‘ஞானேஷ் குமார் ‘அப்ரூவர்’ ஆக வேண்டும்’: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வு செய்தி குறித்து ராகுல் காந்தி பேச்சு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
‘ஞானேஷ் குமார் ‘அப்ரூவர்’ ஆக வேண்டும்’: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வு செய்தி குறித்து ராகுல் காந்தி பேச்சு

புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் உரைகளின் வீடியோ காட்சிகளைக் காண்பித்துத் தொடங்கினார். அதில், பா.ஜ.க நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் என்று அவர்கள் பேசுவது இடம்பெற்றிருந்தது. புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி Photograph: (Express Photo by Anil Sharma) எழுதியவர்: ஆசாத் ரஹ்மான் எஸ்.ஐ.ஆர் தொடர்பான முடிவுகள் தங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டதற்கு இரு தேர்தல் ஆணையர்களும் பலமுறை எதிர்ப்புகளைப் பதிவு செய்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட புலனாய்வுச் செய்தியைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தியும், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டும் எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், நாட்டில் நடக்கும் "அனைத்துத் தேர்தல்களும் முறைகேடாக" நடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை குற்றம்சாட்டினார். ஆங்கிலத்தில் படிக்க: புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நமது தேர்தல் முறை அடிப்படை அமைப்பிலேயே சிதைந்துபோயுள்ளது. தேர்தல்கள் மீதான 'புனிதமான நம்பிக்கை' அழிந்து வருகிறது. நாளை பா.ஜ.க அனைத்துத் தேர்தல்களிலும் முழு வெற்றி பெற்றால் கூட, அதை யாருமே நம்ப மாட்டார்கள்," என்று கூறினார். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் புலனாய்வு 10 மாதங்களில் 14 முறை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து இரு தேர்தல் ஆணையர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவேட்டில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளனர். "சட்ட வல்லுநர்களுடன் இணைந்து நீக்கத் தீர்மானம் வரைவு செய்யப்பட்டு வருகிறது. கூட்டணி எதிர்க்கட்சிகள் சார்பில் விரைவில் இரு அவைகளிலும் இதற்கான அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்படும்" என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியைக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பா.ஜ.க நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் என்று பேசும் வீடியோ காட்சிகளைக் காண்பித்தார். "நான் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவன். எந்த ஒரு அரசியல் தலைவராலும் இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்லவோ அல்லது உருவாக்கவோ முடியாது. இந்தியாவில் 'ஆட்சிக்கு எதிர்ப்பு அலை' என்ற ஒரு சக்தி உள்ளது... அது யாரையும் விட்டுவைப்பதில்லை. இந்திரா காந்தி பங்களாதேஷ் போரில் வெற்றி பெற்றார். ஆனால், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய ஆட்சி எதிர்ப்பு அலை உருவானது... ஒவ்வொரு தலைவருக்கும் அதுதான் நடந்தது. ஆனால் ஏனோ தெரியவில்லை, நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் பா.ஜ.க-வுக்கு மட்டும் அது நடப்பதே இல்லை," என்றார். "மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது... ஒரு தனிநபரின் பிரபலத்தையோ, ஒரு அரசின் செயல்பாட்டையோ நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆட்சி எதிர்ப்பு அலை எவ்வாறு மாயமாக மறைந்துபோகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அது வடகொரியாவில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்... ஆட்சி எதிர்ப்பு அலை வேலை செய்யாத ஜனநாயகம் உலகில் எங்குமே இல்லை. அது எங்கே போனது என்பதற்கான பதில்களை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம்; தற்போது அதற்கான பதில்களைக் கண்டுபிடித்துவிட்டோம்," என்று அவர் கூறினார். மக்களின் வாக்களிப்பு மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாலேயே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்று குறிப்பிட்ட அவர், "வாக்குரிமை அழிக்கப்பட்டுவிட்டால், நமது அரசியலமைப்பும் அழிக்கப்பட்டுவிடும். அதற்கு இனி எந்த அதிகாரமும் இருக்காது. அரசியலமைப்பு அழிக்கப்பட்டால், நமது சட்டங்கள் செல்லாததாகிவிடும்; நமது நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும். தேர்தல்கள் மீதான புனிதமான நம்பிக்கை அழிந்துவருகிறது. நாளை பா.ஜ.க தேர்தலில் பெருவெற்றி பெற்றால், அதை ஒருவரும் நம்பப்போவதில்லை," என்றார். "வாக்குரிமையில் பிரச்னை இருக்கிறது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் கூறிவருகிறோம். இந்த வாக்கைப் பாதுகாக்கும் அமைப்பு ரீதியான காவலன் தேர்தல் ஆணையம் தான். வாக்கைப் பாதுகாக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு," என்று கூறிய அவர், "அனைத்துத் தேர்தல்களும் முறைகேடாக நடத்தப்படுகின்றன," என்றும் கூறினார். தனது எதிர்ப்பையும் மீறி பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஞானேஷ் குமாரை தலைமைத் தேர்தல் ஆணையராக உயர்த்தியது எவ்வாறு என்றும் ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார். பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய தேர்வுக் குழுவால், 2023-ம் ஆண்டின் சட்டத்தின் கீழ் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மார்ச் 2024-ல் சாந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டபோது, அக்குழுவில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினரான காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அந்த நியமன நடைமுறைக்குத் தனது எதிர்ப்பைப் பதிவேட்டில் பதிவு செய்தார். பிப்ரவரி 2025-ல், ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக உயர்த்தப்பட்டபோது, ராகுல் காந்தி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். "நாம் இதுவரை சந்திக்காத ஒரு சூழ்நிலையில் அமர்ந்திருக்கிறோம். நமது தேர்தல் முறை அடிப்படை அமைப்பிலேயே சிதைந்துள்ளது... சுதந்திர இந்தியாவில் நாம் இப்படி ஒரு நிலையில் இருப்பது இதுவே முதல் முறை," என்று அவர் கூறினார். ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்திய ராகுல் காந்தி, "நீங்கள் செய்த இந்த காரியம் இந்திய நாட்டிற்கு எதிரானது. இது அரசியலமைப்புக்கு எதிரான தாக்குதல். இதற்கு கடுமையான விளைவுகள் இருக்கும். ஜனநாயகத்தை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்றார். "மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களும் புத்திசாலித்தனமான காரியத்தைச் செய்துள்ளனர். அவர்களைப் பாராட்டுகிறேன். ஞானேஷ் குமார் அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவராக) மாற வேண்டும். அதுதான் உண்மையான தேசபக்தியாக இருக்கும். என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும், அதை நாங்களும் வெளிப்படுத்துவோம்" என்றார். எக்ஸ்பிரஸ் புலனாய்வு 7 நாட்களில் 8 மின்னஞ்சல்கள் அனுப்பியும், தகுதியான கோவா வாக்காளர்கள் விடுக்கப்பட்டனர்: இது தேர்தல் ஆணையத்தின் குளறுபடியான அமைப்பு முறை. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், "இந்தச் சதியின் உச்சியில் அவர்களே இருக்கிறார்கள். இது இந்திய நாட்டிற்கும் அதன் மக்களுக்குமான எதிரான செயல். எங்களால் அமைதியாக இருக்க முடியாது," என்றார். வாக்குரிமையைத் தாக்கும் நபரை "தேசத் துரோகி" என்று குறிப்பிட்ட அவர், "நான் இதைச் சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டு சொல்லவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக இதை நான் கூறி வருகிறேன். ஆதாரங்களையே நான் பயன்படுத்தியுள்ளேன். உண்மையான விஷயம் என்னவென்றால், பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்த நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையே தாக்கியுள்ளனர்," என்றார். தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரை "தேசபக்தர்கள்" என்று வர்ணித்த ராகுல் காந்தி, இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது "தேசத்துரோகம்" ஆகிவிடும் என்றும் கூறினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை