வடசென்னையில் கலகலப்பு: “நீங்க என்ன சொன்னாலும் சரி சார்”: அறிவிப்பாளர் உடன் ‘ஃபன்’ செய்த அமைச்சர்கள்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️
வடசென்னையில் கலகலப்பு: “நீங்க என்ன சொன்னாலும் சரி சார்”: அறிவிப்பாளர் உடன் ‘ஃபன்’ செய்த அமைச்சர்கள்

தண்டையார்பேட்டை புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவின் போது, மைக் அறிவிப்பாளருடன் அமைச்சர்கள் கலகலப்பாகப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை தண்டையார்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவில், அமைச்சர்களின் சுவாரசியமான செயலால் அந்த இடம் சிரிப்பலையில் மூழ்கியது. சென்னை தண்டையார்பேட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள் மரிய வில்சன் மற்றும் விஜய் தமிழன் பார்த்திபன், ஒலிபெருக்கி அறிவிப்பாளரிடம் ஜாலியாக 'ஃபன்' செய்த சம்பவமும், தொடர்ந்து அரசுப் பேருந்தில் பயணம் செய்த நிகழ்வும் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. பேருந்து நிலையத்தை முறைப்படி திறந்து வைத்த அமைச்சர்கள் மரிய வில்சன் மற்றும் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர், அங்கிருந்த வசதிகளைப் பார்வையிட்டனர். தொடர்ந்து, பேருந்துகள் புறப்படுவது மற்றும் வருகை குறித்து பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிடும் கண்காணிப்பு அறைக்குச் சென்றனர். வீடியோவைப் பாருங்கள்: சரி சார்.. நீங்க என்ன சொன்னாலும் சரி சார்.. தண்டையார்பேட்டை புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த போது ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு கொடுப்பவரிடம் ஃபன் செய்த அமைச்சர்கள் மரிய வில்சன் மற்றும் விஜய் தமிழன் பார்த்திபன்..#Chennai | #TVK | #MinisterMariaWilson |… pic.twitter.com/NFv10fj8tE அங்கு மைக் பிடித்து அறிவிப்பு கொடுத்துக் கொண்டிருந்த ஊழியரிடம் சென்ற அமைச்சர்கள், எதிர்பாராத விதமாக அவருடன் ஜாலியாகப் பேசி 'ஃபன்' செய்யத் தொடங்கினர். “சரி சார்.. நீங்க என்ன சொன்னாலும் சரி சார்..” என நகைச்சுவையாகக் கூறி, அவரை உற்சாகப்படுத்தினர். அமைச்சர்களின் இந்தத் திடீர் ஜாலி மூடைக் கண்டு அங்கிருந்த அதிகாரிகளும் ஊழியர்களும் ஜாலியாக சிரித்தனர். அதன்பின்னர், இருவரும் சாதாரணமாகப் பொதுமக்களோடு மக்களாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தனர்.அமைச்சர்கள் ஒலிபெருக்கி அறையில் ஊழியருடன் கலகலப்பாகப் பேசிய இந்தச் செல்லக் குறும்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை