பாலியல் வன்கொடுமைகள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜா ரகுபதி தி.மு.க-விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கடந்த 22-ம் தேதி இரவு கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு அழகு நிலையங்களில் சோதனை மேற்கொண்டனர். சும்மா வரல பாஸ்; பக்காவான சேமிப்போட வர்றேன்: சிட்னியில் மாசம் ரூ. 3.4 லட்சம் சேமித்த இந்தியரின் அசத்தல் கணக்கு அப்போது, சாரங்கபாணி தெற்கு வீதியில் செயல்பட்டு வரும் ஒரு அழகு நிலையத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு இருந்த நான்கு பெண்களை காவல்துறையினர் மீட்டு, திருச்சியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதேபோன்று, நாகேஸ்வரன் தெற்கு வீதியில் செயல்பட்டு வந்த மற்றொரு அழகு நிலையத்திலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கும் பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, நாகேஸ்வரன் தெற்கு வீதியில் செயல்பட்டு வந்த அந்த அழகு நிலையம் இயங்கி வரும் கட்டிடம், தி.மு.க நிர்வாகி ராஜா ரகுபதிக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, அணைக்கரை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கும்பகோணத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் அழகு நிலையத்தை நடத்தி வந்த மேலாளரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டால் தாக்கூர் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அழகு நிலையம் மற்றும் மதுபான பாரில் பாலியல் தொழில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை ஒன்பது பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜா ரகுபதி தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் பாலியல் விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை தி.மு.க. தலைமை எடுத்திருக்கிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வன்கொடுமை: தி.மு.க பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்; அறிவாலயம் அதிரடி
📅
📍 Thanjavur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk