'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கில் இதுவரை நடந்தது என்ன? தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் விவாதம்

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️
'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கில் இதுவரை நடந்தது என்ன? தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் விவாதம்

பட மூலாதாரம், Getty Images (எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன) தமிழ்நாட்டில் கிரானைட் தொழிலதிபரான ஆர்.வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொது தளத்தில் இந்த வழக்கு கவனம் பெற்றுள்ள நிலையில், மாநில அரசியலிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இவ்வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்நாடு அமைச்சர்கள் அடுத்தடுத்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், இடைத்தேர்தலில் மக்களின் கவனத்தை திசை திருப்ப தவறான தகவலை அமைச்சர் நிர்மல் குமார் பரப்புவதாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்தது? 80 வயதுகளின் ஆரம்பத்தில் உள்ள ஆர்.வீரமணி என்பவர் கிரானைட் தொழிலில் இந்தியளவில் பரவலாக அறியப்படும் தொழிலதிபராவார். இவர் கிரானைட் தொழிலை மையமாகக் கொண்ட ஜெம் குழும நிறுவனங்களின் தலைவர். இந்தியளவில் கிரானைட் தொழிலில் செல்வாக்கு மிக்கவராக விளங்கும் இவர், 'ஜெம்' வீரமணி என்றே அழைக்கப்படுகிறார். இத்தொழில் சார்ந்த பல்வேறு அமைப்புகளிலும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். கிரானைட் சுரங்கம் மற்றும் அதன் நிர்வாகம் சார்ந்த பங்களிப்புகளுக்காக 50வது சுதந்திர தினத்தையொட்டி அவருக்கு இந்திய அரசு விருதும் அளித்திருக்கிறது. இவர்தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் மையமாக உள்ளார். 2025ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கு இப்போது மீண்டும் கவனம் பெறுவது ஏன்? 'தி இந்து' ஆங்கில செய்தித்தாளில் வெளியான செய்தியின்படி, கடந்தாண்டு அக்டோபர் மாதம், சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர்தான் இதுதொடர்பாக முதன்முறையாக மத்திய குற்றப்பிரிவின் (CCB) ஓர் அங்கமான பாலியல் தொழில் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தவும் அதுதொடர்பான சட்டங்களை அமல்படுத்துவதற்குமான பிரிவு (Anti-vice squad) ஒன்றில் புகார் ஒன்றை அளித்துள்ளார். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு அந்த புகாரின்படி, குழந்தைகள் நல ஆர்வலர் தன் அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னிடம் பென் டிரைவ் மற்றும் ஒரு செய்தியை உள்ளடக்கிய உறை ஒன்றை அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அச்செய்தி கூறுகிறது. அதில் உள்ள காணொளியில் நபர் ஒருவர் (பின்னர் அது வீரமணி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது) சிறுமியை அந்நபரின் உதவியாளர் சாந்தி என்பவரின் வீட்டில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக 'தி இந்து' நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த காணொளியில் இருந்த பெண் அச்சமயத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுமியாவார் என பிடிஐ செய்தி முகமை கூறுகிறது. ஆனால், காணொளியில் இருந்த பெண் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை என்று கூறி "வழக்கை முடித்துவைக்க" போலீசார் முயற்சித்தனர் என்கிறது அந்த செய்தி. இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனையிட வேண்டும் என, போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் இந்தாண்டு ஜூலை மாதம் புதிய உத்தரவுகளை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, சில ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தது. இதைத்தொடர்ந்தே இந்த வழக்கு தற்போது கவனம் பெற்றுள்ளது. வீரமணி, சாந்தி மற்றும் அவருடைய கணவரும் ஜெம் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஆகஸ்ட் மாத இறுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மூவர் மீதும் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர் என்பதால், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகாரளிக்க முன்வந்த பெண்கள் தங்களது வாக்குமூலங்களை சிறப்பு நீதிமன்றம் முன்பு பதிவு செய்ததாக காவல்துறையை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி கூறுகிறது. பட மூலாதாரம், Getty Images கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின்படி, குறுஞ்செய்தி ஒன்றில், "வீரமணியால் பாலியல் வன்கொடுமை" செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமி ஒருவர் 2003ஆம் ஆண்டு தற்கொலை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஒரு போலீஸ் அதிகாரி குறிப்பிட்டதாக அந்த செய்தி கூறுகிறது. விசாரணையின்போது வீரமணி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததாக 'தி இந்து' செய்தி கூறுகிறது. பட மூலாதாரம், TNEB இந்த வழக்கு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடந்த திமுக ஆட்சியில் இவ்வழக்கில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், "ஜெம் கிரானைட் உரிமையாளர் தொடர்பான வழக்கில் எப்போது குற்றச்சாட்டுகள் வெளிவந்தன? காணொளி ஆதாரங்கள் எல்லாம் இருந்தும் யார் சொல்லி, விசாரணையை நிறுத்தினார்கள்? அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தான் சட்டம்-ஒழுங்கை கவனித்தது. அவருக்கு இதுபற்றி தெரியாதா? அவருக்கு நன்கு தெரிந்த தொழிலதிபர் சம்பந்தப்பட்ட இந்த விஷயம், அவருடைய ஆட்சிக்காலத்தில் ஏன் மூடி மறைக்கப்பட்டது? பொள்ளாச்சிக்கு இணையான வழக்கு இது. இந்த அரசு யாருக்காகவும் வளையாது. விசாரணையில் எந்த குறைபாடுகளும் இருக்காது. ஆனால், திமுக ஆட்சியில் நடந்ததற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். யார், யாரிடம் பணம் வாங்கிக்கொண்டு வீரமணியை தப்பிக்கவிட்டது?" என்றார். அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், "இந்த வழக்கு மிக தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. கொடூரமான வழக்கு இது. கடந்த (திமுக) ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு மூடிமறைக்கப்பட்டது. அதை கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டித்தார்களா, இல்லையா? அவர்களின் நிலைப்பாடு என்ன?" என கேள்வி எழுப்பினார். பட மூலாதாரம், NR Elango/X இதுதொடர்பாக, திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறுகையில், "ஜெம் வீரமணி மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கு திமுக ஆட்சியில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டதாக ஒரு கருத்தைப் பரப்பியிருக்கிறார் அமைச்சர் நிர்மல் குமார். அது முற்றிலும் தவறான கருத்தாகும்." என்றார் "7.10.2025-ல் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு அப்போது காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, வீடுகள் சோதனையிடப்பட்டு, கிடைத்திருந்த ஆதாரங்களை வைத்து மேல்விசாரணை செய்து, உரிய ஆதாரங்கள் கிடைக்காததால், நீதிமன்றத்தில் இதுவரை செய்த புலன் விசாரணையில் உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நாங்கள் கைவிடவில்லை. உரிய ஆதாரங்களைத் திரட்டும் வரை இந்த வழக்கினுடைய மேல்விசாரணையைத் தள்ளி வைத்திருக்கிறோம் என்றுதான் குறிப்பிட்டு, போக்சோ நீதிமன்றத்தில் குறிப்பாணை தாக்கல் செய்திருக்கிறார்கள்." என தெரிவித்தார். மேலும், "இதுபோன்ற வழக்குகளில் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவதே, நிர்மல் குமார் எப்படியாவது குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றிவிடலாமா என்ற எண்ணத்தோடு பேசுவதாகத்தான் தெரிகிறது. இல்லாத அரசியல் அழுத்தங்களை இருப்பதாகச் சொன்னால், பாதிக்கப்பட்ட அந்த நபர்கள், இந்த வழக்கில் ஏதோ மிகப்பெரிய பிரச்னை இருப்பது போல் இருக்கிறது என்று கருதி, அவர்கள் சாட்சியம் அளிக்காமல் அதிலிருந்து விலகிச் செல்வதற்காகவே, நிர்மல் குமார் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் காப்பாற்றுவதற்காகவே இத்தகைய கருத்துகளை வெளியிடுவதாக நாங்கள் நம்புகிறோம்." என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், "வீரமணி மீது ஏற்கெனவே 2013ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இதேபோன்று புகார் எழுப்பப்பட்டு அது என்னவானது என்பதே தெரியவில்லை. கடந்த மு.க. ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலும் புகார் பதிவு செய்யப்பட்டு, அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர். இப்போது அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அவர் மீது எல்லா ஆட்சிக் காலங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்கிறது. இது மிகப்பெரும் அளவில் நடந்திருக்கும் பாலியல் மோசடி. எனவே, இதில் வீரமணி மட்டும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என நம்புவதற்கு வாய்ப்பில்லை." என்றார். மேலும், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மூடிமறைக்க முயற்சித்தவர்கள் யார் என்பதெல்லாம் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர், "போக்சோ வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவிர்த்து கூடுதலாக தலையிட்ட வேறொரு கட்சி எது? குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக இந்த கட்சியும் ஜனநாயக மாதர் சங்கமும் தொடர்ச்சியாக போராடுகின்றன. இதில் எங்களின் கருத்து என்ன என அமைச்சர் (ராஜ்மோகன்) கேட்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது." என்றார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜெம் வீரமணி தரப்பின் கருத்துகளை அறிய முயன்றோம். இந்த கட்டுரை வெளியாகும் வரையிலும் அந்த முயற்சி பலன் தரவில்லை. அவர்கள் தரப்பில் பதில்கள் தரப்படும் பட்சத்தில் இந்த கட்டுரையில் சேர்க்கப்படும். மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை