பாலிவுட்டில் DDLJ.. கோலிவுட்டில் VTV.. 1,700 நாட்களை கடந்து சாதனை படைத்த சிம்பு படம்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Entertainment ✍️
பாலிவுட்டில் DDLJ.. கோலிவுட்டில் VTV.. 1,700 நாட்களை கடந்து சாதனை படைத்த சிம்பு படம்!

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி 2010இல் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. தமிழ் சினிமாவில் காதல் படங்களில் ஒரு தனி அடையாளத்தைப் பெற்று இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக மாறியது இந்தப் படம். படம் வெளியாகி 15 வருடங்கள் கடந்துவிட்டாலும் இப்போது ஒரு சாதனையைப் படைத்துள்ளது VTV. சினிமாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே ஹிட்டான படங்களை மறு வெளியீடு செய்யும் ரீ- ரிலீஸ் கலாசாரம் மிகப்பிரபலம். அப்படி கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகரில் உள்ள VR மால் திரையரங்கில் மறுவெளியீடு செய்யப்பட்டது VTV. ஆரம்பத்தில் ஒரு சிறப்பு ரீ-ரிலீஸாக தொடங்கிய இந்தப் பயணம், ரசிகர்களின் வரவேற்பால் நீண்ட திரையரங்கு ஓட்டமாக மாறியது. குறிப்பாக, தினமும் ஒரு காட்சி என இப்படம் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தது. 2024 அக்டோபர் மாதத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ VR மாலில் 1000 நாட்களை கடந்தது. அந்தச் சாதனையை படக்குழுவினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடினர். அதன்பிறகும் படத்தின் மீதான வரவேற்பு குறையாமல் தொடர்ந்த நிலையில், தற்போது 1,700 நாட்களை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காதல், பிரிவு, இசை, இளமை என படத்தின் பல அம்சங்கள் புதிய தலைமுறை ரசிகர்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. சிம்புவின் கார்த்திக், த்ரிஷாவின் ஜெஸ்ஸி கதாபாத்திரங்கள், கௌதம் மேனனின் காதல் கதை சொல்லும் பாணி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஆகியவை இப்படத்தின் நீண்ட பயணத்திற்கு முக்கியக் காரணங்களாக ரசிகர்களால் பார்க்கப்படுகின்றன. இந்திய சினிமாவின் முக்கியமான காதல் கதைகளில் ஒன்று ஷாரூக் - கஜோல் நடித்த `Dilwale Dulhania Le Jayenge' படம் மும்பையில் Maratha Mandir என்ற திரையரங்கில் 30 ஆண்டுகள் ஓடியது. ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படமோ கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஓடி வருகிறது. இந்தி சினிமாவுக்கு ஒரு DDLJ போல தமிழ் சினிமாவுக்கு VTV என்ற ரீதியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை