ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்: அர்ப்பணிப்பு, விடாமுயற்சியுடன் சாதித்த இருவரின் கதை

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Sports ✍️
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்: அர்ப்பணிப்பு, விடாமுயற்சியுடன் சாதித்த இருவரின் கதை

பட மூலாதாரம், Handout ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கலப்பு 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப்பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த 4 பேரில் வித்யா மற்றும் விஷால் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் வேறு மாநிலங்களை சேர்ந்த டி.எஸ்.மனு மற்றும் பூவம்மா ஆகியோரும் இணைந்து இந்த சாதனையைப் படைத்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் தள பதிவில், ''அவர்களின் வேகம், ஒருங்கிணைப்பு மற்றும் மன உறுதி ஆகியவை ஒரு விறுவிறுப்பான பந்தயத்தை உருவாக்கியதுடன், இந்திய தடகளத் துறைக்கு ஒரு பெருமைக்குரிய தருணமாகவும் அமைந்தன. அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்.'' என்று பிரதமர் மோதி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து தன் எக்ஸ் பக்கத்தில், ''இந்திய அணியின் 4 நபர் அடங்கிய இந்தக் கலப்பு தொடர் ஓட்டக்குழுவில் 2 வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு மட்டுமின்றி, தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை.'' என்று தெரிவித்துள்ளார். "தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்," என்று அறிவித்துள்ள முதலமைச்சர் விஜய், ''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உயர்நிலை விளையாட்டு வீரர்களுக்கான (ELITE Sportsperson Scheme) திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் இருவரும் தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இச்சாதனையைப் படைத்துள்ளனர்.'' என்று பாராட்டியுள்ளார். ''இவர்களது வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ள இவர்களின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைத்திட வாழ்த்துகள்!'' என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், Handout ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டு வீரர்களில் வித்யா ராம்ராஜ், கடந்த 2023-ஆம் ஆண்டில் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அந்தப் போட்டியின் அரையிறுதியில் முன்னாள் தடகள வீரர் பி.டி.உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் 39 ஆண்டுகளுக்குப் பின் சமன் செய்தார் என்பது விளையாட்டு ஆர்வலர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தற்போது அடுத்த முன்னேற்றப் படியாக இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ள அணியில் வித்யா ராம்ராஜ் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். 27 வயதான வித்யா ராம்ராஜ் கோவை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்ராஜ்–மீனா தம்பதியரின் 3 மகள்களில் ஒருவர். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இவர்களில் வித்யாவுடன் இரட்டையராகப் பிறந்தவர் நித்யா. இவர்கள் இருவருமே தடை தாண்டுதல் மற்றும் தொடர் ஓட்ட வீராங்கனைகளாக பல வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். கடந்த முறை சீனாவில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யாவுடன் நித்யாவும் பங்கேற்றிருந்தார். ஆனால், இந்த முறை பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக, அவரால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இயலவில்லை என்று இவர்களின் தந்தை ராம்ராஜ், பிபிசியிடம் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற பின்பு, அந்த விஷயத்தை தங்களின் மகள் உற்சாகத்துடன் பகிர்ந்த அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்தனர் ராம்ராஜ்–மீனா தம்பதியர். பிபிசி தமிழிடம் பேசிய ராம்ராஜ், ''நான் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றினேன். எனது இரட்டைக் குழந்தைகளை 5-ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படிக்க வைத்தேன். அதன்பின்பு வசதி இல்லாததால் கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்த்தேன். அங்கு ஏழாம் வகுப்பு படிக்கும்போது, அங்கிருந்த உடற்கல்வி ஆசிரியை ஒருவர்தான் என்னுடைய 2 மகள்களையும் தடகளப் பயிற்சியில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார். அவருடைய பெயர் கூட மறந்துவிட்டது. ஆனால் அவர் அன்று தொடங்கி வைத்த பயணம்தான் இன்றைக்கு நாட்டுக்காக எனது மகள் வெள்ளிப் பதக்கம் வாங்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.'' என்றார். அங்கு அவர்கள் நன்கு பயிற்சி எடுத்து விளையாடியதால், அதற்குப் பின்பு ஈரோட்டில் விடுதியிலேயே தங்கி இருவரும் படித்து, அடுத்தடுத்து மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்றதையும் மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்ததையும் அவர் விளக்கினார். வித்யா இப்போது ரயில்வே துறையிலும், நித்யா வருமான வரித்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். ''எனது மகள்கள் இருவருமே, நாட்டுக்காக எத்தனையோ சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். இப்போது வெள்ளிப் பதக்கம் வென்றது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் இன்னும் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், நித்யாவுக்குப் பயிற்சியின்போது காயம் பட்டதால் இந்தப் போட்டியில் பங்கேற்க இயலாமல் போனதில் எனக்குப் பெரிய வருத்தம். ஆனால், அவர் மீண்டு வருவார்.'' என்றார் ராம்ராஜ். வித்யா, நித்யா இருவருமே இணைந்துதான் எப்போதும் பயிற்சி எடுப்பார்கள் என்றும், ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் என்றும் ராம்ராஜ் தெரிவித்தார். இந்த வெற்றி எங்களுடைய தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்த மற்றொரு "ஊக்கப்பரிசு" என்றும், இதனால் "எங்களுடைய தடை தாண்டுதல் ஓட்டம் தடையின்றித் தொடரும்" என்று கூறினார் நித்யா ராம்ராஜ். பட மூலாதாரம், Handout தனது சகோதரி வெள்ளிப் பதக்கம் பெற்றது குறித்து பிபிசியிடம் பேசிய நித்யா, ''இந்தப் போட்டியில் தொடர் ஓட்டத்தில் நிச்சயமாக பதக்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அது உறுதியாகிவிட்டது. இதில் எனது சகோதரி பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாலும், அடுத்து தடை தாண்டுதல் ஓட்டத்துக்குத் தயாராவதால் எதையும் பெரிதாக வெளிப்படுத்த முடியவில்லை. அவர் தீவிரப் பயிற்சியில் இருக்கிறார்.'' என்றார். இந்தப் போட்டியில் தன்னால் பங்கேற்க முடியாதது குறித்து பேசிய அவர், ''கடந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான் பங்கேற்றேன். ஆனால், இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தேர்வில் என்னால் இடம்பெற முடியவில்லை. என்னுடைய சகோதரி வித்யா, அடுத்தடுத்து நன்றாக விளையாடி முழுமையான தகுதியோடு இருந்தார். அதனால் அவர் நிச்சயமாக இன்னும் பல வெற்றிகளைக் குவிப்பார்.'' என்றார். இவர்கள் இருவருக்கும் பயிற்சியாளராக இருப்பவர் நேபாள்சிங் ரத்தோர். அவரும் தற்போது ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடக்கும் இடத்தில் இருந்து, வித்யாவுக்கு தொடர் பயிற்சி அளித்து வருகிறார். வித்யா ராம்ராஜ் பெற்ற வெற்றி குறித்து அவர் பிபிசியிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். பிபிசி தமிழிடம் பேசிய நேபாள்சிங் ரத்தோர், ''வித்யா என்னிடம் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலேயே அவர் பதக்கம் வென்றார். அதற்குப் பின்பு அவர் ஏராளமான சாதனைகளைப் படைத்திருக்கிறார். வித்யாவின் பலம் அவருடைய அர்ப்பணிப்பு, விடா முயற்சி மற்றும் தொடர் பயிற்சி தான். ஓய்வு, சொந்த அலுவல் எல்லாமே அவருக்கு இரண்டாம்பட்சம்தான். உடல் திறனும், உற்சாகமும் அவருக்குக் கடவுள் கொடுத்த கொடை.'' என்றார். பட மூலாதாரம், Handout ''இப்போது அவர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்தாலும், இனிமேல்தான் அவருக்கான தனிப்பட்ட தடை தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் இருக்கின்றன. அதனால் அவர் மிகவும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அவர் இன்னும் உலகளவில் பல சாதனைகளைப் படைப்பார் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அவரைப் போன்று சாதாரண குடும்பத்தில் இருந்து இவ்வளவு பெரிய சாதனை படைப்பது தமிழ்நாட்டிலுள்ள விளையாட்டு வீரர்கள் குறிப்பாக இளம் வயதினருக்கு ஒரு மாபெரும் உதாரணம்.'' என்றார் நேபாள்சிங் ரத்தோர். வித்யா, நித்யா இருவரும் தடகளத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கச் சொல்லி, உறவினர்கள், நண்பர்கள் பலரும் கட்டாயப்படுத்திய நிலையில் தனது பெற்றோர்தான் தங்கள் லட்சியத்துக்கு உறுதுணையாக இருந்ததாக, பிபிசியிடம் நித்யா தெரிவித்தார். விளையாட்டுத் துறையிலுள்ள பெண்களுக்கு மிக இளவயதில் திருமணம் செய்யாமல் இருந்தால் பலராலும் இன்னும் பல சாதனைகளைப் படைக்க முடியுமென்றும் அவர் கூறினார். இதுபற்றி பிபிசியிடம் பேசிய இவர்களின் தந்தை ராம்ராஜ், ''இப்போதும் என்னிடம் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கச் சொல்லித்தான் பலரும் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் என்னுடைய மகள்கள் இருவரும் இன்னும் பல சாதனைகளைப் படைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதனால் அவர்களை நான் எந்த விதத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை. திருமணம் குறித்து அவர்களே முடிவெடுக்க வேண்டும்'' என்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.கே.விஷால், இதேபோன்று தடகளத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த 22 வயதான விஷால், 400 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் சாதனையைப் படைத்திருக்கிறார். ராஞ்சியில் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகளக் கூட்டமைப்புப் போட்டியில் அவர் இந்த சாதனையைப் படைத்தார். அப்போது ஊடகங்களிடம் பேசிய விஷால், ''400 மீட்டர் ஓட்டத்தில் 45 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஓடி சாதனை புரிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வரலாற்றில் இடம்பிடித்து விட்டேன்." என்று கூறினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்று வந்த விஷால், கடந்த ஆண்டு முதல் ஜமைக்காவைச் சேர்ந்த ஜேசன் டாசன் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறார். ஆறடி 2 அங்குல உயரமுள்ள விஷால், அவரைச் சந்தித்தபோது மிகவும் மெலிந்த தேகத்துடன் இருந்துள்ளார். அதனால் அவர் நன்கு சாப்பிட வேண்டும் என்பதையே ஜேசன் முதல் அறிவுரையாகக் கொடுத்ததாகச் சொல்கிறது 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி. விஷால் பற்றிப் பேசியிருந்த ஜேசன் டாசன், ''நான் பயிற்சி அளிக்க முயற்சி செய்கிறேன். ஆனால், நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அவர் சாப்பிடும் உணவை (கலோரிகளை) விரல் சொடுக்கும் நேரத்தில் எரித்து விடுகிறார்.'' என்றார். பட மூலாதாரம், Handout ஏற்கெனவே கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்த விஷால், 400 மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார். அந்தத் தகவலை தன் தந்தை தென்னரசுவிடம் அழைத்துப் பகிர்ந்துள்ளார் விஷால். அந்த தகவல் கிடைத்தவுடன் பிபிசியிடம் பேசினார் தென்னரசு. ''என் மகன் இப்போதுதான் என்னை அழைத்து, அரையிறுதியில் வென்று விட்டேன் என்றும், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டுப் பேசுகிறேன் என்றும் கூறினான். நிச்சயமாக அவன் பதக்கம் வெல்வான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவனுக்கு பேச்சு, மூச்சு எல்லாமே விளையாட்டுதான். பத்து நிமிடம் எங்களிடம் பேசினால் அதில் 2 நிமிடம்தான் வீட்டைப் பற்றிய விசாரணை இருக்கும். மற்ற 8 நிமிடங்களும் விளையாட்டைப் பற்றியே பேசுவான். இப்போதும் கூட 'நான் சரியாக ஓடினேனா அப்பா' என்றுதான் என்னிடம் கேட்டான்.'' என்றார் தென்னரசு. கால்பந்து வீரராக இருந்த தென்னரசு, தற்போது திருப்பத்தூர் மாவட்ட தடகளச் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். பால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். விஷால் பிறந்து நடக்கத் தொடங்கிபோது, இரு முழங்கால்களும் உரசிக் கொள்ளும் பாதிப்பு இருந்ததாகக் கூறிய தென்னரசு, அதைச் "சரி செய்யும் நோக்கில் அவருக்கு 4 வயதாக இருக்கும்போது ஜோலார்பேட்டை விளையாட்டு அரங்கத்துக்கு அழைத்துச் சென்றதாகக்" கூறினார். ''அப்போது ஜான் என்பவர் அங்கு அதிகாரியாக இருந்தார். அவர் விஷாலின் முழங்கால்கள் வரை மணலுக்குள் புதைத்து சில பயிற்சிகளைச் செய்யச் சொல்வார். அதன்பின் மைதானத்தை 2 முறை ஓடச்சொல்வார். அப்படி ஓடியதில் ஆறே மாதங்களில் முழங்கால்கள் உரசாமல் சரியாகிவிட்டது. அதற்குள் ஓட்டத்தில் அவனுக்கு பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது. ஐந்தாம் வகுப்பு வரை இங்கு படித்துவிட்டு, ஆறாம் வகுப்பில் சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சி விடுதியில் சேர்ந்துவிட்டான்.'' என்று விளக்கினார் அவர். ''உடலை சரி செய்வதற்காகத் தொடங்கிய அவனுடைய ஓட்டம், இப்போது சாதனைகளுடன் தொடர்கிறது. அவனுடைய இந்த வெற்றிப் பயணத்துக்கு தூண்டுகோலாக இருந்த ஜான், இந்த வெற்றியைப் பார்க்க இப்போது உயிருடன் இல்லை என்பது வேதனையாக உள்ளது. விஷாலுக்கு வினோத் என்ற அரசு பயிற்சியாளர்தான் முதலில் பயிற்சி அளித்தார். அதன்பின், திருவனந்தபுரத்தில் சீனிவாசன் என்பவரிடம் பயிற்சிக்குச் சேர்ந்தார். அதுவரை 100 மீட்டர், 200 மீட்டர் ஓடிய விஷாலை 400 மீட்டர் ஓட்டத்துக்கு மாற்றியது அவர்தான்.'' என்றார் தென்னரசு. பட மூலாதாரம், Handout திருவனந்தபுரத்தில் சீனிவாசனிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு வேறு சில வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வரும் ஜேசன் டாசனின் தடகளப் பயிற்சி முறைகளை அறிந்து அவரிடம் விருப்பத்துடன் பயிற்சிக்குச் சேர்ந்துள்ளார் விஷால். விஷாலுக்கு சென்னையில் முதல்முதலாக பயிற்சியளித்த அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையப் பயிற்சியாளர் வினோத், ''இங்கே விடுதியில் தங்கிப் படிக்கும்போது, விஷால் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்துக்கு மட்டுமே பயிற்சி பெற்று வந்தார். பத்தாம் வகுப்பிலிருந்தே கடுமையான பயிற்சிகளைத் தொடங்கிவிட்டார். முதலில் 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய அளவில் பல வெற்றிகளைப் பெற்றார். அதுதான் அவர் 400 மீட்டர் ஓட்டத்தில் பல சாதனைகளைப் படைக்க அடித்தளமாக இருந்தது" என்றார். ''விஷாலின் தனித்துவம், இடைவிடாத பயிற்சிதான். தொடர்ச்சியாக பயிற்சி எடுத்துக்கொண்டே இருப்பார். இங்கே இருக்கும்போது மிகவும் மெலிந்த உடல்வாகுடன் தான் இருப்பார். ஆனால், அப்போதே அவருடைய வேக ஓட்டத்திறன் (sprint quality) நன்றாக இருந்தது. அத்துடன் அவருடைய கடுமையான உழைப்பும், பயிற்சியுமே அவரை இந்த சாதனையளவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.'' என்றார் தடகளப் பயிற்சியாளர் வினோத். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை