ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களை வென்ற இளவேனில் வாலறிவன்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களை வென்ற இளவேனில் வாலறிவன்

பட மூலாதாரம், X/PMOINDIA ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கங்கள் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி, மற்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துப்பாக்கிச் சுடுதல் களத்தில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை இளவேனில் வாலறிவன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தலான தொடக்கத்தைத் தந்தார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனிநபர் பிரிவின் இறுதிப் போட்டியில், ஜப்பானிய வீராங்கனையுடன் மிகக் கடுமையாக போராடி, நூலிழையில் தங்கப் பதக்க வாய்ப்பை இழந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஆரம்பம் முதலே அதிரடியாகச் செயல்பட்ட 27 வயது இளவேனில், இறுதிப் போட்டியின் பெரும்பாலான சுற்றுகளில் முன்னிலை வகித்து தங்கப் பதக்கத்தை நோக்கி நகர்ந்தார். 20 சுற்றுகளின் முடிவில் 211.1 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்திருந்தார். இருப்பினும், இறுதி இரண்டு சுற்றுகளுக்கு முந்தைய தகுதி நிலைகளில் உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவோடு விளையாடிய ஜப்பானின் ஹினாட்டா டாய்ச்சி, 232.2 - 231.9 என்ற புள்ளிக் கணக்கில் இளவேனிலை முந்தி முதலிடத்தைப் பிடித்தார். கடைசி இரண்டு சுற்றுகளில், மிகுந்த அழுத்தத்திற்கு மத்தியிலும் இளவேனில் 10.4 மற்றும் 10.1 புள்ளிகளைப் பெற்றார். ஆனால், ஜப்பானின் ஹினாட்டா 10.6 மற்றும் 10.2 புள்ளிகளைக் குவித்து, ஒட்டுமொத்தமாக 253.0 புள்ளிகளுடன் புதிய ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கத்தை தட்டிச் சென்றார். இளவேனில் 252.4 புள்ளிகளுடன், வெறும் 0.6 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கத்தை நழுவவிட்டு, வெள்ளியைத் தன்வசப்படுத்தினார். பட மூலாதாரம், Elavenil Valarivan முன்னதாக அன்றைய தினமே நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மகளிர் அணிப் பிரிவிலும், இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோரை உள்ளடக்கிய இந்தியக் கூட்டணி 1898.0 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்று, நடப்புத் தொடரில் இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே நாளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இளவேனில் சாதனை படைத்துள்ளார். கடந்த 2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டு மற்றும் முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் ஏமாற்றத்தைச் சந்தித்த இளவேனிலுக்கு, இதுவே அவரது முதல் தனிநபர் ஆசிய விளையாட்டுப் பதக்கமாகும். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இரட்டை பதக்கங்களை வென்ற இளவேனிலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் முர்மு தனது வாழ்த்துச் செய்தியில் இளவேனிலின் இந்தத் தனித்துவமான மற்றும் மிகச் சிறந்த செயல்பாடு தேசத்திற்குப் பெருமையைத் தேடித்தந்துள்ளது என்றும் அவர் எதிர்காலத்தில் இன்னும் பல மகத்தான சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, இளவேனில் வாலறிவனுக்கும் பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார். ''இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது. இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது'' என்று கூறியுள்ள முதலமைச்சர் விஜய், இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும் என வாழ்த்தியுள்ளார். உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான இளவேனில் வாலறிவன், கல்வியை முதன்மையாகக் கொண்ட ஒரு குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். இவரது பெற்றோர் இருவருமே முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்றாலும், இளவேனில் விளையாட்டைத் தேர்வு செய்ய அவர்கள் முழு ஆதரவை வழங்கினர். தன்னை படிக்குமாறு அவர்கள் என்றுமே வற்புறுத்தியது இல்லை என்று இளவேனில் பெருமையுடன் குறிப்பிடுகிறார். 2021ஆம் ஆண்டில் பிபிசி தமிழிடன் அவர் தனது ஆரம்பகால வளர்ச்சி குறித்து தகவல்களை பகிர்ந்திருந்தார். ஆரம்பத்தில் வாலறிவனுக்கு தடகள நிகழ்வுகளில்தான் அதிக ஆர்வம் இருந்தது. அவரது தந்தையே துப்பாக்கிச் சுடுதலை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். தந்தையின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட வாலறிவனுக்கு, உடனடியாக அந்த விளையாட்டு பிடித்துவிட்டது. துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபடுவது தன்னை சாந்தப்படுத்தியதாக அவர் கூறினார். தன்னை அமைதியற்றவர் என்று கருதும் வாலறிவன், இந்த விளையாட்டுக்காக அவரது அணுகுமுறையை மாற்ற பல முயற்சிகளை எடுக்க வேண்டியிருந்ததாக தெரிவித்தார். துப்பாக்கி சுடுதலில், அதிக கவனமும் பொறுமையும் தேவை. அதனால் இந்த விளையாட்டுக்கு அவர் மன ரீதியாக தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. போட்டிகளில் பங்கேற்க அவருக்கு சரியான மனநிலை இருப்பதை அவர் உறுதி செய்ய வேண்டும். பயிற்சியின் ஆரம்ப காலத்திலேயே, அவருக்கு இந்த விளையாட்டில் இயற்கையாகவே திறன் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து முன்னாள் இந்திய துப்பாக்கிச்சுடும் வீரரான ககன் நரங்கின் கவனத்தை ஈர்த்தார் வாலறிவன். துப்பாக்கிச்சுடுதலில் வாலறிவனின் திறன்களை மேம்படுத்த உதவ முன்வந்தார் நரங். 2014ல் தொழில்முறையாக துப்பாக்கிச்சுடுதலில் ஈடுபட்ட வாலறிவன், ககன் நரங் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்திருந்த மாவட்ட நிலையிலான விளையாட்டுப் பள்ளியில் பயிற்சியை மேற்கொண்டார். பயிற்சியின் ஆரம்ப காலத்தில் தான் சந்தித்த சவால்களை நினைவுகூர்ந்த இவர், முதலில் பயிற்சி எடுக்க தினமும் துப்பாக்கிச் சுடும் சரகத்தை (manual range) அமைத்து, மீண்டும் கழட்ட வேண்டி இருந்ததாக தெரிவித்தார். அங்கு 2017ஆண்டு வரை பயிற்சியாளர்கள் நேஹா சௌஹான் மற்றும் நரங் ஆகியோரிடம் இருந்து பயிற்சி பெற்றார் வாலறிவன். சர்வதேச அளவில் துப்பாக்கிச்சுடும் போட்டியில் தான் பங்கேற்க, நரங்கின் பயிற்சி மற்றும் ஆதரவு முக்கிய பங்கு வகித்ததாக அவர் கூறினார். மேலும் குஜராத் விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையமும் தனக்கு மிகுந்த ஆதரவு அளித்ததாக வாலறிவன் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், Elavenil Valarivan 2018ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஜூனியர் உலகக்கோப்பைப் போட்டியில் முதல் பெரிய சர்வதேச வெற்றியை பெற்ற வாலறிவன் அதில் தங்கம் வென்றதோடு, தான் போட்டியிட்ட பிரிவில் புதிய உலக சாதனையும் படைத்தார். போட்டிக்கு ஒரு நாள் முன்புதான் சிட்னி சென்றடைந்ததால் ஏற்பட்ட கடுமையான உடல் சோர்வு மற்றும் கால் வீக்கத்திற்கு மத்தியிலும் இந்த சாதனையை நிகழ்த்தியதால், இந்த வெற்றி அவருக்கு மிகவும் நெருக்கமானது என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார். 2019-ஆம் ஆண்டு ரியோ மற்றும் சீனாவின் புடியன் நகரில் நடந்த ISSF உலகக் கோப்பை போட்டிகளில் தங்கம் வென்று அசத்தினார். இந்தத் தொடர் வெற்றிகள் அவரை அந்த ஆண்டில் உலகின் முதன்மை (World No.1) வீராங்கனையாக உயர்த்தியது. டோக்கியோ ஒலிம்பிக் (2021): தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தகுதிச் சுற்றில் 16-வது இடத்தைப் பிடித்தார். மேலும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் (Mixed Team) நாட்டின் சார்பாக களம் கண்டார். உலகப் பல்கலைக்கழக விளையாட்டுகள்: 2021-ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழக விளையாட்டுகளில் (FISU World University Games) மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் வெண்கலம் (2022): கெய்ரோவில் நடைபெற்ற ISSF உலக சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் அணிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். ரியோ உலகக் கோப்பை தங்கம் (2023): பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், மீண்டும் ஒருமுறை மூத்தோர் (Senior) பிரிவில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார். பாரிஸ் ஒலிம்பிக் (2024): பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற தனது இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில் தகுதிச் சுற்றில் 630.7 புள்ளிகளுடன் 10-வது இடத்தைப் பிடித்து மிக நூலிழையில் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தார். ஆசிய சாம்பியன்ஷிப் தங்கம் (2025): கஜகஸ்தானின் ஷிம்கண்டில் நடைபெற்ற 16-வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றில் 253.6 புள்ளிகள் குவித்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று ஆசிய சாம்பியனாக முடிசூடினார். மியூனிக் உலகக் கோப்பை வெண்கலம் (2025): ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற மதிப்புமிக்க ISSF உலகக் கோப்பைத் தொடரின் தகுதிச் சுற்றில் 635.9 புள்ளிகள் பெற்று புதிய தேசிய சாதனையைப் படைத்து, இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். தொடர் ஆசிய சாம்பியன் பட்டம் (2026): புது டெல்லியில் நடைபெற்ற 2026 ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து மீண்டும் தங்கம் வென்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை