'வீட்டுப் பூனைக்குட்டி என நினைத்தார்கள்.. வளர்ந்தபோது அது சாதாரண பூனை அல்ல என்பது தெரியவந்தது'

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
'வீட்டுப் பூனைக்குட்டி என நினைத்தார்கள்.. வளர்ந்தபோது அது சாதாரண பூனை அல்ல என்பது தெரியவந்தது'

பட மூலாதாரம், Paola Nogales-Ascarrunz / Julie Van Collie தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் காடுகளில் வாழும் புள்ளிகள் கொண்ட சிறிய பூனை ஒன்று, புதிய காட்டுப் பூனை இனம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டுப் பூனையின் அளவுள்ள இந்தச் சிறிய பூனை, இதேபோன்ற புள்ளிகளும் வரிகளும் கொண்ட பிற காட்டுப் பூனைகளுடன் நீண்ட காலமாக குழப்பப்பட்டதால், இதுவரை ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்கு வராமல் இருந்தது. ஆனால் மரபணு ஆய்வுகள், இந்தப் பூனை உண்மையில் தனித்துவமான ஓர் இனத்தைச் சேர்ந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. உலகின் மிக மர்மமான பாலூட்டிகளைப் பற்றி நாம் இன்னும் எவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்துள்ளோம் என்பதை இந்த கண்டுபிடிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சிங்கம், புலி, சிறுத்தை போன்ற பெரிய பூனை இனங்களுக்கு கிடைக்கும் பொதுமக்களின் கவனம், மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் காடுகளில் வாழும் 'டைகர் கேட்ஸ்' எனப்படும் சிறிய காட்டுப் பூனைகளுக்குக் கிடைப்பதில்லை. இந்த புதிய கண்டுபிடிப்பு, அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பட மூலாதாரம், Paola Nogales-Ascarrunz / Julie Van Collie கோஸ்டாரிகா முதல் பொலிவியா மற்றும் அர்ஜென்டினா வரை பரவியிருக்கும் மத்திய மற்றும் தென் அமெரிக்கக் காடுகளில் இந்த சிறிய, புள்ளிகள் கொண்ட 'டைகர் கேட்ஸ்' காணப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதால், விலங்கியல் நிபுணர்களே இவற்றை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு சிரமப்படுகின்றனர். இது குறித்து பொலிவியாவின் லா பாஸ் நகரில் உள்ள 'யுனிவர்சிடாட் மேயர் டி சான் ஆண்ட்ரஸ்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாவ்லா நோகலெஸ்-அஸ்காருன்ஸ் கூறும்போது, "உலகிற்கு 'லெபார்டஸ் தில்காயோ' என்ற ஒரு புதிய பூனை இனம் கிடைத்துள்ளது ஒரு அற்புதமான முடிவு" என்றார். மேலும், "புதிய உயிரினங்களைக் கண்டறிய நாம் ஏதேனும் எரிமலைக்கோ, தீவிற்கோ அல்லது ஆழ்கடலுக்கோ செல்ல வேண்டியதில்லை; நம்மைச் சுற்றியே இன்னும் பல புதிய இனங்கள் கண்டறியப்படாமல் காத்திருக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு தற்போது இந்த புதிய இனத்தில், பொலிவியாவில் உள்ள ஒரு வனவிலங்கு காப்பகத்தில் இருக்கும் ஒரே ஒரு பூனை மட்டுமே அதிகாரப்பூர்வமாக உயிருடன் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இருப்பினும், காடுகளில் இவ்வினத்தைச் சேர்ந்த பிற பூனைகளும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தற்போது 10 வயதாகும், 'டிக்ரினோ' என்று செல்லப்பெயரிடப்பட்ட இந்த பூனைதான், விஞ்ஞானிகளை இந்த புதிய கண்டுபிடிப்புப் பாதைக்கு இட்டுச் சென்றது. பொலிவிய விஞ்ஞானியான நோகலெஸ்-அஸ்காருன்ஸ், அந்தக் காப்பகத்தில் தன்னார்வலராகப் பணியாற்றியபோது, இந்தப் பூனையின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருப்பதை கவனித்தார். உள்ளூர்வாசி ஒருவரால் காட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் பூனை, முதலில் சாதாரண வீட்டுப் பூனைக் குட்டி என்றே நினைத்து வளர்க்கப்பட்டது. ஆனால் அது வளர வளர, அதன் குணம் வீட்டுப் பூனையைப் போல இல்லை என்பது தெரியவந்தது. பொலிவியாவின் யுங்காஸ் பிராந்தியத்தின் அடர்ந்த காடுகளில் இதுபோன்ற சிறிய காட்டுப் பூனைகள் காணப்படுவதாக முன்பே தகவல்கள் வந்திருந்தன. இருப்பினும், அவை குறித்து எந்த அறிவியல் ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மர்மத்தைத் தீர்க்க, உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து நோகாலெஸ்-அஸ்கார்ருன்ஸ் பணியாற்றினார். உயிருடன் உள்ள விலங்குகளிடமிருந்தும், அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்ட மாதிரிகளிலிருந்தும் பெறப்பட்ட மரபணுத் தகவல்களைப் பயன்படுத்தி, டைகர் கேட்களின் பரிணாம வரலாற்றை அவர்கள் ஆய்வு செய்தனர். "பதிவுகளும் புகைப்படங்களும் மிகவும் குறைவு. அருங்காட்சியகங்களிலும் இதற்கான மாதிரிகள் இல்லை. யாரும் இதைத் தேடிப் பார்க்காததால், இது நமது கவனத்திலிருந்து மறைந்தே இருந்தது," என்று பிரேசிலின் ரியோ கிராண்டி டு சுல் பொன்டிஃபிக்கல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு மரபணு விஞ்ஞானி எடுவார்டோ ஐஸிரிக் கூறினார். 'கரன்ட் பயாலஜி' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு மேலும் பல ஆச்சரியமான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. இதுவரை டைகர் கேட்கள் மூன்று இனங்களாகக் கருதப்பட்ட நிலையில், அவை உண்மையில் ஐந்து தனித்தனி இனங்களாக இருக்கலாம் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அவற்றில் ஒன்றாக, பொலிவியாவில் வாழும் புதிதாக விவரிக்கப்பட்ட டில்காயா பூனை (லெபார்டஸ் டில்காயோ) அடையாளம் காணப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images இருப்பினும், இந்த பூனை இனத்தை அடையாளம் காண்பது என்பது முதல் படி மட்டுமே. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்த இணை ஆய்வாளர் கரோலைன் சார்ட்டர், ஒரு உயிரினம் என்ன, அது எங்கு வாழ்கிறது என்பதை அறியாமல் அதை பாதுகாப்பது சாத்தியமில்லை என்றார். "இவை வீட்டுப் பூனையின் அளவிற்கு ஒத்த விலங்குகள், எனவே அவற்றைப் பற்றிய அனைத்தும் நமக்குத் தெரிந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உலகின் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் இன்னும் எவ்வளவு உயிரியல் பன்மை மறைந்து கிடக்கிறது என்பதை இந்தக் கண்டுபிடிப்பு காட்டுகிறது," என்றார் அவர். காடு அழிப்பு, வாழ்விட இழப்பு மற்றும் சட்டவிரோத வேட்டை போன்ற காரணங்களால் டைகர் கேட் இனங்கள் அழிவின் ஆபத்தில் உள்ளதாகக் கருதப்படுகின்றன. ஆனால் புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த இனம், முந்தைய பாதுகாப்பு மதிப்பீடுகளில் இடம்பெறவில்லை. பட மூலாதாரம், Getty Images இந்தக் கண்டுபிடிப்பு, உலகின் பூனை குடும்பம் பற்றிய நமது புரிதலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வீட்டுப் பூனைகளும் காட்டுப் பூனைகளும் அனைத்தும் "ஃபெலிடே" எனப்படும் உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்தவை. சிறிய வீட்டுப் பூனைகளிலிருந்து மிகப் பெரிய புலிகள் வரை வாழும் அனைத்து பூனை இனங்களும் இதில் அடங்குகின்றன. தற்போது அதிகாரப்பூர்வமாக 41 பூனை இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த புதிய கண்டுபிடிப்பும், டைகர் கேட்களில் கூடுதல் தனித்தனி இனங்கள் இருக்கலாம் என்ற ஆய்வின் முடிவும், அந்த எண்ணிக்கையை 44 அல்லது அதற்கும் மேல் உயர்த்தக்கூடும். இந்த ஆய்வில் பங்கேற்காத ஸ்காட்லாந்தின் தேசிய அருங்காட்சியகங்களைச் சேர்ந்த பாலூட்டி நிபுணர் ஆண்ட்ரூ கிட்சனர், தென் அமெரிக்காவின் இந்த சிறிய புள்ளிகள் கொண்ட பூனைகளை வகைப்படுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்துள்ளது என்றார். "இவை பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதாலும், அருங்காட்சியகங்களில் குறைவான மாதிரிகளே இருப்பதாலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. மரபணு ஆய்வுகள் தொடர்ந்து புதிய இனங்களை வெளிக்கொண்டு வரும் இந்தக் காலத்திலும் கூட, அவற்றை எவ்வாறு துல்லியமாக வேறுபடுத்திப் புரிந்துகொள்வது என்பதை நாம் இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறோம்," என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை