த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்து 120 நாட்கள் ஆகின்றன. இந்த 120 நாட்களில் நாங்கள் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து உரையாற்றிய தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தேவையானவை சரியான நேரத்தில் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று பேசிய நிலையில், தற்போது த.வெ.க ஆட்சி குறித்து அவரின் கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சிராப்பள்ளியில் விஸ்வநாதன் தலைமையில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பல்கலைக்கழகப் பதிவாளர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாதன், கல்லூரிகளில் உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகள் தொடர்பாக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அவற்றைப் அரசு கவனத்தில் கொண்டுள்ளது. கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிதியைப் பயன்படுத்தி மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பேராசிரியர்களும் பிற பணியாளர்களும் பல கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். அவர்களின் குறைகளைப் படிப்படியாகத் தீர்ப்பதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து த.வெ.க ஆட்சி குறித்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன், தி.மு.க. தலைவர் அண்ணா முதல்வராக வந்தபோது, எங்களுக்கு 6 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று சட்டசபையில் கூறியிருந்தார். ஆனால் த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்து 120 நாட்கள் ஆகின்றன. இந்த 120 நாட்களில் நாங்கள் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். மிக முக்கியமாக, இந்த அரசு லஞ்சமும் ஊழலும் இல்லாத அரசு. தேவையானவை சரியான நேரத்தில் வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். ஒரு புதுப்பெண் கணவர் வீட்டுக்கு வருகிறார் என்றால், அவர் என்ன செய்கிறார்? எந்த பொருள் எங்கு உள்ளது என்று தெரிந்துகொள்ள சில காலம் ஆகும் என்று கூறியிருந்தார். இதனை கடுமையாக விமர்சித்துள்ள சி.பி.எம். கட்சியின் வாசுகி உமாநாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், புதிய ஆட்சிக்கு அவகாசம் வேண்டும் எனக் கேட்பது அவர்கள் விருப்பம். ஆனால் அஞ்சறை பெட்டியில் எது எங்கே உள்ளது என்பதை புது மனைவி தேட பல நாட்களாகும் என்று அமைச்சர் விஸ்வநாதன் சொல்வது மிகவும் கொடுமை. இருக்கிற ஒரு அஞ்சறைப் பெட்டியில் எதைத் தேட இத்தனை நாளாகும் எனப் புரியவில்லை..அது என்ன, புது மனைவி தான் தேட வேண்டுமா? அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்த கணவன் அந்தப் பக்கமே வர மாட்டாரா? வீட்டு வேலை பார்க்க.. சமைத்து போடத் தானா திருமணம்? உயர்கல்வித்துறையில் இருந்து கொண்டு இப்படி பேசுவது கல்விக்கு இழைக்கிற அநீதி இல்லையா? அஞ்சறை பெட்டியில் அரிசியை தேடுவது என்று வேறு அமைச்சர் பேசுகிறார்.. யார் வீட்டில் அரிசியை அஞ்சறை பெட்டியில் போடுவோம்? அமைச்சருக்கு அஞ்சறை பெட்டியும் தெரியவில்லை..பாலின நிகர்நிலையும் புரியவில்லை...too bad!! என்றும் அவர் விமர்சித்துள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
பெண்கள் மட்டும் தான் வீட்டு வேலை செய்யணுமா? த.வெ.க அரசு குறித்து அமைச்சரின் பேச்சுக்கு வாசுகி உமாநாத் விமர்சனம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk