“திமுகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது” – முதலமைச்சர் விஜய்!

📅 📍 Tiruppur, Tamil Nadu 🏷️ Politics ✍️
“திமுகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது” – முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக, திமுக, இடதுசாரிகள், அதிமுக மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. அந்தந்த கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அந்தந்த கட்சித் தலைவர்கள் மற்றும் நட்சத்திர போச்சாளர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிராசாரத்தில் பங்கேற்றிருக்கும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மதுராந்தகம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அப்போது முதலமைச்சர் விஜய் பேசுகையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் மதுராந்தகம் தொகுதி மக்களே வணக்கம்; நான் இன்று முதலமைச்சராக வரவில்லை; இடைத்தேர்தலுக்கு வாக்குக் கேட்டு உங்கள் வீட்டுப் பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக வந்துள்ளேன். உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா? லஞ்சத்தை ஒழிக்க, பெண்கள் பாதுகாப்புக்காக உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? திமுக நம்மை பற்றி நாள்தோறும் ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மறைமுகமாக அதிமுக உள்ளிட்டோர் ஆதரவாக இருக்கிறார்கள். திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிக்கும் போதே அவர்கள் முகமுடி கிழிந்துவிட்டது. நீங்கள் விசில் சின்னத்துக்கு வாக்களிப்பது, பெண்களை ஆபாசமாக பேசுபவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை. திமுகவுக்கு வாக்களித்தால் பெண்களை ஆபாசமாக பேசுவதற்கு ஆதரவளிப்பதற்கு சமம். மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் நம்ம வீட்டுப் பெண்ணான என்னுடைய தங்கை மரகதம் குமரவேல் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மரகதம் அவர்களை அவதூறாக பேசக்கூடிய ஆபாச சக்திகளுக்கு பதிலடியாக மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மரகதம் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். அதிமுக தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது. சாமானியர்களுடன் விஜய் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்ய முடியாது, மக்கள் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டார்கள் என்பதற்காக தடுக்கிறார்கள். ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டேன், தமிழக மக்களே ஏமாற்ற விடமாட்டேன், ஏமாற்றவும் மாட்டேன். அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி உங்களின் சொத்து கணக்குகள் எவ்வளவு? அரசியலுக்கு வந்த பிறகு உங்களின் சொத்த கணக்குகள் எவ்வளவு காண்பிக்க முடியுமா? ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே ஒன்று தீய சக்தி திமுக, தூய சக்தி தவெக. பேசு பேசு என்று சட்டப்பேரவையில் கூச்சிலிட்டவர்கள் பேசும்போது பேசிவிடாமல் இடையூறு அளிக்கிறார்கள். நான் சொல்லும் உண்மைகள் மக்களிடம் சேரக்கூடாது என்பதற்காக திமுகவினர் சட்டப்பேரவையில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். 50 ஆண்டு ஊழல்களை வெளிக்கொண்டு வந்து விட்டார் முதல்வர் விஜய் என்ற ஆத்திரத்தில் தற்போது உள்ள இளம் தலைமுறைகளுக்கு தெரிந்தால் தவறாக மாறிவிடும் என்பதற்காக மாற்றி அமைக்க யோசிப்பது திமுக. தமிழகம் கடனில் உள்ளது என டைம் கேட்டேன். நான் கடன் வாங்கினேன் கொள்ளை அடிக்க அல்ல மக்களுக்கு செலவு செய்ய. தமிழகத்தில் எல்லோரும் சேர்ந்து விசில் அடித்ததில் அனைவரும் காலி. பரந்தூர் விவிசாயம், நிலம், நீர் மேலாண்மை 5 வருடத்தில் நிறைவேற்ற வேண்டியதை அடுத்த மூன்று மாதங்களில் திறைவேற்றிய ஆட்சி தவெக. மனவேதனையை தாங்க முடியாமல் அதிமுகவில் வெற்றி பெற்றும் ராஜினாமா செய்து மீண்டும் தவெகவில் இணைந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண் திமுக எனக் கூறினால், அப்போது நான் பிறக்கவே இல்லை என்கிறார்கள். நான் எப்போது பிறந்தால் உங்களுக்கு என்ன? ஊழல் என்றால் ஆதாரத்தை காட்ட சொல்கிறார்கள். காட்டினால் நீதிமன்றத்தில் நிரூபியுங்கள் என்கிறார்கள். ஏன், எதற்கு கத்துறாங்கனு ஒன்னும் புரியவில்லை. நான் குழம்பிவிட்டேன். பேசு பேசு என்கிறார்கள், பேசினால் பேச விடாமல் இருக்க கத்துகிறார்கள். மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும் – அமைச்சர் ஆனந்த்! வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே பட்டப்பகலில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – டிடிவி தினகரன் கண்டனம்! மதுராந்தகம் வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் – எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை