760 முறை கடலில் இறங்கி.. சுனாமி விழுங்கிய மனைவியை தேடும் ஜப்பான் கணவர்.. காரணம் அந்த கடைசி மெசேஜ்

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️
760 முறை கடலில் இறங்கி.. சுனாமி விழுங்கிய மனைவியை தேடும் ஜப்பான் கணவர்.. காரணம் அந்த கடைசி மெசேஜ்

டோக்கியோ: காணாமல் போன மனைவியை, ஓரிரு நாட்கள் நம்பிக்கையுடன் தேடுவார்கள்.. ஓரிரு மாதங்களும் தேடுவார்கள்.. ஆனால் 15 ஆண்டுகள் கடந்த பிறகும், ஒவ்வொரு மாதமும் கடலுக்குள் இறங்கி தேடிக்கொண்டே இருக்க முடியுமா? ஜப்பானை சேர்ந்த யாசுவோ தகமாட்சு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். காரணம்.. கடைசியாக மனைவியிடம் இருந்து வந்த அந்த ஒரு மெசேஜ்..!!! ஜப்பானின் ஒனாகவா நகரத்தை சேர்ந்தவர்கள் யசுவோ தகமட்சு - யுகோ தம்பதி.. 2011ம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானை 9.0 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கியது. ஜப்பானில் சுனாமி தொடர்ந்து 20 மீட்டர் சுனாமி அலைகள், ஒனாகவா நகரை குப்புற சாய்த்து போட்டது.. அதில்தான், ஒரு வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த யுகோவும் சிக்கிக் கொண்டார்.. நிலைமை சீரியஸாவதை பார்த்து, யுகோவும் அவருடன் வேலை பார்த்தவர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு கட்டிடத்தின் மேல் மாடிக்கு ஓடினார்கள்.. ஆனால் அந்த கட்டிடமும் சுனாமியின் தாக்கத்தில் இடிந்து விழுந்தது. அதன்பிறகு யுகோவை காணவில்லை. ஆனால், சுனாமி தாக்குவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பு, தனது கணவர் யசுவோ தகமட்சுவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார் யுகோ.. அதில், "நீங்க பத்திரமா இருக்கீங்களா? எனக்கு வீட்டுக்கு வரணும் போல இருக்கு" என்று மெசேஜ் அனுப்பியிருந்தார்.. மனைவி அனுப்பிய கடைசி மெசேஜ் இதற்கு பிறகு, சில நாட்கள் கழித்து சுனாமி தாக்கிய பகுதியில் மீட்பு பணிகள் நடந்தன.. அப்போது இடிபாடுகளுக்கு நடுவில் யுகோவின் செல்போன் கண்டெடுக்கப்பட்டது.. அந்த செல்போனில், "சுனாமி ரொம்ப மோசமாக இருக்குங்க" என்று மெசேஜ் டைப் செய்துள்ளார்.. ஆனால், அதை கணவருக்கு அனுப்பவில்லை.. அதற்குள் சுனாமி அடித்து விட்டது போலும்.. செல்போனில் draftல் Save ஆகியிருந்த மனைவியின் இந்த வார்த்தைகள் சொற்கள் யசுவோவை மனதை துளைத்தெடுத்து விட்டது. இதனால் மனைவியை தேட ஆரம்பித்தார்.. அரசு நடத்திய நிலப்பரப்புத் தேடுதல் பணிகள் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டு விட்டன.. . ஆனால், மனைவியின் உடல்கூட கிடைக்காத நிலையில் யசுவோவால் தேடலை முடிக்க முடியவில்லை. வீட்டுக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டாரே, தன் மனைவியை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்ற உறுதியோடு தேட ஆரம்பித்தார். ஆழ்கடலில் மனைவி சிக்கியிருப்பார் என்பதால், தனது 56-வது வயதில் ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியையும் இதற்காகவே கற்றுக்கொண்டார். அதன்பிறகு, பசிபிக் பெருங்கடலின் குளிர்ந்த நீரில் மாதம் 2 முறை இறங்கித் தேடத் தொடங்கினார். இதுவரை 760-க்கும் மேற்பட்ட முறை கடலுக்குள் சென்று தேடிவிட்டார். அப்போதெல்லாம் ஆழ்கடலில் கிடக்கும் பழைய ஆல்பங்கள், உடைகள் போன்ற எத்தனையோ மனிதர்களின் அடையாளங்களை யசுவோ கண்டெடுத்துள்ளார். ஆனால், தனது மனைவி யுகோவின் ஒரு சின்ன தடயம்கூட அவருக்கு இன்னமும் கிடைக்கவில்லை. 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. யுகோவின் தடயம் இதுவரை கிடைக்கவில்லை. ஆனாலும், மாதத்திற்கு இரண்டு முறை கடலுக்குள் இறங்கி தனது தேடலை தொடர்ந்து வருகிறார் யாசுவோ. "கடலுக்குள் இருக்கும்போதுதான் என் மனைவிக்கு அருகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது" என்று அவர் கூறுகிறார். பதில் கிடைக்குமா என்பது தெரியவில்லை.. ஆனால், யுகோவை தேடும் அந்த பயணம் மட்டும் இன்னும் முடியவில்லை..!!

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை