ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 நிமிட வீடியோ அடங்கிய பென்டிரைவை போலீசில் ஒப்படைத்தது முதல், அவர் கைது செய்யப்பட்டது வரை நடந்த பின்னணி குறித்து புகார்தாரர் ஹரிஹரன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தொழிலதிபர் ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக பரபரப்பு பேட்டியளித்துள்ள புகார்தாரர் ஹரிஹரன், சம்பவம் குறித்த 20 நிமிட வீடியோ அடங்கிய பென்டிரைவை ஒருவர் தன்னிடம் கொடுத்ததாகவும், அதனைத் தான் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பவம் தொடர்பான 20 நிமிட வீடியோ அடங்கிய பென்டிரைவை காவல்துறையிடம் ஒப்படைத்தது குறித்து புகார்தாரரும் ஐ.சி.டபிள்யூ தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதியுமான ஹரிஹரன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் எனவும், பணமும் அதிகாரமும் உள்ளவர்களுக்கு இந்த வழக்கில் வழங்கப்படும் தண்டனை ஒரு பாடமாக அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தொழிலதிபர் ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக பரபரப்பு பேட்டியளித்துள்ள புகார்தாரர் ஹரிஹரன், சம்பவம் குறித்த 20 நிமிட வீடியோ அடங்கிய பென்டிரைவை ஒருவர் தன்னிடம் கொடுத்ததாகவும், அதனைத் தான் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருமுறை போலீஸ் விசாரணைக்கு ஆஜரான போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இதுவரையில் தன்னை யாரும் அச்சுறுத்தவோ அல்லது மிரட்டவோ இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஜெம் வீரமணி வழக்கின் புகார்தாரர் ஹரிஹரன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “அக்டோபர் 5-ம் தேதி ஒருவர் வந்து எங்களிடம் ஒரு சி.டி கொடுக்கிறார். இதை ஒரு பொறுப்பான ஏஜென்சியிடம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் உங்களிடம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார். அதில் ஒரு சின்ன குறிப்பு இருக்கிறது. அதில் குற்றம் இழைத்தவர்கள் வீரமணி, சாந்தி என்று இருக்கிறது. அதில் ஒரு பென்டிரைவ் இருக்கிறது. அதை கொடுத்துவிட்டு அவர் உடனே போய்விட்டார். அந்த பென்டிரைவை போட்டு பார்க்கிறார்கள். அந்த பென்டிரைவ் வாங்கும் போது நான் இல்லை. அதற்கு பிறகு தான் நான் வந்தேன். அந்த சி.டி-யை வாங்கி பார்க்கிறோம். அதில் ஒரு வயதானவர் ஒரு சின்ன குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்கிறார். அது தெளிவாக தெரிகிறது. அது 20 நிமிடம் நேரம் கொண்ட வீடியோ. உடனே நாங்கள் காவல்துறையில் விபச்சார தடுப்பு பிரிவுடன் தொடர்பு கொண்டோம். நாங்கள் அந்த சி.டி-யையும் குறிப்பையும் அவர்களிடம் ஒப்படைத்தோம். அவர்கள் இதில் உறுதியாக தீவிர குற்றம் நடந்து இருக்கிறதா என்று கேட்கிறார்கள். நாங்கள் ஆமாம் என்று சொல்கிறோம். அதனால், அவர்கள் நீங்களே ஒரு புகார் கொடுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் புகார் கொடுத்தோம். புகார் கொடுத்த பிறகு அது என்ன ஆனது என்று தெரியாது. அதற்குப் பிறகு ஒரு மாதம் இடைவெளி விட்டு இரண்டு முறை நான் உதவி காவல் ஆணையர் யாஸ்மின் அவர்களிடம் கேட்டோம், இன்ஸ்பெக்டராக இருந்த மகேஷ் அவர்களிடம் கேட்டோம். அவர்கள் விசாரணையில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அவர்கள் மீது இருந்த நம்பிக்கையில் இருந்தோம். ஏதோ நடவடிக்கை நடக்கிறது போல என்று இருந்தோம். அதற்கு பிறகு தான் நிறைய குழப்பமான தகவல்கள் எல்லாம் வருகிறது. அவர்கள் மீதான நம்பிக்கையில் ஏதோ நடகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு பிப்ரவரியில் சம்மன் கொடுத்து எங்களைக் (நீதிமன்றத்திற்கு) கூப்பிட்டார்கள். கூப்பிட்ட பிறகு நீதிபதி இந்த வீடியோ எப்படி வந்தது, யார் கொடுத்தார்கள், என்ன கன்டென்ட், நீங்கள் எப்போது பார்தீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்குப் பிறகு, போலீஸிடம் நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப என்.ஜி.ஓ-வை (தொண்டு நிறுவனம்) கூப்பிடுகிறீர்கள், அவர்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள், அவர்களுடைய பங்கு முடிந்துவிட்டது, ஒரு பென்டிரைவ் கிடைத்தது அதை ஒப்படைத்து விட்டார்கள் என்று சொன்னார்கள். அதற்கு சட்டத்தில் போக்சோ சட்டத்தில் 19 பிரிவு 1-ன் கீழ் பதிவு செய்திருக்கிறார்கள். உங்களிடம் ஏதாவது ஒரு மெட்டீரியல் கிடைக்கிறது என்றால், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாக கேள்விப்படுகிறீர்களோ அல்லது நடக்கலாம் என்று ஒரு தகவல் கிடைத்தால்கூட உடனடியாக அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் புகார் அளித்திருக்கிறோம். அதற்கு பிறகு நடந்த வளர்ச்சிகள் எல்லாமே எல்லாருக்கும் தெரியும். அதற்கு பிறகு இந்த வழக்கை நிறுத்துவதாக கூறினார்கள். அதற்குப் பிறகு நீதிபதி தீவிரமாக எச்சரித்து, எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருக்கிறது, அதை வைத்து எளிதாக அடையாளம் காண வேண்டும், குழந்தைகள் வழக்கு என்பதால் இதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது, இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி கால அவகாசமும் கொடுக்கிறார்கள். அதற்கு பிறகு நடந்த அடுத்த கட்ட வளர்ச்சிகள் எல்லாருக்கும் தெரியும். இதில் யார் யாரை கைது செய்திருக்கிறார்கள் என்பதெல்லாம் எல்லாருக்கும் தெரியும். எங்களுடைய நிறுவனமான ஐ.சி.டபிள்யூ-வைப் (ICW)பொறுத்தவரை குழந்தைகள் உரிமைகள், குழந்தைகள் மீது அக்கறை கொண்டவர்கள். இந்த வழக்கில் கிடைக்கிற நீதி மற்றவர்களுக்கு ஒரு பெரிய பாடமாக இருக்க வேண்டும். பணம் இருக்கிறது, வசதி இருக்கிறது, எல்லாரையும் தெரியும் என்று நினைத்துக் கொண்டு என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருப்பவர்களுக்கு ஒரு பெரிய பாடமாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் அளிக்கப்படுகிற தண்டனை மற்றவர்களுக்கு, இதுபோல குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு, இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்பதை எச்சரிக்கையாக நிறுவ வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்கிறோம். இந்த வழக்கில் முதலில் அவர் ஜெம் கிரானைட் உடைய எம்.டி என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. அந்த வீட்டுக்கு சாட்சியாக போன மாதம் 25-ம் தேதி எங்களை கூப்பிட்டார்கள். அந்த வீட்டில் சோதனை நடத்தி ஆட்சேபனைக்குரிய பொருட்களை கைப்பற்றுகிறோம், ஆதாரத்துக்கும் சாட்சிக்கும் தொண்டு நிறுவனத்தில் இருந்து வரவேண்டும், உங்கள் அலுவலகத்தில் இருந்து யாராவது அனுப்புங்கள் என்று கூறினார்கள். அப்போது யாருமில்லை, அதனால் நான் வருகிறேன் என்று போயிருந்தேன். சென்னை லாயிட்ஸ் சாலையில் ஒரு பெரிய வீடு, அந்த வீட்டில் அவர் மேலே பெட்-ல் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது நான் பார்த்தேன், அந்த வீடியோவில் இருப்பது அவர் தான் என்று இப்போது இருக்கிற உதவி காவல் ஆணையர் ராஜலக்ஷ்மி அவர்களிடம் சொன்னேன். அவரும் ஆமாம் சார், இதில் நிறைய ஆதாரம் இருக்கிறது, இவர் ஒரு தீவிரமான குற்றம் இழைத்தவர், அதனால், அவரை தண்டிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், அவருடைய கைது பற்றி எதுவும் சொல்லவில்லை, ஆனால், மறுநாளே அவரை கைது செய்து விட்டார்கள். சாட்சியத்திற்காக நான் அந்த வீட்டுக்குப் போகும்போது அங்கே இருந்த நினைவு பரிசுகளை பார்த்தேன். அதில் வீரமணி ஜெம் கிரானைட் விருது வாங்கி இருக்கிறார், முதலமைச்சருடன் புகைப்படம் இதெல்லாம் இருக்கிறது. அதுவரைக்கும் ஜெம் கிரானைட்ஸ் தெரியும், வீரமணி என்பவர் யார் என்று தெரியாது. போன மாசம் 26-ம் தேதி தான் வீரமணி ஜெம் கிரானைட் எம்.டி என்பது தெரியும். அதற்குப் பிறகுதான் எல்லாருக்கும் விழிப்புணர்வுக்கான ஊடகச் செய்திகள் எல்லாம் வெளியானது. இதில் ஒரு விஷயம் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளுக்கான நீதி, அந்த குழந்தைகளுக்கான நிவாரணம் ஆகியவற்றை எந்த காரணத்தை கொண்டும் தட்டிக் கழிக்க கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் செய்ய வேண்டும். இந்த குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.” என்று ஹரிஹரன் கூறினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஜெம் வீரமணி வழக்கு: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் - புகார்தாரர் ஹரிஹரன் பேட்டி
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk