மதுராந்தகம் இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தேர்தலுக்கு முன் முதலமைச்சர் விஜய் 10 மீட்டிங்கில் தான் பேசினார். திமுக தலைவர், திமுக “பொதுச்செயலாளர், பொருளாளரின் மகன் தோற்றுவிட்டனர். திமுக தலைவர்கள் முதல் 15 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். 1931-க்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் தீர்மானத்தை விஜய் கொண்டு வந்தார்; திமுக ஏன் கொண்டுவரவில்லை? ஜெம் வீரமணி மீது குற்றச்சாட்டில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து வழக்கை முடிக்க முயற்சித்தனர். ஆனால் ஒரு ஏடிஜிபி, காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுத்தவர் முதலமைச்சர் விஜய். வீரமணி வழக்கு பற்றி தவெக பேசக்கூடாதா? நாங்கள் பேசக்கூடாது என திமுக நீதிமன்றம் சென்றுள்ளது. திமுக ஆட்சியில் வீரமணி வழக்கு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? திமுக ஆட்சியில் ஏன் வழக்கு முடித்துவைக்கப்பட்டது என்பதற்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். அதன் பின்னணியில் அழுத்தம் கொடுத்தது யார்? பின்னணியில் நடந்த பணபரிவர்த்தனை யாருக்கு சென்றது? பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சமரசம் செய்வதே இல்லை. தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கி எடப்பாடியில் வெற்றிபெற்றவர் எடப்பாடி பழனிசாமி. காணாமல் போன தவெக வேட்பாளர் அருண் குமார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். மதுராந்தகம் தொகுதியில் தவெக பெறும் வெற்றி 25 ஆண்டுகளுக்கான வெற்றியாக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “திமுகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது” – முதலமைச்சர் விஜய்! மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும் – அமைச்சர் ஆனந்த்! வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே பட்டப்பகலில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – டிடிவி தினகரன் கண்டனம்! மதுராந்தகம் வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் – எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
திமுக ஆட்சியில் வீரமணி வழக்கு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk