ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். படிச்சவங்க இப்படி ஒரு தொழில் செய்வாங்களா? காளான் வளர்த்து ரூ.15 கோடி சம்பாதித்த நண்பர்கள்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Business ✍️
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். படிச்சவங்க இப்படி ஒரு தொழில் செய்வாங்களா? காளான் வளர்த்து ரூ.15 கோடி சம்பாதித்த நண்பர்கள்!

Mushroom farming 2012-ஆம் ஆண்டில் நவீனைத் திருமணம் செய்துகொண்ட பூனம் ஷர்மா, ஐஐடி கரக்பூர் பட்டதாரி ஆவார். வங்கித்துறையில் சிறப்பாகச் செயலாற்றி வந்த அவர், தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்த காளான் வணிகத்தில் இணைந்தார். கைநிறைய சம்பளம் தரும் வேலையைவிட்டு, காளான் வளர்ப்பில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த நண்பர்கள் பொறியியல், வங்கி, ஆலோசனைத் துறைகளில் நல்ல வேலை, வெளிநாட்டில் பணியாற்றும் வாய்ப்பு என வாழ்க்கை நன்றாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால், சிறுவயது முதல் நண்பர்களாக இருந்த 4 பேர், தங்களது வேலையை விட்டுவிட்டு காளான் வளர்ப்பில் இறங்கினர். பல தோல்விகளையும், கொரோனா காலத்தில் ரூ.1.5 கோடி இழப்பையும் சந்தித்த அவர்கள், இன்று ரூ.15 கோடி வர்த்தகம் செய்யும் காளான் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். ஃபரிதாபாத்தைச் சேர்ந்த நவீன் பட்வால், அமித் குமார் சர்மா ஆகிய இருவரும் 2006-ம் ஆண்டு இந்தப் பயணத்தைத் தொடங்கினர். அப்போது நவீனுக்கு 27 வயது. கணினிப் பொறியியல் பட்டம் பெற்றிருந்தார். அமித், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் இயந்திரப் பொறியியல் படித்திருந்தார். இருவரும் பொறியியல் துறையில் வேலைக்குச் செல்லும் நிலையில் இருந்தபோதும், தொழில் தொடங்க முடிவு செய்தனர். அதற்காக உத்தரகண்டின் ரூற்கி பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி காளான் வளர்க்கத் தொடங்கினர். ஆங்கிலத்தில் வாசிக்க 2006-ல் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளைத் தேடி நவீனும் அமித்தும் டேராடூனின் செலாகுய் பகுதிக்குச் சென்றனர். அங்கு ஒரு தொழிற்சாலைக்குச் சென்றபோது, காளான் வளர்ப்பில் ஈடுபட்டிருந்த ஒருவர் அவர்களை எச்சரித்தார். “காளான் வளர்ப்பில் இறங்கினால் 90 சதவீதம் தோல்வியடைய வாய்ப்புள்ளது” என்று அவர் கூறியதாக நவீன் நினைவுகூருகிறார். ஆனால், நண்பர்கள் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டனர். தங்களிடம் இருந்த சேமிப்பு பணத்தைப் பயன்படுத்தி ரூர்கியில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கினர். அதன்பின் வங்கியில் ரூ.1.35 கோடி கடனுக்கும் விண்ணப்பித்தனர். அந்த அளவுக்கு பெரிய கடன் வாங்குவது குறித்து பெற்றோர்களுக்கே அச்சம் இருந்தது. தொழில் தோல்வியடைந்தால் வீடு, நிலம் என அனைத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதே அவர்களின் கவலை. சிறுவயது நினைவில் தொடங்கிய காளான் ஆர்வம் நவீனின் குடும்பம் உத்தரகண்டின் பவுரி கர்வால் பகுதியைச் சேர்ந்தது. அங்கு மக்கள் நீண்ட காலமாக காட்டில் வளரும் காளான்களைச் சேகரித்து வந்துள்ளனர். சிறுவயதில் அங்கு ‘குச்சி’ எனப்படும் காட்டுக் காளான்களைப் பார்த்து வளர்ந்த நவீனுக்கு, காளான் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஒரு புதிய வகை காளான் விஷமானதா, இல்லையா என்பதை கிராமத்தில் எப்படி கண்டுபிடிப்பார்கள் என்று தனது தந்தையிடம் அவர் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை, “கிராமத்தில் வயதில் மூத்தவரிடம் கொடுத்து சாப்பிடச் சொல்வோம். அவர் நன்றாக இருந்தால் அது விஷம் இல்லை” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இப்போது காளான்களைப் பாதுகாப்பாக பரிசோதித்து வளர்ப்பதாக நவீனின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஒரு தவறால் மொத்த காளான்களும் வீண் காளான் வளர்ப்புக்கு சரியான வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் மிகவும் முக்கியம். சிறிய மாற்றம்கூட காளான்களின் வளர்ச்சியை பாதிக்கும். ஒருமுறை தரமற்ற புளிக்கவைக்கப்பட்ட உரத்தை காளான் விதையுடன் பயன்படுத்தியதால், முழு உற்பத்தியும் தோல்வியடைந்தது. பல நாட்கள் காத்திருந்தும் ஒரு காளான்கூட கிடைக்கவில்லை. இதுபோன்ற பல தோல்விகளுக்குப் பிறகு, காளான் பண்ணையில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன அமைப்புகள் மற்றும் இயந்திரங்களை நவீனே நிறுவத் தொடங்கினார். பல முயற்சிகளுக்குப் பிறகு 2011-ம் ஆண்டில் உற்பத்தி நிலையானது. காளான் விதை தயாரிப்பிலும் அவர்கள் புதிய முறைகளைப் பயன்படுத்தினர். பருத்திக்குப் பதிலாக பாலிஃபில் பயன்படுத்துவது குறித்து நவீனும் அமித்தும் ‘Mushroom Research’ என்ற இதழில் ஆய்வுக் கட்டுரையும் வெளியிட்டுள்ளனர். ஐஐடி பட்டதாரியும் வங்கிப் பணியை விட்டார் 2012-ம் ஆண்டு நவீன், பூனம் சர்மாவைத் திருமணம் செய்துகொண்டார். நவீன் மற்றும் அமித்துடன் ஏற்கெனவே பழக்கமிருந்த பூனம், ஐஐடி காரக்பூரில் படித்தவர். அவர் அப்போது வங்கித் துறையில் நல்ல பணியில் இருந்தார். ஆனால், காளான் தொழிலை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்ததால், 2013-ல் அந்தப் பணியையும் விட்டுவிட்டு நண்பர்களுடன் இணைந்தார். மற்றொரு நண்பரான சன்னி குப்தாவும் இதேபோன்ற பாதையைத் தேர்ந்தெடுத்தார். 2009-ம் ஆண்டு ஐஐஎம் கொல்கத்தாவில் பட்டம் பெற்ற சன்னி, தி பேங்க் ஆஃப் நியூயார்க் மெலன் நிறுவனத்தில் சென்னை மற்றும் அமெரிக்காவின் ஜெர்சி சிட்டியில் தயாரிப்பு மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றினார். நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு இந்தியா திரும்பிய அவரை, காளான் தொழிலின் வருமான வாய்ப்புகளை நவீன் விளக்கி இந்தத் தொழிலில் சேரச் செய்தார். “எங்களை நண்பர்களாகத் தொடர்ந்து வைத்திருக்க நவீன் போட்ட திட்டம்தான் இந்தத் தொழில்” என்று பூனம் நகைச்சுவையாகக் கூறுகிறார். கொரோனா காலத்தில் ரூ.1.5 கோடி இழப்பு 2013-ம் ஆண்டு பூனம் மற்றும் சன்னி இணைந்த பிறகு, நான்கு நண்பர்களும் தங்களது குடும்பங்களுடன் ரூர்கி பண்ணையிலேயே வசிக்கத் தொடங்கினர். காலப்போக்கில் அவர்கள் இரண்டாவது பண்ணையையும் தொடங்கினர். ஒரு கட்டத்தில் தினமும் 4 முதல் 5 டன் வரை காளான்களை உற்பத்தி செய்தனர். ஆனால், கொரோனா பெருந்தொற்று அவர்களின் தொழிலுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. ஊரடங்கால் காளான்களுக்கான தேவை திடீரென சரிந்தது. சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் சுமார் 100 டன் காளான்களை தூக்கி எறிய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் ரூ.1.5 கோடி இழப்பு ஏற்பட்டதாக நவீன் மதிப்பிடுகிறார். மேலும், அந்த காலகட்டத்தில் காளான்கள் காய்கறிகள் அல்லது விவசாயப் பொருட்கள் என்ற வகைப்பாட்டில் முறையாகக் கருதப்படாததால், அவற்றை ஏற்றிச் சென்ற வாகனங்களும் பல இடங்களில் செல்ல முடியவில்லை. இதன் மூலம் ஒரு முக்கியமான பாடத்தை அவர்கள் கற்றுக்கொண்டனர். “மொத்த விற்பனைச் சந்தையை மட்டுமே நம்பியிருக்க முடியாது. நேரடியாக வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தனர். இந்த அனுபவத்துக்குப் பிறகு 2022-ம் ஆண்டு ‘Welkins’ நிறுவனத்தின் கீழ் ‘பிளானட் மஷ்ரூம்’ (Planet Mushroom) என்ற பிராண்டைத் தொடங்கினர். வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக காளான்களை விற்பனை செய்வதே இதன் முக்கிய நோக்கம். இன்று பெருநகரங்களில் உள்ள பல முக்கிய ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கும் அவர்கள் காளான்களை வழங்குகின்றனர். அதே நேரத்தில், அவர்களின் மொத்த உற்பத்தியில் சுமார் 90 சதவீதம் இன்னும் பட்டன் காளான்களாகவே உள்ளது. மொத்த விற்பனை சந்தை, குறிப்பாக இடைத்தரகர்கள் மூலமான விற்பனை, தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது சிறப்பு வகை காளான்களின் உற்பத்தியை அதிகரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஷிடாகே முதல் லயன்ஸ் மேன் வரை ஷிடாகே, கிங் ஆய்ஸ்டர், கார்டிசெப்ஸ், மோரல்ஸ், போர்டோபெல்லோ, கிரெமினி, ஆய்ஸ்டர், மில்கி மஷ்ரூம், லயன்ஸ் மேன் உள்ளிட்ட பல்வேறு வகை காளான்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய விரும்புகின்றனர். இந்த வகை காளான்களுக்கான தேவை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று நவீன் நம்புகிறார். குறிப்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அவர் கூறுகிறார். உணவகங்களில் புதிய வகை காளான்களை பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்பட்டால், முதலில் அதன் சுவையை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வார்கள். பின்னர் அவற்றை வீட்டிலேயே சமைக்க முயற்சிப்பார்கள் என்பது அவரது கருத்து. ஒரு சமையல்காரர் மாற்றிய பார்வை ஷிடாகே காளானை உற்பத்தி செய்துகொண்டிருந்தபோதும், அதன் வாசனை நவீனுக்கு பிடிக்கவில்லை. சுமார் ஓராண்டு அதனை உற்பத்தி செய்தும் அவர் சாப்பிட்டதில்லை. கோவாவில் உள்ள ஒரு சைவ உணவகத்தின் சமையல்காரர் சதீஷ் ஸ்ரீதர், புதிய ஷிடாகே காளானை வதக்கி நவீனுக்கு பரிமாறிய பிறகுதான் அவரது எண்ணம் மாறியது. அதைச் சாப்பிட்ட பிறகு, காளானின் வாசனை தன்னை ஏன் தொந்தரவு செய்தது என்பதற்குப் பதிலாக, அது உணவுக்கு பூண்டு போன்ற கூடுதல் சுவையை வழங்குவதை அவர் புரிந்துகொண்டார். “சில நேரங்களில் பிரச்சினை காளானில் இல்லை. புதிய சுவையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பழகுவதுதான் சவால்” என்கிறார் நவீன். தங்களது 13 வயது மகள் ஷனாயா சூட்டிய பெயரான ‘பிளானட் மஷ்ரூம்’ இன்று ரூ.15 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. பொறியியல், வங்கி, மேலாண்மை ஆலோசனை என வெவ்வேறு துறைகளில் இருந்த நான்கு நண்பர்களின் இந்தப் பயணம், தொழில் தொடங்குவதற்கு ஒரே ஒரு கல்விப் பின்னணி தேவையில்லை என்பதையும், ஒரு புதிய துறையில் தொடர்ந்து கற்றுக்கொண்டு செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை