12500 monthly pension: புதிய ரூ.25,000 சம்பள வரம்பின்படி, உங்களின் மாதாந்திர இ.பி.எஸ். ஓய்வூதியம் ரூ.12,500 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கு பென்சனுக்குரிய சம்பளம் ரூ.25,000 ஆகவும், மொத்த பென்சனுக்குரிய சேவை காலம் 35 ஆண்டுகளாகவும் இருக்க வேண்டும். ₹25,000 சம்பளம் வாங்குறீங்களா? இனிமே உங்களுக்கு பென்சன் ₹12,500 கன்ஃபார்மா கிடைக்க வாய்ப்பு இருக்கு (Image: AI) மத்திய அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கட்டாய இ.பி.எஃப். கவரேஜ்க்கான மாதாந்திர சம்பள வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உங்களது மாத ஓய்வூதியம் ரூ.12,500 வரை உயர வாய்ப்புள்ளதா என்பது குறித்து இந்தத் தொகுப்பில் எளிமையாகப் பார்ப்போம். இ.பி.எஸ். ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ஓய்வூதியத் தொகை மிகவும் எளிமையான ஒரு சூத்திரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது: சூத்திரம்: (பென்சனுக்குரிய சம்பளம் × பென்சனுக்குரிய சேவை ஆண்டுகள்) ÷ 70 இதில் பென்சனுக்குரிய சம்பளம் என்பது, EPS நிதியிலிருந்து வெளியேறுவதற்கு முந்தைய கடைசி 60 மாதங்களின் சராசரி அடிப்படைச் சம்பளத்தைக் குறிக்கும். இது குறிப்பிட்ட சம்பள வரம்பிற்கு உட்பட்டது. சேவைக்காலம் அதிகமாகவும், சம்பளம் உயர்வாகவும் இருக்கும் பட்சத்தில் மாதாந்திர ஓய்வூதியமும் அதற்கேற்ப அதிகரிக்கும். ரூ.12,500 பென்சன் பெற என்ன தேவை? புதிய ரூ.25,000 சம்பள வரம்பின்படி, உங்களின் மாதாந்திர இ.பி.எஸ். ஓய்வூதியம் ரூ.12,500 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கு பென்சனுக்குரிய சம்பளம் ரூ.25,000 ஆகவும், மொத்த பென்சனுக்குரிய சேவை காலம் 35 ஆண்டுகளாகவும் இருக்க வேண்டும். இந்தக் கணக்கீட்டில் 33 ஆண்டுகள் உண்மையான சேவையும், EPS விதிகளின்படி 20 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்தவர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் 2 ஆண்டுகள் போனஸ் சேவையும் சேர்த்து மொத்தம் 35 ஆண்டுகளாகக் கணக்கிடப்படுகிறது. மேலும், புதிய சம்பள வரம்பின் கீழ் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பங்களிப்பு செலுத்தியிருக்க வேண்டும். பழைய வரம்புக்கும் புதிய வரம்புக்கும் உள்ள வித்தியாசம் இதற்கு முன்பு ரூ.15,000 சம்பள வரம்பு நடைமுறையில் இருந்தபோது, 33 ஆண்டுகள் சேவை செய்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக சுமார் ரூ.7,500 மட்டுமே கிடைத்து வந்தது. தற்போதைய ரூ.25,000 சம்பள வரம்பு மற்றும் உரிய நிபந்தனைகளின் அடிப்படையில், அதே 33 ஆண்டுகள் சேவைக்கு ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்வதற்கான வாய்ப்பை இந்த புதிய திட்டம் வழங்குகிறது. இந்த உயர்வு யாருக்குப் பொருந்தும்? மாத அடிப்படைச் சம்பளம் ரூ.15,000-க்கு மேல் மற்றும் ரூ.25,000 வரை உள்ள ஊழியர்கள் புதிய திட்டத்தின் கீழ் இ.பி.எஸ். உறுப்பினர்களாக மாற தகுதி பெறுகின்றனர். அடிப்படைச் சம்பளம் ரூ.25,000 அல்லது அதற்குள் உள்ளவர்கள் இ.பி.எஃப். உடன் சேர்த்து EPS திட்டத்திலும் உறுப்பினராக இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், இ.பி.எஸ். ஓய்வூதியப் பலன்களைப் பெற வேண்டுமெனில், பணியாளர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தொடர்ச்சியான பென்சனுக்குரிய சேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ரூ.25,000 சம்பள வரம்பு உயர்வு: இனி உங்களின் இ.பி.எஸ். பென்சன் ரூ.12,500 வரை கிடைக்குமா?
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk