திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த நத்தம் ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர் வித்யா பாரதி (26). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் காலை நீதிமன்றப் பணிக்காக வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் சென்னையை நோக்கிப் புறப்பட்டார். அவர் காரனோடை மேம்பாலத்தில் சென்ற போது, சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பழுதாகி நின்றுள்ளது. இதனை கவனிக்காமல் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வித்யா பாரதி, எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் மோதி நிலைதடுமாறி கீழே விளைந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, செங்குன்றம் அடுத்த நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி வித்யா பாரதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம், லாரி பழுதாகி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த விதம், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடும் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதா? – டிடிவி தினகரன் கண்டனம்! சிவகார்த்திகேயனின் SK27: ராம் குமார் இயக்கத்தில் படப்பிடிப்பு தொடக்கம்! “மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது” – மு.வீரபாண்டியன் Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
திருவள்ளூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk