை ஆக்ரோஷமாக முட்டி துவம்சம் செய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் முக்கியச் சாலையில் அமைந்துள்ள எஸ்.கைகாட்டி பகுதி எப்போதும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நடமாட்டம் உள்ள ஒரு முக்கியப் பகுதியாகும். இந்த நிலையில், திடீரென குடியிருப்பு மற்றும் சாலை ஓரங்களில் புகுந்த மூன்று ராட்சத காட்டுமாடுகள் (காட்டெருமைகள்), அங்கிருந்த வாகனங்களை குறிவைத்து ஆக்ரோஷமாக தாக்கத் தொடங்கின. வீடியோவைப் பாருங்கள்: "வாகனங்களை துவம்சமாக்கிய காட்டுமாடுகள்"..நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி பகுதியில் நுழைந்த மூன்று காட்டு மாடுகள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு...#Nilgiris | #Gaur | #Vehicle | #Damage | #PolimerNewspic.twitter.com/vTZjrQh9Z1 அங்கிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை இந்த காட்டுமாடுகள் கோபத்துடன் முட்டித் தள்ளின. இதில் சில கார்களின் முன்பகுதிகள் முற்றிலுமாக நசுங்கியதுடன், இருசக்கர வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. காட்டுமாடுகளின் இந்த திடீர் தாக்குதலைக் கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் செய்வதறியாது கடும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உறைந்து போயினர். சமீபகாலமாக நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் உணவு மற்றும் தண்ணீருக்காக காட்டுமாடுகள், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் ஊடுருவுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த சூழலில், எஸ்.கைகாட்டி பகுதியில் நடந்த இந்த பகீர் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக சாலையோரங்களில் வாகனங்களை பாதுகாப்பற்ற முறையில் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதைய நிலையில், வாகனங்களை காட்டுமாடுகள் துவம்சம் செய்யும் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே வேகமாக வைரலாகி வருகின்றன. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
பைக்கை பந்தாடிய காட்டுமாடுகள்; நீலகிரியில் நடுங்க வைத்த பகீர் காட்சி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk