ராதா வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது, புணைக்கப்பட்டது என்று அம்பிகாவும், அவரது சகோதரர் மல்லிகார்ஜூனாவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளனர். தனது உடன் பிறந்த அக்கா அம்பிகா தன்னிடம் செக் மோசடி செய்தவிட்டதாக நடிகை ராதா புகார் அளித்துள்ள நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து வரும் நடிகை அம்பிகா, ரஜினி படத்தின் ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் பாடலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். 80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் அம்பிகா மற்றும் ராதா. சகோதரிகளாக இவர்கள் இருவரும் இணைந்தும், தனித்தனியாகவும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக சிவாஜிக்கு ஜோடியாக இருவரும் நடித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு ராதா நடிப்பில் இருந்து விலகினாலும், அம்பிகா தொடர்ந்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தனது அக்கா அம்பிகாவும். சகோதரன் மல்லிகார்ஜூனாவும், தன்னிடம் இருந்து ரூ46 கோடி செக் மோசடி செய்துவிட்டதாக ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிகழ்வு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராதா வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது, புணைக்கப்பட்டது என்று அம்பிகாவும், அவரது சகோதரர் மல்லிகார்ஜூனாவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு இடையிலான இந்த வழக்கு சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை அம்பிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ரஜினி நடிப்பில் வெளியான படிக்காதவன் படத்தில் வரும் ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் பாடலை வைத்துள்ளார். படத்தல் ரஜினிகாந்த் தனது தம்பி தன்னை ஏமாற்றிவிட்டான் என்று தெரிந்து வேதனையில் இந்த பாடலை பாடுவார். அவருடன் நடிகை அம்பிகாவும் அவருக்கு ஆறுதல் சொல்வது போல் வருவார். இந்த பாடலில் 'பணம் காசை கண்டுவிட்டால் புலி கூட புள்ளை திண்ணும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி' என்ற பாடல் வரிகள் வரும். இந்த பாடலை தற்போது அம்பிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவு செய்துள்ளார். தனது தங்கையே தன் மீது மோசடி புகார் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் நடிகை அம்பிகா இதை வைத்துள்ளதாக சமூகவலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
'பணம் காச கண்டுபுட்டா...': ரஜினிகாந்த் சோகப் பாடல் வரிகளை இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்த அம்பிகா
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk