ஆயுள் காப்பீடு என்பது மிகவும் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பணப்பலன்களில் 7% மட்டுமே மரணத்திற்கு பிந்தைய காப்பீடாக வழங்கப்படுவதும் 93% தொகை வாழும்போதே எதாவது ஒரு காரணத்திற்காக வழங்கப்படுவதும் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் ஒவ்வொரு 100 ரூபாய் பணப்பலனிலும் 39 ரூபாய் முன்கூட்டியே முடித்துக்கொள்வது அல்லது குறிப்பிட்ட ஒரு தொகையை திரும்பப்பெறுவது என்ற வகையில் செல்கிறது. காப்பீடு காலம் முடிந்தபின்னர் காப்பீடுதாரர் உயிரோடு இருக்கும் பட்சத்தில் அவருக்கு முதிர்ச்சித்தொகையாக வழங்குவது என்ற வகையில் 37 ரூபாய் செல்கிறது. காப்பீடுதாரர் மரணத்திற்கு பின் அவரது குடும்பத்திற்கு தரப்படும் பணப்பலன் என்ற வகையில் 7 ரூபாய் மட்டுமே செலவிடப்படுகிறது. ஒருவரது ஆயுட்காலத்திற்கு பின் அவரை சார்ந்தோருக்கு பணப் பலன் என்பதே ஆயுள்காப்பீட்டின் உண்மையான நோக்கம் என்ற நிலையில் அதற்காக 7% அதாவது 7 ரூபாய் மட்டுமே செல்கிறது. ஓய்வூதிய திட்டங்களின் கீழ் தொடர்ச்சியாக அளிக்கப்படுவது என்ற வகையில் 4 ரூபாய் செலவிடப்படுகிறது. இதர காப்பீடு பயன்கள் வகையில் 13 ரூபாய் செலவிடப்படுகிறது. இந்திய காப்பீட்டு நிறுவனங்களின் ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏ புள்ளிவிவரங்களில் இது தெரியவருகிறது.
ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் செலவழிப்பு முறை.. ஒவ்வொரு 100 ரூபாயும் எப்படி செலவாகிறது?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk