சென்னை பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விசிக தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொள்வதற்காக வருகை தந்தார் அரசியல் அரங்கில் புதிய விவாதம்: 'CM 2031' பதிவெண் கொண்ட டெஸ்லா காரில் களமிறங்கிய திருமாவளவன்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் ‘டி.என் 07 சி.எம். 2031’ என்ற சிறப்புக் கார் பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்வு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற “திருமா 35 – சமூகநீதியின் சகாப்தம்” பாராட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமாவளவன் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். மஞ்சள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நவீன டெஸ்லா காரில் அவர் வந்திறங்கினார். அந்தக் காரின் பதிவெண்ணில் நடுவே இடம்பெற்றிருந்த ‘CM 2031’ என்ற குறியீடு மற்றும் எழுத்துக்கள் அரசியல் அரங்கில் விவாதிக்கக்கூடிய ஒரு சுவாரஸ்யமான பேசுபொருளாக மாறியுள்ளது. வழக்கமான வாகன எண்களிலிருந்து மாறுபட்டு, முதலமைச்சரைக் குறிக்கும் ஆங்கிலக் குறியீடான 'CM' மற்றும் வரும் காலத்தைக் குறிக்கும் '2031' என்ற எண்கள் இணைந்துள்ள இந்தப் பதிவெண், அங்கு கூடியிருந்த பலரது கவனத்தையும் ஈர்த்தது. திருமாவளவன் பயணித்த இந்தக் காரின் பதிவெண் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகித் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. 'TN 07 CM 2031' என்ற பதிவெண் கொண்ட காரில் சென்ற விசிக தலைவர் திருமாவளவன்#Thirumavalavan | #VCK | #Car | #PuthiyathalaimuraiTVpic.twitter.com/JurFxgBFbB முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்ட விசிக 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில், பின்னர் அக்கூட்டணியிலிருந்து விலகி தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்தது. தவெக அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற்ற நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விசிக இணைந்தது. இக்கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளும் இணைந்தன. இக்கூட்டணி முதல்வர் விஜய் தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தில் 'CM 2026' எண் கொண்ட கார் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
’சி.எம். 2031’ காரில் வந்து இறங்கிய திருமாவளவன்: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk