சென்னை உயர் நீதிமன்ற வேலை வாய்ப்பு; 115 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழு விபரங்கள் இங்கே சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் தரவு உள்ளீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 115 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். DATA ENTRY OPERATOR காலியிடங்களின் எண்ணிக்கை: 115 கல்வித் தகுதி: B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science) / B.Tech / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech / M.Sc (IT). படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.09.2026 அன்று 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 15,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/esk_rec என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு; 115 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk