இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக் காரணமாக தொழிற்சாலைகள், மின்சார பம்பு செட்டுகளை நம்பியுள்ள விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. மின்வெட்டால் கோவையில் மட்டும் உற்பத்தி பாதிப்பால் கடந்த நான்கு நாட்களில் ரூபாய் 40 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பிளாஸ்டிக், ஜவுளி, என்ஜினீயரிங் தொழிற்சாலைகளில் உற்பத்தி இழப்பு மற்றும் மூலப்பொருட்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளாதாகக் கூறப்படுகிறது. காலாண்டுத் தேர்வுகளுக்காகப் படிக்கும் மாணாக்கர்களும் படிக்க முடியாமல் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அரசுக்கு சொந்தமான அனல் மின்சார நிலையங்கள் அவற்றில் நிறுவப்பட்ட திறனை விட மிகக் குறைவாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதும், பொதுத்தொகுப்பிலிருந்து வாங்கப்படும் மின்சாரம் 2 ஆயிரம் மெகாவாட்டிலிருந்து 1500 மெகாவாட்டாக குறைக்கப்பட்டிருப்பதும், மின் பயன்பாடு அதிகரித்திருப்பதும் மின்தட்டுப்பாட்டிற்கும், மின் வெட்டிற்கும் காரணமென மின்சாரத்துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, மின்தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசின் பொதுத் தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டின் அதிகரித்துவரும் மின்சாரத் தேவைக்கு ஏற்ப, புதிய மின்நிலையங்களை உருவாக்க, தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் புதிய மின் நிலையங்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர் இருப்பு பாதிக்கும் கீழ் குறைந்தது: சம்பா சாகுபடி சாத்தியமா? உழவர்களுக்கு அரசின் அறிவுரை என்ன? – அன்புமணி கேள்வி? ஆசிய பெண்கள் கிரிக்கெட் போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு! GOLD RATE | தொடர்ந்து சரியும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன? பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“மின்வெட்டைப் போக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்” – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk