ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் உள்ள ஐச்சி-நோகாயாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. இதனிடையே மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இலவனில் வாலரிவன் , சோனம் மாஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோர் இணைந்து மொத்தம் 1898.0 புள்ளிகளைப் பெற்று, இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தினர். இந்த நிலையில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. இன்று காலை நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில், இந்தியாவை சேர்ந்த ருத்ராங்க்ஷ் பாட்டீல், ஹிமான்ஷூ தில்லன் மறும் பார்த் மானே ஆகிய மூவர் அணி 1890.1 என்ற புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தை வென்றது. இதில் ருத்ராங்க்ஷ் 631.8 புள்ளிகளுடன் தனிநபர் தகுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதில் சீனா 1899.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும் கொரிய அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி : சாதனை படைத்த இளவேனில் வாலறிவனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து! GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன? கேரளாவில் தொடரும் கனமழை – இதுவரை 6 பேர் உயிரிழப்பு! “மக்களை பாதிக்கும் திட்டத்தைக் தமிழக அரசு கைவிட வேண்டும்” – அன்புமணி! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆசிய விளையாட்டுப் போட்டி : 3வது வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk