Top smartphones 2026 மேம்பட்ட கேமராக்கள், பேட்டரி ஆயுள், உற்பத்தித்திறன் (Productivity) மற்றும் ஃபோல்டபிள் டிசைன்கள் என ஒவ்வொரு முன்னணி போனும் தனித்துவமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கியுள்ளன. 2026-ஆம் ஆண்டின் சிறந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்: ஐபோன் 18 ப்ரோ முதல் கேலக்ஸி S26 அல்ட்ரா வரை ஒரு பார்வை 2026-ஆம் ஆண்டின் அதிநவீன ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சந்தையானது தற்போது வழக்கமான எல்லைகளைத் தாண்டி வியக்கத்தக்க தொழில்நுட்ப மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்தியாவில் ஐபோன் போன்ற பிரீமியம் மாடல்களின் விலை ரூ. 1 லட்சத்தை நெருங்கிவிட்ட நிலையில், செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் சாத்தியமான புதிய எல்லைகளை நோக்கி நகர்ந்துள்ளன. 2என்எம் (2nm) சிலிகான் சில்லுகள், ஆன்-டிவைஸ் செயற்கை நுண்ணறிவு (AI), மேம்பட்ட கேமரா அமைப்புகள், ஃபோல்டபிள் டிசைன்கள் (Foldable screens) மற்றும் டெஸ்க்டாப் அளவிலான செயல்திறன் என இந்த ஆண்டுக்கான தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்கியுள்ளன. விலைக்கு ஏற்ற சிறந்த அம்சங்கள், கேமரா திறன் அல்லது மடிக்கக்கூடிய வடிவமைப்பு என பல்வேறு தேவைகளின் அடிப்படையில் 2026-ன் முன்னணி ஃபிளாக்ஷிப் போன்கள் எங்கு நிற்கின்றன என்பதை இங்கு விரிவாகக் காண்போம். ஆங்கிலத்தில் வாசிக்க ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ (Apple iPhone 18 Pro) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 18 ப்ரோ மேம்பட்ட செயல்திறன், நவீன கேமரா திறன்கள் மற்றும் சிறப்பான தெர்மல் மேனஜ்மெண்ட் (Thermal Management) ஆகியவற்றுடன் அறிமுகமாகியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 164,900 ஆகும். ஆப்பிளின் அதிநவீன 2என்எம் A20 ப்ரோ சிலிகான் மற்றும் புதிய டீயோனைஸ்டு வாட்டர் வேப்பர் சேம்பர் குளிரூட்டும் அமைப்புடன் இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப விலை உயர்வாக இருந்தாலும், ஆப்பிள் சாதனங்களின் வலிமையான டிரேட்-இன் மதிப்பு மற்றும் பல ஆண்டு OS அப்டேட்டுகள் நீண்ட கால பயன்பாட்டுச் செலவைக் கணிசமாகக் குறைக்க உதவுகின்றன. இதில் 6.3 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR (120Hz) திரை மற்றும் வேரியபிள் அப்பெச்சர் கொண்ட 48MP ட்ரிபிள் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்ப்ளஸ் 15 (OnePlus 15) சிறந்த விவரக்குறிப்புகள் (Specs), அசாத்தியமான பேட்டரி ஆயுள் மற்றும் அதிவேக சார்ஜிங் ஆகியவற்றுக்காக ஒன்ப்ளஸ் 15 அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரூ. 85,999 விலையில் கிடைக்கும் இந்த போன், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப், 165Hz AMOLED டிஸ்ப்ளே, 7,300mAh பேட்டரி மற்றும் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றுடன் போட்டியாளர்களை விடக் குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்குகிறது. ஸ்டைலஸ் அல்லது ஹை-மேக்னிஃபிகேஷன் ஜூம் லென்ஸ்கள் போன்ற சில கூடுதல் அம்சங்களைத் தவிர்த்தாலும், இதன் விலைக்கும் செயல்திறனுக்கும் இடையிலான மதிப்பு மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. கூகுள் பிக்சல் 11 ப்ரோ (Google Pixel 11 Pro) தொழில்துறையில் முன்னணி கம்யூடேஷ்னல் இமேஜிங் (Computational Imaging) மற்றும் சொந்த ஜெமினி AI அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கூகுள் பிக்சல் 11 ப்ரோ உருவெடுத்துள்ளது. ரூ. 119,999 விலைக் கொண்ட இந்த போனில், கஸ்டம் 2என்எம் டென்சார் G6 பிளாட்ஃபார்ம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உள்ளூர் அளவில் சிக்கலான ஜெமினி AI செயல்பாடுகளைச் செய்ய உதவுகிறது. மேலும், 3,600-நிட் சூப்பர் ஆக்டுவா பேனல், சுத்தமான ஆண்ட்ராய்டு 17 இயங்குதளம் மற்றும் கேமரா தொகுதியைச் சுற்றியுள்ள தனித்துவமான "ஹிலைட்" அறிவிப்பு வளையம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். விவோ X300 ப்ரோ (Vivo X300 Pro) தொழில்முறை அளவிலான மொபைல் புகைப்படம் எடுக்கும் திறன் மற்றும் பிரத்யேக ஆப்டிகல் ஹார்டுவேரை விரும்பும் பயனர்களுக்காக விவோ X300 ப்ரோ உருவாக்கப்பட்டுள்ளது. ரூ. 119,999 விலையில் விற்கப்படும் இந்தப் போன், மீடியாடெக் டைமென்சிட்டி 9500 செயலி மற்றும் OriginOS 7 மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறைந்த வெளிச்சத்தில் துல்லியமான புகைப்படங்களை வழங்கும் பிரத்யேக சென்சார்கள் இதில் உள்ளதால், சிறந்த புகைப்படங்களை எடுப்பதே லட்சியமாகக் கொண்ட புகைப்படக் கலைஞர்களுக்கு இது மிகச் சரியான தேர்வாக அமைகிறது. மோட்டோரோலா ரேஸர் ஃபோல்ட் (Motorola Razr Fold) ஃபோல்டபிள் டிசைன்களை விரும்பும் பயனர்களுக்காக அறிமுகமாகியுள்ள மோட்டோரோலா ரேஸர் ஃபோல்ட், ரூ. 149,999 விலையில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 செயலி, டைட்டானியம் ஃப்ளூயிட் ஹிங், கிரீஸ் இல்லாத உள் திரை மற்றும் முழுமையான ஊடாடும் கவர் டிஸ்ப்ளே ஆகியவற்றை இது கொண்டுள்ளது. நிலையான புக்-ஸ்டைல் ஃபோல்டபிள் போன்களை விடக் குறைந்த விலையில், மடிக்கக்கூடிய திரை அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த நுழைவுப் புள்ளியாகும். சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்ஷிப்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா, ரூ. 159,999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பல்துறை கேமரா அமைப்பு, ஒருங்கிணைந்த S Pen செயல்பாடு மற்றும் சிறந்த டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை இது கொண்டுள்ளது. கஸ்டம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஃபார் கேலக்ஸி சிப், 6.9 இன்ச் டைனமிக் AMOLED 2X பேனல் மற்றும் கண்ணைக்கூசும் ஒளியைத் தவிர்க்கும் கொரில்லா கிளாஸ் ஆமோர் பாதுகாப்புடன் இது வருகிறது. மேலும், இதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய பிரைவசி டிஸ்ப்ளே அம்சம் பொது இடங்களிலும் பாதுகாப்பாகப் பணியாற்ற உதவுகிறது. சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 8 அல்ட்ரா (Samsung Galaxy Z Fold 8 Ultra) இந்தப் பட்டியலில் மிக உயர்ந்த விலையான ரூ. 199,999-க்கு விற்கப்படும் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 8 அல்ட்ரா, அதிநவீன ஃபோல்டபிள் வடிவமைப்புடன் கூடிய பிரீமியம் சாதனமாகும். அல்ட்ரா-ஸ்லிம் ஃபோல்டிங் கிளாஸ் கட்டுமானம், 8 இன்ச் அகலமான உள் திரை மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் செயலி ஆகியவற்றுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் என இரண்டின் அனுபவத்தையும் ஒரே சாதனத்தில் பெற விரும்பும் தீவிர தொழில்நுட்ப ஆர்வலர்களை இலக்காகக் கொண்டு இந்த சாதனம் களமிறக்கப்பட்டுள்ளது. (கட்டுரை எழுதியவர்: அம்ரிதான்சு முகர்ஜி) Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஒன்ப்ளஸ் முதல் சாம்சங் வரை: 2026-ல் டெக் உலகை கலக்கும் டாப் ஃபிளாக்ஷிப் போன்கள்
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk