Illegal power connection TN: சம்பந்தப்பட்ட நுகர்வோர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.3,77,500 சமாதானத் தொகையைச் செலுத்தி நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் காவல் துறை வழக்குகளைத் தவிர்த்துக் கொண்டனர். மின் திருட்டு தடுப்பு நடவடிக்கை: ரூ.1.01 கோடி இழப்பீடு விதித்த மின்வாரியம் (Image: AI) தமிழ்நாட்டில் மின்சார திருட்டு மற்றும் விதிமீறல்களை கண்டறியும் வகையில் ஆகஸ்ட் 16 முதல் 31-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் 79 மின்சார திருட்டு வழக்குகள் மற்றும் மேலும் 12 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சோதனையின்போது சம்பந்தப்பட்ட நுகர்வோரிடம் இருந்து மொத்தம் ரூ.97 லட்சத்து 74 ஆயிரத்து 656 கூடுதல் இழப்பீடு வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி மின் அமலாக்கப் பிரிவுகளின் கீழ் உள்ள அமலாக்க துணைப் பிரிவுகள் இந்த சோதனைகளை மேற்கொண்டன. சென்னை, அடையாறு, திருப்பூர், பல்லடம், கோவை தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சென்னை அமலாக்கப் பிரிவு ரூ.26.79 லட்சமும், கோவை ரூ.34.45 லட்சமும், மதுரை ரூ.16.84 லட்சமும், திருச்சி ரூ.19.67 லட்சமும் கூடுதல் இழப்பீடாக விதித்தன. மின்சார திருட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட நுகர்வோர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, நீதிமன்றம் அல்லது காவல் நிலையம் மூலம் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்வதற்கு பதிலாக ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்து 500 சமரசத் தொகை செலுத்த ஒப்புக்கொண்டதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் நிலையங்களில் குற்றப் புகார்கள் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார திருட்டை எப்படி புகார் செய்வது? உங்கள் பகுதியில் யாராவது மின்சாரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவது அல்லது மின்சார திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தால், மின் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கலாம். சென்னை: 9445857591 கோவை: 9443049456 மதுரை: 9443037508 திருச்சி: 9443329851 மின்சார திருட்டை தடுப்பதன் மூலம் மின் இழப்பையும், அதனால் ஏற்படும் கூடுதல் சுமையையும் குறைக்க முடியும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தமிழகத்தில் மின் திருட்டு: 79 வழக்குகள் பதிவு, ரூ.1.01 கோடி அபராதம் விதிப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk