ராசிமணல் அணை கட்டவும், மேகதாட்டு அணை திட்டத்திற்கு எதிராகவும் 18 அரசியல் கட்சிகளுடன் ஒத்த கருத்து உருவாக்கப்பட்டுள்ளதாக பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கோரிக்கைகளை விரைவில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து முன்மொழிய உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் செப்டம்பர் 20ஆம் தேதி பூம்புகார் துவங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக இன்று காலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பிரசார பயண ஆதரவு கூட்டம் நடைபெற்றது. தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பூம்புகாரில் தொடங்கிய பிரச்சார பயணம் சென்னை எழும்பூரில் நிறைவடைந்த நிலையில், நடைபெற்ற ஆதரவு கூட்டத்தில் 18 முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மேகதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராகப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது மற்றும் ராசிமணல் அணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது எனப் பங்கேற்ற அனைத்து தலைவர்களும் ஒத்த கருத்து தெரிவித்துத் தீர்மானத்தில் கையொப்பமிட்டனர். இந்த முடிவுகளை விரைவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயைச் சந்தித்து அறிக்கையாக வழங்கவுள்ளதாகத் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் செப்டம்பர் 20ஆம் தேதி பூம்புகார் துவங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக இன்று காலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பிரசார பயண ஆதரவு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் கே எம் ராம கவுண்டர் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் வி.சி.க சார்பில் அமைச்சர் வன்னி அரசு, காங்கிரஸ் சார்பில் சுதா எம்.பி, பா.ம.க சார்பில் மு.ஜெயராமன், ம.தி.மு.க சார்பில் ஆ.வந்தியத்தேவன், கொ.ம.க சார்பில் ஈஸ்வரன், தே.மு.தி.க சார்பில் பி.பார்த்தசாரதி, நா.த.க சார்பில் இரும்பாவனம் கார்த்தி, முஸ்லிம் லீக் சார்பில் நிஜாமுதீன், ம.ம.க சார்பில் ஜெயினுள் ஆபிதீன் ம.ஜ.க அரிமா அசாருதீன், கொ.இ.பே சார்பில் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட 18 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மேகதாட்டு அணை கட்டுமானத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது, ராசிமணல் அணை கட்டுவதற்கு திட்டமிடுவதற்கு அனைவரும் ஒத்த கருத்தோடு தமிழக அரசின் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. தீர்மானத்தில் அனைவரும் கையொப்பமிட்டனர். இதனை விரைவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்து எடுத்துரைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தென் மண்டல தலைவர் கட்டிக்குளம் மாணிக்கவாசகம் முல்லை பெரியாறு வைகை பாசன விவசாய சங்க செயலாளர் எல் ஆதிமூலம் மாநில துணைச் செயலாளர் திருவள்ளூர் விஜய் பிரசாத் சுவாமிநாதன் துணைத் தலைவர் வி எம் ஃபாரூக்சென்னை மண்டல செய்தி தொடர்பாளர் சைதை சிவா காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஹரிதாஸ், மாவட்ட செயலாளர் சீனிவாசன் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் நாராயணன் செயலாளர் விக்னேஷ் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு,மாவட்டத் தலைவர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ராசி மணல் அணை கட்ட ஒத்த கருத்து உருவாக்கம்: விரைவில் விஜயை சந்தித்து முன்மொழிய திட்டம்: பி.ஆர். பாண்டியன்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk