செயற்கை நிறமூட்டிகள் மற்றும் அதிக சோடியம் நிறைந்த கடைகளில் வாங்கும் காரப் பட்டாணி ஆரோக்கியக் கேட்டை விளைவிக்கும் என்பதால், வீட்டில் தயாரித்தோ அல்லது பாக்கெட்களின் லேபிள்களைச் சரிபார்த்து இயற்கையான முறையில் தயாரித்த பட்டாணியையோ சாப்பிடுவது நல்லது. மஞ்சள் தூள், தக்காளி கெட்சப் ஆகியவற்றில் செய்யப்படும் கலப்படம் குறித்தும், இந்தியச் சந்தையில் 'தடைசெய்யப்பட்ட' சீனா பூண்டின் தாராள நடமாட்டம் குறித்தும் தெரிந்துகொண்ட பிறகு, மொறுமொறுப்பான சுவையால் பலராலும் விரும்பிச் சாப்பிடப்படும் காரப் பட்டாணியிலும் கலப்படம் செய்யப்படுகிறதா என்றும், அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று பார்ப்போம். சந்தையில் விற்கப்படும் சில காரப் பட்டாணிகளின் தோற்றத்தை மேலும் கவர்ச்சிகரமாகக் காட்டுவதற்காக, அவற்றில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று 'தி டயட் எக்ஸ்பெர்ட்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் முதன்மை உணவியல் நிபுணருமான சிம்ரத் கத்துரியா கூறுகிறார். செயற்கையாகத் தயாரிக்கப்படும் உணவு நிறமூட்டிகளால் பல்வேறு ஆரோக்கியக் கேடுகள் ஏற்படுவதாகக் குறிப்பிடும் கத்துரியா, "குழந்தைகளிடம் ஏற்படும் அதிகப்படியான பதற்றம் மற்றும் சுறுசுறுப்பு (Hyperactivity), ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் சாத்தியக்கூறுகள் போன்ற நீண்டகாலப் பாதிப்புகள் இதில் அடங்கும். செயற்கை நிறம் பூசப்பட்ட பட்டாணியின் பிரகாசமான பச்சை நிறம், அது மிகவும் புதியது அல்லது ஆரோக்கியமானது என்று நுகர்வோரை நம்பவைத்து ஏமாற்றிவிடும்" என்று கூறுகிறார். இவை பெரும்பாலும் அதிகக் கவர்ச்சியாகக் தெரிவதற்காகவே செயற்கை நிறங்களால் மேம்படுத்தப்படுகின்றன. இது குறித்துப் பேசும் கிளினிகல் டயட்டீஷியன் கரிமா கோயல், "டார்ட்ரைசின் (மஞ்சள் 5), ரெட் 40 மற்றும் பிரில்லியண்ட் ப்ளூ எஃப்சிஎஃப் போன்ற செயற்கை உணவு சாயங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறங்கள் தயாரிப்புகளைக் கடைகளின் அலமாரிகளில் எடுப்பாகக் காட்ட உதவுகின்றன என்றாலும், இவற்றில் பல மறைமுக ஆபத்துகள் நிறைந்துள்ளன" என்கிறார். இது ஏன் ஒரு ஆபத்து? ஒவ்வாமை: செயற்கை உணவு சாயங்கள் சிலருக்கு தோல் தடிப்பு, வீக்கம் அல்லது அரிப்பு போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, மஞ்சள் 5 சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அறியப்படுகிறது என்று கோயல் கூறுகிறார். பதப்படுத்தப்பட்ட பல சிற்றுண்டிகளைப் போலவே காரப் பட்டாணியிலும் பொதுவாக அதிக சோடியம் உள்ளது. இது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். அதிக சோடியம் நிறைந்த உணவுமுறை இதய நோய், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் கோயல் தெரிவிக்கிறார். உலக சுகாதார அமைப்பு நாளொன்றுக்கு 5 கிராமிற்கும் குறைவான (சுமார் 1 தேக்கரண்டி) உப்பை மட்டுமே எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கிறது. ஆனால், பதப்படுத்தப்பட்ட பெரும்பாலான சிற்றுண்டிகளில் ஒரே வேளையிலேயே இதைவிட அதிக சோடியம் நிறைந்துள்ளது. நடத்தை சார்ந்த பாதிப்புகள்: உணவில் உள்ள செயற்கை நிறங்களின் நீண்டகாலத் தொடர்பு, குழந்தைகளின் கவனம் மற்றும் ஆற்றல் அளவைப் பாதிக்கக்கூடும் என்று கத்துரியா குறிப்பிடுகிறார். நச்சுக் கழிவுகளின் சேர்க்கை: காலப்போக்கில், செயற்கை ரசாயனங்களை உட்கொள்வது உடலுக்குள் அவை சேருவதற்கு வழிவகுக்கும். இது சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கத்துரியா கூறுகிறார். சோதிப்பது எப்படி? ஒரு கண்ணாடியிலான குவளையில் காரப் பட்டாணியைப் போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். "ஒருவேளை தண்ணீர் பச்சை நிறமாக மாறினால், அந்தப் பட்டாணியில் செயற்கை சாயம் கலப்படம் செய்யப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது" என்று கோயல் விளக்குகிறார். இதற்கு என்ன தீர்வு? இயற்கையான, வீட்டிலேயே தயாரிக்கப்படும் சிற்றுண்டிகளைத் தேர்வு செய்யலாம். வீட்டிலேயே காரப் பட்டாணியைத் தயாரிப்பது, நாம் சேர்க்கும் பொருட்களின் மீது முழுமையான கட்டுப்பாட்டைத் தரும். காய்ந்த பட்டாணியை இரவோடு இரவாக ஊறவைத்து, மஞ்சள் தூள், சீரகம், மிளகாய்த்தூள் அல்லது கரம் மசாலா போன்ற இயற்கை நறுமணப் பொருட்களைச் சேர்த்து, லேசாக வறுத்து எடுத்தால் ஆரோக்கியமான வீட்டுச் சிற்றுண்டி தயார். ஆரோக்கியமான கடைகளில் வாங்கும் வழிகளைத் தேர்ந்தெடுக்கலாம். பாக்கெட் செய்யப்பட்ட காரப் பட்டாணியை வாங்க விரும்பினால், "செயற்கை நிறங்கள் இல்லை" அல்லது "இயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ள பிராண்டுகளைப் பார்க்க வேண்டும். பல பிராண்டுகள் இப்போது செயற்கை சாயங்களுக்கு மாற்றாக பீட்ரூட் சாறு அல்லது கீரை பொடியைப் பயன்படுத்தி நிறமூட்டுகின்றன. கூடுதலாக, உப்பின் அளவைக் குறைக்க "குறைந்த சோடியம்" அல்லது "குறைக்கப்பட்ட உப்பு" எனக் குறிப்பிடப்பட்ட சிற்றுண்டிகளைச் சரிபார்த்து வாங்கலாம். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். உப்பு உட்கொள்ளலைச் சமநிலைப்படுத்த வேண்டும். காரமான சிற்றுண்டிகளைச் சாப்பிட்டால், அன்றாட சோடியம் அளவைச் சமநிலைப்படுத்த முயல வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கேன் செய்யப்பட்ட சூப்கள் அல்லது பாக்கெட் உணவுகள் போன்ற பிற அதிக சோடியம் உள்ள உணவுகளைத் தவிர்த்துவிட்டு, இயற்கையாகவே குறைந்த உப்பு கொண்ட முழுமையான, புதிய உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்தலாம் என்று கோயல் கூறுகிறார். நீங்கள் உட்கொள்ளும் உணவைப் புரிந்து கொள்ள எப்போதும் பாக்கெட் உணவுகளின் லேபிள்களை நன்றாகப் படிக்க வேண்டும். செயற்கை சேர்க்கைகள் இல்லாத தயாரிப்புகளைத் தேட வேண்டும், மேலும் சோடியத்தின் அளவையும் சரிபார்க்க வேண்டும். குறைவான பதனப்பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ள சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது, பாதகமான ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என்று கரிமா கோயல் வலியுறுத்துகிறார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
காரப் பட்டாணியில் கலப்படமா? செயற்கை நிறத்தைக் கண்டறிய எளிய சோதனை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk