இந்திய மண்ணில் முதல் முறையாகப் பறந்த ஜப்பானிய போர் விமானங்கள்: சீனாவுக்கு மத்தியில் இது ஏன் முக்கியம்?

📅 📍 Tirunelveli, Tamil Nadu 🏷️ News ✍️
இந்திய மண்ணில் முதல் முறையாகப் பறந்த ஜப்பானிய போர் விமானங்கள்: சீனாவுக்கு மத்தியில் இது ஏன் முக்கியம்?

India Japan defense ties வெவ்வேறு நாடுகளின் ராணுவப் படைகள் ஒரு குறிக்கோளுக்காக இணைந்து திறம்படச் செயல்படும் திறனே 'இன்டர்ஆப்பரபிலிட்டி' (Interoperability) எனப்படும். இது தொழில்நுட்பம் மற்றும் செயல்முறை சார்ந்தது. இந்திய மண்ணில் முதல் முறையாக தரையிறங்கிய ஜப்பானிய போர் விமானங்கள்: இதன் பின்னணியும் முக்கியத்துவமும் என்ன? இந்தியா-ஜப்பான் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜப்பானின் போர் விமானங்கள் முதல் முறையாக இந்திய மண்ணில் நடைபெற்ற இருதரப்பு விமானப்படை பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இந்திய விமானப்படை மற்றும் ஜப்பான் வான் தற்காப்புப் படை இணைந்து நடத்திய ‘வீர் கார்டியன் 2026’ எனப்படும் இருதரப்பு விமானப்படை பயிற்சி, ராஜஸ்தானின் ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் செப்டம்பர் 9 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் பயிற்சியின் இரண்டாவது பதிப்பில், ஜப்பானின் மிட்சுபிஷி எஃப்-2ஏ (Mitsubishi F-2A) போர் விமானங்கள் பங்கேற்றன. ஜப்பான் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து, இத்தகைய இருதரப்பு பயிற்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். ஆங்கிலத்தில் வாசிக்க இந்தியாவும் ஜப்பானும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் கடல்சார் நலன்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலையில், இரு நாடுகளின் விமானப்படைகளும் இணைந்து செயல்படும் திறனை அதிகரிப்பதற்கு இந்தப் பயிற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. என்ன நடந்தது ‘வீர் கார்டியன்’ பயிற்சியில்? இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், இந்திய மற்றும் ஜப்பான் விமானப்படைகள் பல்வேறு சூழல்களில் இணைந்து செயல்படுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டன. இதில் கூட்டு ராணுவப் பணி திட்டமிடல், விமான இயக்கப் பயிற்சிகள், வான்வழி போர் நடவடிக்கைகள், போர் விமானங்களை இயக்கும் முறைகள், இரு நாடுகளின் செயல்பாட்டு நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்டவை இடம்பெற்றன. வெவ்வேறு வகையான போர் விமானங்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளைக் கொண்ட இரு விமானப்படைகளும் ஒரே நடவடிக்கையில் இணைந்து செயல்படுவதற்கான அனுபவத்தை இந்தப் பயிற்சி வழங்குகிறது. இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் மற்றும் ஜப்பான் வான் தற்காப்புப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் டேகேஹிரோ மொரிட்டா ஆகியோரும் பயிற்சியின் ஒரு பகுதியாக தேஜஸ் போர் விமானத்தில் பறந்தனர். ‘இணைந்து செயல்படும் திறன்’ ஏன் முக்கியம்? ராணுவத்தில் 'இன்டர்ஆப்பரபிலிட்டி' (Interoperability) எனப்படும் இணைந்து செயல்படும் திறன் என்பது, வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த படைகள், ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதைக் குறிக்கிறது. இதில் தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், இரு படைகளின் செயல்பாட்டு விதிமுறைகள், கட்டளைகள், தகவல் தொடர்பு முறைகள் மற்றும் பயிற்சி முறைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதும் முக்கியம். உதாரணமாக, அவசரமான வான்வழி நடவடிக்கையின்போது இரு நாடுகளின் விமானப்படைகளும் ஒரே மாதிரியான தகவல் தொடர்பு முறைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது ஒருங்கிணைப்பை எளிதாக்கும். இதுபோன்ற பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதன் மூலம், இரு நாடுகளின் வீரர்களிடையே ஒருவரின் செயல்பாட்டு முறையை மற்றவர் புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும். அதாவது, போர் விமானங்கள் ஒன்றாகப் பறப்பது மட்டுமல்ல; அவை தேவைப்படும் நேரத்தில் எவ்வாறு ஒரே திட்டத்தின் கீழ் செயல்பட வேண்டும் என்பதையும் பயிற்சி பெறுகின்றன. உக்ரைன் போரில் தெரிந்த பாடம் வெவ்வேறு நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் கிடைத்தாலும், அவை அனைத்தும் ஒன்றோடொன்று முழுமையாக இணைந்து செயல்பட முடியாத நிலை ஏற்படலாம். ரஷ்யா-உக்ரைன் போரின் தொடக்கக் காலத்தில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய பல்வேறு வகையான பீரங்கிகள் மற்றும் ஆயுத அமைப்புகளை உக்ரைன் பயன்படுத்தியது. அவற்றுக்கு இடையேயான தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பில் சிக்கல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. விமானப் போரிலும் இதே போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். ஒரு நாட்டின் விமானப்படை பயன்படுத்தும் ரேடார், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் வான்வழி கண்காணிப்பு அமைப்புகளை மற்றொரு நாட்டின் விமானங்கள் பயன்படுத்த முடியாதபோது, கூட்டு நடவடிக்கையின் திறன் பாதிக்கப்படலாம். இதனால், போர் தொடங்கிய பிறகு ஒருங்கிணைப்பை உருவாக்குவதைவிட, அமைதிக் காலத்திலேயே கூட்டுப் பயிற்சிகள் மூலம் இந்தத் திறனை உருவாக்குவது முக்கியமாகிறது. இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு உறவு இந்தியாவும் ஜப்பானும் விமானப்படை மட்டுமின்றி, தரைப்படை மற்றும் கடற்படை என மூன்று துறைகளிலும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. வீர் கார்டியன் விமானப்படைக்கான பயிற்சியாக இருக்கும் நிலையில், தரைப்படைகளுக்கு தர்மா கார்டியன், கடற்படைகளுக்கு ஜிமெக்ஸ் (JIMEX) எனப்படும் இந்தியா-ஜப்பான் கடற்படைப் பயிற்சி நடைபெறுகிறது. இரு நாடுகளின் பாதுகாப்பு உறவு கடந்த சுமார் இரண்டு தசாப்தங்களில் படிப்படியாக விரிவடைந்துள்ளது. 2008-ம் ஆண்டு வெளியான இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கூட்டு பிரகடனம், இந்த உறவில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. இதன் மூலம் இரு நாடுகளின் கடல்சார் பாதுகாப்பு நலன்கள் அங்கீகரிக்கப்பட்டு, கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு வலுவான அடித்தளம் உருவானது. இதன் பின்னர் ஜப்பான்-இந்தியா விஷன் 2025, வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் 2+2 பேச்சுவார்த்தை, பரஸ்பர தளவாட ஆதரவு ஒப்பந்தம் (ACSA) உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஏன் இந்தோ-பசிபிக் முக்கியம்? இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பை புரிந்துகொள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தையும் கவனிக்க வேண்டும். உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடன் தொடர்புடையது. உலக கடல் வர்த்தகத்தில் சுமார் 60 சதவீதம் இந்தப் பிராந்தியத்தின் வழியாக நடைபெறுகிறது. இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்திலும் இந்தப் பிராந்தியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல், ஜப்பானின் எரிசக்தி இறக்குமதிக்கான கடல் வழித்தடங்களிலும் இந்தியப் பெருங்கடல் முக்கியமானது. இந்தப் பின்னணியில், இந்தோ-பசிபிக் பிராந்தியம் ‘சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்’ ஆக இருக்க வேண்டும் என்பதில் இந்தியாவும் ஜப்பானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. சீனா ஏன் முக்கிய காரணியாக உள்ளது? இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிப்பதற்கு பிராந்திய பாதுகாப்பு சூழலும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாக, இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் அதிகரித்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. ஜப்பான் வெளியிட்டுள்ள 2022 தேசிய பாதுகாப்பு உத்தியில், சீனாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் அந்நாட்டின் ‘மிகப்பெரிய மூலோபாய சவால்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஜப்பான் பாதுகாப்பு வெள்ளை அறிக்கைகளிலும் இதே போன்ற கவலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியா மற்றும் ஜப்பான் தங்களுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை விமானப்படை, கடற்படை, தரைப்படை, தளவாட உதவி மற்றும் தகவல் பகிர்வு என பல்வேறு துறைகளில் விரிவுபடுத்தி வருகின்றன. பாதுகாப்பு உற்பத்தியிலும் புதிய ஒத்துழைப்பு இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு உறவு தற்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளைத் தாண்டி பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்கும் துறைக்கும் விரிவடைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம், 'யுனிகார்ன்' (UNICORN) எனப்படும் மேம்பட்ட ரேடியோ ஆண்டெனா அமைப்பை உருவாக்கி உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்தன. நோரா- 50 (NORA-50) என்றும் அழைக்கப்படும் இந்த அமைப்பு, இந்தியாவின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஜப்பானின் யோகோஹாமா ரப்பர், என்இசி மற்றும் சாம்பா கோக்யோ உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட உள்ளது. இந்த அமைப்பு ஜப்பான் கடற்படையின் மொகாமி வகை போர்க்கப்பல்களில் ஏற்கெனவே பயன்படுத்தப்படுகிறது. பல ஆண்டெனாக்களை ஒரே அமைப்பாக ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தத் தொழில்நுட்பம் போர்க்கப்பலின் ரேடாரில் தென்படும் அளவை குறைக்க உதவுகிறது. இதன் மூலம், இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு உறவு இனி கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு மட்டும் மட்டுப்படாமல், தொழில்நுட்பம், பாதுகாப்பு உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் தகவல் பகிர்வு என விரிவடைந்து வருவது தெரிகிறது. ஜோத்பூரில் ஜப்பான் போர் விமானங்கள் முதல் முறையாக இந்திய மண்ணில் பங்கேற்ற ‘வீர் கார்டியன் 2026’ பயிற்சி, இந்த நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை