ஒருவேளை விவரங்கள் பதிவாகாமல் விடுபட்டிருந்தால் புதிய பதிவுகளை மேற்கொள்ளவும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களில் பிழைகள் இருப்பின் அவற்றுக்கான தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன செப். 25-க்குள் EMIS தளத்தில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்: அரசுப் பள்ளி பணியாளர்களுக்கு எச்சரிக்கை அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்களை எமிஸ் (EMIS) இணையதளத்தில் துல்லியமாகப் பதிவு செய்யும்படி பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பணியாளர்களின் இடமாறுதல்கள் மற்றும் இதரப் பணிகள் அனைத்தும் இனி இத்தளம் மூலமாகவே மேற்கொள்ளப்படவுள்ளன. முன்னதாக, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் அல்லது ஒரே பணியிடத்தில் பணிபுரிந்துவரும் அலுவலகப் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதலும், அதனைத் தொடர்ந்து தகுதியுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் ஆகியவை 'கூகுள் மீட்' வழியாக நடத்தப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இந்த அனைத்துச் செயல்பாடுகளையும் எமிஸ் (EMIS) இணையதளம் மூலமாக மட்டுமே நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. குறைபாடுகளைச் சரிசெய்ய உத்தரவு தற்போது எமிஸ் (EMIS) இணையதளத்தில் பதிவாகியுள்ள பணியாளர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில், தற்போது பணியில் உள்ள பணியாளர்களின் உண்மையான எண்ணிக்கைக்கும், எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் இடையே குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, எமிஸ் இணையதளத்தில் பணியாளர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாகச் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை விவரங்கள் பதிவாகாமல் விடுபட்டிருந்தால் புதிய பதிவுகளைச் செய்யவும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களில் பிழைகள் இருந்தால் அவற்றுக்கான தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பணியாளர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகம் மற்றும் பள்ளியுடன் தொடர்புடைய பதிவுகள் தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். செப்டம்பர் 25 கடைசி நாள் பணியாளர்களின் எமிஸ் (EMIS) விவரங்களில் தேவையான புதிய பதிவுகள் மற்றும் திருத்தப் பணிகளை முடிப்பதற்கு செப்டம்பர் 25ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், பணியாளர்களின் எமிஸ் (EMIS) பதிவுகள் மற்றும் தற்போதைய பணிப்பதிவுகள் சரியாக உள்ளதா என்பதைச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை தனது அறிவிப்பில் கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் குறிப்பிடப்பட்டுள்ள கெடுவிற்குள் தங்கள் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்து முடிக்க வேண்டும். இணையதளத்தில் பதிவுகளை மேற்கொள்ளும் போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால், உடனடியாக மாவட்டக் கல்வித்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அரசுப் பள்ளி ஊழியர்களுக்கு ’எமிஸ்’ மூலம் பணியிட மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk