“மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்!” – அன்புமணி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
“மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்!” – அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஒன்றாம் தேதி காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு முழுமையாக சென்றடையாத நிலையில், கல்லணையிலிருந்து காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் முறை வைத்து தண்ணீர் திறக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த ஆற்றின் பாசனப் பகுதியும் பயனடைய முடியாத நிலை உருவாகும் என்று விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர். காவிரியில் திறக்கப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்துடன் கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கிளை ஆறுகளில் நீரை முறை வைத்து திறக்கும் வழக்கம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கல்லணையிலிருந்து முதல் 6 நாள்கள் காவிரியிலும், அடுத்த 6 நாள்கள் வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றிலும் தண்ணீர் திறக்கப்படும். இது பயனுள்ள நடைமுறை என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் சென்றடைந்த பிறகு தான் முறை வைத்து தண்ணீர் திறப்பது நடைமுறைப்படுத்தப்படும். ஆனால், நடப்பாண்டில் காவிரி பாசனம் நடைபெறும் மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைமடை பாசனப் பகுதிகளுக்கும், வெண்ணாறு பாசனம் நடைபெறும் நாகை மாவட்டத்தின் கடைமடை பாசனப் பகுதிகளுக்கும் இன்னும் தண்ணீர் சென்று சேரவில்லை. இதற்கு காரணம் தொடக்கத்தில் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதமும், பின்னர் வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது தான். மேட்டூர் அணையிலிருந்து ஓரிரு வாரங்களாவது வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி முதல் 22 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் தான் பாசனக் கால்வாய்கள் வழியாக கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையும். ஆனால், இம்முறை மிகக் குறைவான அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டதால் கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீ ர் சென்று சேரவில்லை. இத்தகைய சூழலில் முறைப்பாசனத்தின் அடிப்படையில் காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 1500 கன அடியாகவும் குறைக்கப்பட்டு விட்டது. இதன்காரணமாக எந்த ஆற்றிலும் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர வாய்ப்பில்லை. அதனால் கடைமடை பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அனைத்து ஆறுகளிலும் இன்னும் இரு வாரங்களுக்கு முறை வைக்காமல் கூடுதல் நீர் திறக்கப்பட்டால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையும். அதன்பின் முறை வைத்து தண்ணீர் திறந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, முறைப்பாசனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அனைத்து ஆறுகளிலும் போதிய நீரை திறக்க அதிகாரிகளுக்கு அரசு ஆணையிட வேண்டும். இதற்கு வசதியாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவையும் குறைந்தது 10 நாள்களுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி என்ற அளவுக்கு அதிகரிக்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “குழந்தைகளை தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்” – நயினார் நாகேந்திரன்! “சென்னை மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்!” – அன்புமணி வண்டலூர் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: அப்படிபட்ட சம்பவம் நடைபெறவில்லை என காவல்துறை விளக்கம்! “High Profile Cases என்றால் ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா?” – எடப்பாடி பழனிசாமி Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை