சிஎஸ்கே புதிய பயிற்சியாளர் ஜாகீர் கானுக்கு தோனியுடனான நட்பு எவ்வாறு உதவும்?

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
சிஎஸ்கே புதிய பயிற்சியாளர் ஜாகீர் கானுக்கு தோனியுடனான நட்பு எவ்வாறு உதவும்?

பட மூலாதாரம், Getty Images சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுவந்த ஸ்டீஃபன் ஃபிளெமிங் விலகியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முதல் முறையாக ஒரு ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார் ஜாகீர் கான். அவர் இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக, அந்த நிறுவன அணிகளின் உலகளாவிய தலைவராக, லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான அவருடைய ஒப்பந்தம் ஒரு ஆண்டுக்கானது. இந்த முடிவு சூப்பர் கிங்ஸ் அணியில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது, ஜாகீர் கானால் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த முடியும், அவருக்கு இருக்கும் சவால்கள் என்ன? அனைத்தையும் அலசுவோம். பட மூலாதாரம், Getty Images ஐபிஎல் அணிகளில் நிலைத்தன்மையை விரும்பும் அணியாக அறியப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்தத் தொடர் தொடங்கியது முதல் இதுவரையிலும் 2 தலைமைப் பயிற்சியாளர்களே அந்த அணியை வழிநடத்தியிருக்கிறார்கள். 2008 முதல் சீசனில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த எரிக் சிம்மன்ஸ் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த சீசனில் சிஎஸ்கே அணியின் அங்கமாக இருந்த ஃபிளெமிங், 2009 சீசனுக்கு முன்பாக ஓய்வு பெற்றுவிட்டு, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது முதல் அவரே அந்தப் பொறுப்பை வகித்துவந்தார். 5 கோப்பைகள் வென்று ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளுள் ஒன்றாக வலம் வந்து கொண்டிருந்த சிஎஸ்கே, கடந்த சில சீசன்களாக தொடர்ந்து மோசமான முடிவுகளை சந்தித்து வந்தது. 2025 சீசனில் பத்தாவது இடம் பிடித்த அந்த அணி, 2026இல் எட்டாவது இடம் பிடித்தது. களத்தில் அணியின் செயல்பாடு, ஏலத்தில் நிர்வாகத்தின் செயல்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இந்தத் தடுமாற்றங்களின் போது கேப்டன் மாறியதும், காயத்தால் தோனி ஆடாததும், ஃபிளெமிங் மீதான அதிருப்தியை அதிகப்படுத்தின. 'தோனி இல்லாமல் ஃபிளெமிங்கால் வெற்றி பெற முடியவில்லை' என்று அந்த அணி ரசிகர்களில் ஒருதரப்பினர் வாதிட்டனர். எஸ்ஏ20 தொடரின் ஜோபெர்க் சூப்பர் கிங்ஸ், மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) தொடரின் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய சூப்பர் கிங்ஸ் அணிகளும் கோப்பை வெல்லத் தவறின. அந்த அணிகளுக்கும் ஃபிளெமிங்கே பயிற்சியாளராக செயல்பட்டு வந்ததால் அவர் மீதான விமர்சனங்கள் பூதாகரமாகின. இந்நிலையில் ஜூலை 13 அன்று சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் அனைத்து அணிகளின் பயிற்சியாளர் பதவியில் இருந்தும் ஃபிளெமிங் விலகியதாக அறிவிக்கப்பட்டது. End of அதிகம் படிக்கப்பட்டது இப்போது அந்த இடத்தைத்தான் ஜாகீர் கான் நிரப்புகிறார். என்னதான் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தாலும், ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் உலகில் ஒரு வெற்றிகரமான பயணத்தின் அச்சாணியாக விளங்கியிருக்கிறார் ஃபிளெமிங். பலரும் உதாரணமாகக் கருதக்கூடிய நல்லதொரு அணிக் கட்டமைப்பை அவர் உருவாக்கியிருந்தார். அந்த இடத்தை நிரப்புவது எந்தப் பயிற்சியாளருக்கும் அவ்வளவு எளிதாக இருக்காது. அதுவும், முதல் முறையாக பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் ஜாகீருக்கு நிச்சயம் அது சவாலாகவே இருக்கும். கடந்த 3 சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதிபெறவில்லை என்பதால், ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஜாகீர் கான் அதையும் சமாளிக்கவேண்டும். பட மூலாதாரம், Chennai Super Kings/Facebook பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு ஜாகீர் கான் 2027 ஐபிஎல் தொடருக்காக மட்டுமே சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஒப்பந்தம் அதன் பிறகும் நீட்டிக்கப்படலாம் என்றாலும், உறுதித் தன்மை இல்லாத இந்த ஒப்பந்த காலம் அவருக்கு நெருக்கடியாகவும் இருக்கலாம். இதுபற்றி தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், இந்த ஒரு வருட ஒப்பந்த முடிவு தனக்கு ஆச்சரியமளிப்பதாகக் கூறினார். "இப்படி வைத்துக் கொள்வோம்... கார்த்திக் ஷர்மா நம்பர் 4 பொசிஷனில் நன்றாக விளையாடுகிறார், அவருக்கு தொடர் வாய்ப்புகள் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று சொல்கிறோம். ஜாகீர் அதை செய்கிறார். 4-5 போட்டிகளுக்குப் பிறகு கார்த்திக் ஷர்மா சரியாக விளையாடவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்... அப்போது ஜாகீர் என்ன நினைப்பார் - நமக்கு ஒரு வருட ஒப்பந்தம் தான். வெற்றியே முக்கியம் என்று நினைத்து அவர் கார்த்திக்கை வெளியே எடுத்துவிடுவார். அதுவே 3-4 ஆண்டு ஒப்பந்தம் என்றால், அவர் அந்த காலகட்டத்துக்கு ஏற்ப அணியை கட்டமைக்க வேண்டும் என்று கார்த்திக்குக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்க முடியும். இந்த ஒப்பந்த காலகட்டம் என்பது பெரிய தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. ஜஹீருக்கு ஓராண்டு ஒப்பந்தம் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று அஷ்வின் கூறினார். அஷ்வினைப் போல் முன்னாள் சிஎஸ்கே வீரர் அனிருதா ஶ்ரீகாந்த் கூட இந்த ஒப்பந்தம் தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவே கூறினார். தன் தந்தையும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் உடன் தங்கள் யூடியூப் சேனலில் பேசிய அவர், தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அதைப் பற்றிப் பேசிய ஶ்ரீகாந்த், மெகா ஏலம் சைக்கிளை மனதில் வைத்து இப்படி முடிவெடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினார். அஷ்வின் சொன்னதைப் போல் இந்த குறுகிய கால ஒப்பந்தம் ஜாகீர் கானின் முடிவுகளில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கவேண்டும். கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர் போன்ற இளம் வீரர்களுக்கு கடந்த ஆண்டு பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அவை இம்முறை கொடுக்கப்படுமா, இல்லை வெற்றியை எதிர்நோக்கி சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்று பார்க்கவேண்டும். பட மூலாதாரம், Getty Images ஜாகீர் கான் பயிற்சியாளராக பதவியேற்றிருப்பது சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பல வகையில் பலப்படுத்தும் என்று அஷ்வின், ஶ்ரீகாந்த், அனிருதா ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள். ஜாகீர் பற்றிப் பேசிய கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த், "ஜாகீர் உலகக் கோப்பை வென்றிருக்கிறார். 2011 உலகக் கோப்பையை வென்றதற்கு அவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மும்பை இந்தியன்ஸின் கிரிக்கெட் இயக்குநராக இருந்திருக்கிறார். அப்போது அவர்கள் அடுத்தடுத்து 2 ஆண்டுகள் சாம்பியன் பட்டம் வென்றார்கள். ஐபிஎல் தொடரை உள்ளே வெளியே நன்கு அறிந்தவர் அவர்." என்று கூறினார். "ஜஹீருடைய கிரிக்கெட் அறிவு அற்புதமானது. நான் இந்திய தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த அந்த சில ஆண்டுகளில் அவரோடு உரையாடியதில் நான் புரிந்துகொண்டது இதுதான் - அவர் விவேகமான ஒருவர். என்னைப்போல் பேசிக்கொண்டே இருக்கும் ஆள் கிடையாது. குறைவாகப் பேசினாலும், அவருடைய வேலையை சரியாகச் செய்வார். தகவல்களை சிறப்பாகப் பரிமாறக்கூடியவர். சமநிலை தவறாத ஆள். அதுமட்டுமல்ல அவருக்கு சென்னை ஆடுகளம் நன்கு தெரியும். சூப்பர் கிங்ஸுக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருக்கக்கூடியது அவர்களுடைய பந்துவீச்சு. அதை சரிசெய்ய இவர் மிகச் சரியான ஆள்." என்றும் அவர் கூறினார். இளம் வீரர்கள் நிறைந்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஜாகீர் கான் நன்கு பலம் சேர்ப்பார் என்று தங்கள் யூடியூப் சேனலில் தெரிவித்தார் அனிருதா. "2022இல் அவர் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் குளோபல் கிரிக்கெட் ஹெட் பொறுப்பை வகித்தபோது திறமைகளைக் கண்டறியும் ஸ்கௌட்டிங் அணியிலும் தாக்கம் ஏற்படுத்தினார். ஆகாஷ் மத்வால், நேஹல் வதேரா, திலக் வர்மா போன்ற வீரர்களை கண்டறிந்ததில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. இன்று ஐபிஎல் அரங்கில் வைபவ் சூர்யவன்ஷி போன்ற பெரிய அளவு தெரிந்திடாத வீரர்கள் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான வீரர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய ஒருவர் இருப்பது சூப்பர் கிங்ஸுக்கு சாதகமான விஷயம்." என்றும் அவர் கூறினார். அதோடு, தோனியுடனான ஜாகீர் கானின் உறவும் சூப்பர் கிங்ஸுக்குப் பலம் என்று பலரும் கருதுகிறார்கள். "தோனிக்கும், ஜாகீருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. இப்போது அணியில் ஒரு விஷயம் செட் ஆகாது என்றால் அதை ருதுராஜ் போன்ற ஒருவரால் சொல்ல முடியாது. ஆனால், தோனியின் தோள் மேல் கைபோட்டு அதை இயல்பாக ஜாகீரால் சொல்ல முடியும். அவர்களால் நட்புறவோடு இந்த உரையாடல்களை மேற்கொள்ள முடியும். அது அணிக்கு மிகவும் நல்ல விஷயம்" என்று தன் யூடியூப் சேனலில் கூறினார் ரவிச்சந்திரன் அஷ்வின். இதே கருத்தைத்தான் ஶ்ரீகாந்தும் தெரிவித்தார். ஐபிஎல்லில் சமீபத்திய ஆண்டுகளில் தடுமாறும் சூப்பர் கிங்ஸ் அணியில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அந்த அணி சமநிலையற்ற ஒன்றாக இருக்கிறது. அவற்றையெல்லாம் ஜாகீர் கான் எப்படி சமாளித்து ஒரு அணியைக் கட்டமைக்கப்போகிறார் என்பதைப் பார்க்கவேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை