உத்தரகாண்ட்| போலி இடஒதுக்கீடு சான்றிதழ் மூலம் MBBS சேர்க்கை.. 8 பேர் மருத்துவ படிப்பு ரத்து!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
உத்தரகாண்ட்| போலி இடஒதுக்கீடு சான்றிதழ் மூலம் MBBS சேர்க்கை.. 8 பேர் மருத்துவ படிப்பு ரத்து!

உத்தரகாண்ட் மாநிலத்தில் போலி இடஒதுக்கீடு சான்றிதழ்கள் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் சார்ந்தோருக்கான ஒதுக்கீட்டை துஷ்பிரயோகம் செய்த மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. போலி இடஒதுக்கீடு சான்றிதழ்கள் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த குற்றச்சாட்டின் பேரில், உத்தரகாண்ட் அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணையை அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கும் விரிவாக்க முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். போலி சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தராகண்ட் மாநிலத்தில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் (MBBS) இடங்களைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 'சுதந்திரப் போராட்ட வீரர்களின் சார்ந்திருப்போர்' (Freedom Fighter Dependent) சான்றிதழ்களில் தீவிரமான குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்து. அதாவது நான்கு மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு இடஒதுக்கீடு சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து மாநில ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான ஆவண சரிபார்ப்பின் போது, சான்றிதழ்களில் முறையான பதிவுகள் இல்லாததும், முகவரிகள் போலியானவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 4 மாணவிகள் மற்றும் ஒரு பெற்றோர் உட்பட 5 பேர் மீது டேராடூன் காவல்துறையினர் குற்றவியல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தசூழலில் இதன் நீட்சியாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தற்போது 8 மாணவர்கள் போலி இட ஒதுக்கீடு சான்றிதழ் மூலம் மருத்துவ சேர்க்கை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதற்குபின்னால் ஏதேனும் பெரிய நெட்வொர்க் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை