தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு, SIR நடவடிக்கையால் வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவலின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்ற ஆணையர்களுக்கு தகவல் தராமல் ரகசியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. SIR நடவடிக்கையால் வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவுகளும் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறி, தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரை நீக்கி, SIR நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என கோருகின்றன. இந்தசூழலில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பணிநீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சிவசேனா யுபிடி பிரிவின் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ள நிலையில் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் ஆகியவற்றின் சட்டமன்ற தேர்தல்களை ரத்து செய்து, வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைய வேண்டும் என்றும் உத்தவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையரை சிறையில் அடைக்க வேண்டும்! - உத்தவ் தாக்கரே
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk