யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 225 நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான் இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (UIIC) நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 225 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Administrative Officer – Generalists காலியிடங்களின் எண்ணிக்கை: 200 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். Administrative Officer – Hindi Officers காலியிடங்களின் எண்ணிக்கை: 200 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree in Hindi முடித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.06.2026 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு. சம்பளம்: ரூ. 1,10,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibpsreg.ibps.in/uiicljul26/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2026 விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கு ரூ.250. இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு 225 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk