சென்னை கூவம் ஆற்றை இயற்கை நிலைக்கு மீட்டெடுக்கவும், முதற்கட்டமாக 3 கி.மீ தூரத்திற்கு நடைபாதை, மிதிவண்டிப் பாதை, பசுமை மண்டலங்கள் அமைக்கவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகளை முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் கூவம் ஆற்றை அதன் இயற்கையான நிலைக்கு மீட்டெடுக்கும் நோக்கில், பன்னாட்டுத் தொழில்நுட்பத் தரத்திலான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிப்பு மற்றும் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு, 2026 - 2027 நிதிநிலை அறிக்கையில், சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதனடிப்படையில், இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், முதல்வர் விஜய், கூவம் ஆற்றை அதன் இயற்கையான நிலைக்கு மீட்டெடுக்கவும், நிலையான சுற்றுச்சூழல் சீரமைப்பை உறுதி செய்யவும், விரிவான திட்ட அறிக்கையைத் (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் இத்திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகள், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், பன்னாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தரநிலைகளை உறுதி செய்யும் வகையில் இதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கான பணிகள் குறித்தும் முதல்வர் விஜய் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இதன் தொடக்க நடவடிக்கையாக, கூவம் ஆற்றின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான கருத்துருவாக்கம் மற்றும் செயல் விளக்கத் திட்டம் மேற்கொள்ள, முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கி.மீ நீளமுள்ள பகுதிகளில், நடைபாதை மற்றும் மிதிவண்டிப் பாதைகள், நதிக்கரை நடைபாதைகள், பார்வையிடும் தளங்கள், பசுமைப் பகுதிகள், சமூகப் பயன்பாட்டு வசதிகள், இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு ஆய்வு செய்யப்பட்டது. சென்னை மாநகரின் நதிச்சூழலை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த பொதுவெளிகளையும், வசதிகளையும் உருவாக்கும் நோக்கில், கூவம் ஆறு மறுசீரமைப்பு பல்வேறு கட்டங்களாக ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறையுடன் முன்னெடுத்துச்செல்ல முதல்வர் விஜய், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
கூவம் ஆற்றுக்கு மீண்டும் புத்துயிர்: 3 கி.மீ தூரத்திற்குச் சிறப்பு வசதிகள்; உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோர விஜய் ஆய்வு
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk