சமையலறையில் நேரம் மிச்சப்படுத்தணுமா? மாஸ்டர்செஃப் பங்கஜ் பதுரியாவின் இந்த 5 டிப்ஸ் போதும்; வேலை சிம்பிளா முடிஞ்சிரும்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
சமையலறையில் நேரம் மிச்சப்படுத்தணுமா? மாஸ்டர்செஃப் பங்கஜ் பதுரியாவின் இந்த 5 டிப்ஸ் போதும்; வேலை சிம்பிளா முடிஞ்சிரும்

பாதாம், முந்திரி, வால்நட், திராட்சை போன்ற உலர் பழங்களை ஒருமுறை அதிக அளவில் வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அவற்றை முறையாகச் சேமிக்காவிட்டால், காலப்போக்கில் அவற்றின் சுவை மற்றும் புத்துணர்ச்சி குறையலாம். சமையல் செய்வது என்பது உணவுப் பொருட்களைச் சேர்த்து சமைப்பது மட்டுமல்ல. காய்கறிகளை நறுக்குவது, பொருட்களைத் தயாரிப்பது, அவை சரியான பதத்தில் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது, சமைத்த பிறகு பாத்திரங்களைச் சுத்தம் செய்வது என சமையலறையில் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம். குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் தினமும் வீட்டில் சமைப்பவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் சமையலை எளிதாக்கும் சின்னச் சின்ன கிச்சன் ஹேக்குகள் பெரிதும் உதவியாக இருக்கும். அந்த வகையில், Pankaj Bhadouria சமையலறையில் அன்றாடம் ஏற்படும் சில சிரமங்களை எளிதாகச் சமாளிப்பதற்கான குறிப்புகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெங்காயத்தை விரைவாகப் பொன்னிறமாக வதக்குவது முதல் பீன்ஸை எளிதாக நறுக்குவது, பால் பொங்கி வழிவதைத் தடுப்பது, உணவக பாணி சோலே தயாரிப்பது, உலர் பழங்களை நீண்ட நாட்கள் சேமிப்பது வரை அவர் பகிர்ந்துள்ள சில பயனுள்ள குறிப்புகள் இதோ. வெங்காயத்தை விரைவாகப் பொன்னிறமாக வதக்குவது எப்படி? வெங்காயத்தை நன்றாக வதக்கி பொன்னிறமாக மாற்றுவது பல சமையல் வகைகளில் முக்கியமானதாக இருந்தாலும், அதற்கு சற்று அதிக நேரம் ஆகும். குறிப்பாக கிரேவி அல்லது பிரியாணி போன்ற உணவுகளைத் தயாரிக்கும்போது வெங்காயம் சரியான பதத்திற்கு வருவதற்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தைச் சற்று குறைக்க, வெங்காயத்தை வதக்கும்போது ஒரு சிட்டிகை உப்பு அல்லது சிறிதளவு சர்க்கரை சேர்க்கலாம் என்று பங்கஜ் பதுரியா தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெங்காயம் விரைவாக மென்மையாகி பொன்னிறமாக மாற உதவும். எனினும், சர்க்கரையை அதிகமாகச் சேர்க்காமல் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்துவது முக்கியம். பீன்ஸை வேகமாக நறுக்க இந்த ட்ரிக்! பீன்ஸை ஒவ்வொன்றாக எடுத்து நறுக்குவது சில நேரங்களில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். குறிப்பாக அதிக அளவில் பீன்ஸ் சமைக்க வேண்டியிருந்தால், இந்த வேலையே சற்று சிரமமாகிவிடும். இதற்கு பங்கஜ் பதுரியா கூறும் எளிய வழி, பீன்ஸை ஒரு கொத்தாகச் சேர்த்து அதன் இரு முனைகளையும் ரப்பர் பேண்ட் மூலம் கட்டுவது. இப்படி செய்த பிறகு ஒரே நேரத்தில் பல பீன்ஸ்களை ஒன்றாக வைத்துப் பிடித்து நறுக்க முடியும். இதனால் நறுக்கும் வேலை வேகமாக முடியும். பால் பொங்கி வழிவதைத் தடுக்க என்ன செய்யலாம்? அடுப்பில் பால் காய்ச்சிவிட்டு வேறு வேலையைப் பார்க்கச் சென்றால், சில நிமிடங்களில் பால் பொங்கி அடுப்பில் வழிவது பல வீடுகளில் நடக்கும் பிரச்சினை. இதனால் அடுப்பைச் சுத்தம் செய்யும் கூடுதல் வேலை ஏற்படும். இதற்கு ஒரு எளிய வழியாக, பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக்கரண்டியை குறுக்காக வைத்து விடலாம். பால் கொதிக்கும்போது உருவாகும் நுரை மற்றும் குமிழ்கள் உடைவதற்கு இது உதவுவதால், பால் உடனடியாகப் பொங்கி வெளியேறுவதைத் தடுக்கலாம் என்று பங்கஜ் பதுரியா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், பாலை அடுப்பில் வைத்து முற்றிலும் கவனிக்காமல் விடுவது பாதுகாப்பானது அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சோலே தயாரிக்கலாம்! உணவகங்களில் கிடைக்கும் சோலேவின் அடர் நிறமும் சுவையும் பலருக்கும் மிகவும் பிடிக்கும். அதேபோன்ற நிறத்தை வீட்டிலேயே பெற விரும்புபவர்களுக்கு ஒரு எளிய சமையல் ட்ரிக்கை பங்கஜ் பதுரியா பகிர்ந்துள்ளார். சோலேவை வேகவைக்கும்போது ஒரு டீ பேக்கை நேரடியாகவோ அல்லது சில தேயிலை இலைகளை மஸ்லின் துணியில் கட்டியோ அதனுடன் சேர்த்து கொதிக்க வைக்கலாம். இதன் மூலம் சோலேவுக்கு உணவகங்களில் கிடைப்பது போன்ற அடர் நிறம் கிடைக்க உதவும். அதேநேரத்தில், நிறத்துக்காக மஞ்சள் தூளை அதிகமாகச் சேர்க்க வேண்டாம் என்றும் இந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலர் பழங்களை மாதக்கணக்கில் புத்துணர்ச்சியாக வைத்திருக்கலாம்! பாதாம், முந்திரி, வால்நட், திராட்சை போன்ற உலர் பழங்களை ஒருமுறை அதிக அளவில் வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அவற்றை முறையாகச் சேமிக்காவிட்டால், காலப்போக்கில் அவற்றின் சுவை மற்றும் புத்துணர்ச்சி குறையலாம். உலர் பழங்களை நீண்ட நாட்களுக்கு சேமிக்க, அவற்றை காற்றுப்புகாத டப்பா அல்லது ஜிப்லாக் பையில் போட்டு ஃப்ரீசரில் வைக்கலாம் என்று பங்கஜ் பதுரியா தெரிவித்துள்ளார். இவ்வாறு சரியாக மூடி வைப்பதன் மூலம் அவற்றை நீண்ட காலத்துக்கு புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். பயன்படுத்தும்போது தேவையான அளவை மட்டும் வெளியே எடுத்து பயன்படுத்தலாம். A post shared by MasterChef Pankaj Bhadouria (@masterchefpankajbhadouria) சமையலில் சின்னத் தந்திரங்கள்... பெரிய நேரச் சேமிப்பு! சமையலறையில் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு எப்போதும் பெரிய மாற்றங்கள் தேவைப்படுவதில்லை. வெங்காயத்தை விரைவாக வதக்குவது, ஒரே நேரத்தில் பல பீன்ஸ்களை நறுக்குவது, பால் பொங்கி வழிவதைத் தடுப்பது போன்ற சிறிய விஷயங்களில்கூட சில எளிய உத்திகளைப் பயன்படுத்தலாம். அதேபோல், சோலேவின் நிறத்தை மேம்படுத்துவது மற்றும் உலர் பழங்களை முறையாகச் சேமிப்பது போன்ற குறிப்புகளும் அன்றாட சமையலில் பயனுள்ளதாக இருக்கக்கூடும். சமையலறையில் அதிக நேரம் செலவிடுபவர்கள் இதுபோன்ற எளிய கிச்சன் ஹேக்குகளைத் தெரிந்துகொள்வதன் மூலம் தங்களுடைய வேலைகளைச் சற்று சுலபமாக்கிக் கொள்ளலாம். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Mona Pachake is a journalist and writer who studied journalism at the Asian College of Journalism, Chennai. With over four years of experience in the media industry, she has been working with The Indian Express Tamil for more than three years. She specializes in lifestyle, entertainment, and food journalism, bringing a keen eye for detail and a passion for storytelling to her work. Through her writing, Mona aims to inform, engage, and connect with readers by capturing the stories behind people, trends, and culture. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை